பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்373

ததையும், உணர்ந்து -அறிந்திருந்து, நீ-, அவற்கு இரங்கல்-
அம்மணிமான்இறந்ததற்கு வருத்தப்படாதே;(எ - று.)

     'மணிமானைக்கொன்றவனைப்பழிக்குப்பழி வாங்க வேண்டாவோ?'
என்று எழும் வினாவுக்குஉருத்திரசேனன் இதனால்விடை கூறுகிறான்.
இதிற் கூறிய சாபவரலாறு:-குசவதியென்னும்பரிசுத்தபூமியில் தேவர்கள்
செய்யும் ஆலோசனையின்பொருட்டுக்குபேரன் அனேகயக்ஷர்களுடன்
வானவழியாய்ச் செல்லுகையில், செல்லும் வழியிடையிலே அந்தக்குபேரனது
சேனைத்தலைவனானமணிமான்உமிழ்ந்த எச்சில் யமுனாநதிதீரத்திலே
தவஞ் செய்துகொண்டிருந்த அகத்திய மகாமுனிவர்சிரசின்மீது விழ, முனிவர்
கடுங்கோபங்கொண்டு குபேரனைநோக்கி 'அரசனானஉன்முன்னிலையில்
இவ்விழி தொழில்செய்த உனதுநண்பனானஇக்கொடியவன்
தனதுசேனையுடனேஒருமனிதனால்இறப்பானாக' என்றும்,
'உன்னைச்சேர்ந்தவன்இக்குற்றஞ் செய்தலால், நீ அச்சோகத்தை ஏற்றுப்
பின்புஅம்மனிதனைக்கண்டுதீவினைநீங்குவாய்' என்றும்
சாபமருளினரென்பது, வியாசபாரதத்திற் கண்டது.

     வீமசேனனாற்கொல்லப்பட்டடோர்தவிர எஞ்சியவீரர்கள் குபேரனிடம்
வீமனது செய்திதெரிவிக்க, குபேரன் சினந்து பரிவாரங்களுடன்
பாண்டவரிருக்குமிடத்துவந்து, பாண்டவரைக் கண்டதும் சினமடங்கினனாக,
தருமன் முதலிய மூவரும் குபேரனைவணங்கி அபராத க்ஷாமணஞ்
செய்துகொள்ள,வீமன்மாத்திரம் போர்செய்யச்சித்தனாய்நின்றான்:அப்போது
குபேரன் தருமனைநோக்கி'வீமன்மீதுசினங் கொள்ளற்க:காலத்தினால்
மணிமானாதியஇவர்கள் கொலையுண்டனர்'என்றும், வீமனைநோக்கி
'ஐயா!நீ செய்த சாகசச்செயலுக்காக நான் மனத்தில் ஒன்றுங்
கொள்ளவில்லை:உன்வீரத்தினால்மகிழ்ச்சியுற்றேன்:சாபத்தினின்று
இப்போது தான் விடுபட்டேன்'என்றுங் கூறிப் பாண்டவர்க்குச்
சிலஇதங்களைச்சொல்லி அளகைக்குச் சென்றான்:குபேரனேவலின்படியே
பாண்டவர்களும் குபேரபவனங்களில் யட்சசாதிகளாற் பூசிக்கப்பட்டு
அன்றிரவு தங்கித் தம்மிடத்துக்குச்சென்றன ரென்று முதனூல் கூறும். (591)

90.அருத்தியேதென்றவற் கருளியையவிங்கு
இருத்தியேல்வாழ்வுமின் னுயிருமெய்தலாம்
திருத்தியசேனையுநீயுஞ்சென்றுமேல்
உருத்தியேலுறுபய னொன்றுமில்லையால்.

     (இ - ள்.)ஐய-தந்தையே! அருத்தி ஏது என்று - விரும்பிய பொருள்
யாது என்று வினாவியறிந்து,அவற்கு அருளி - (அந்தப் பொருளை)
அம்மனிதனுக்கு அன்போடுகொடுத்து, இங்குஇருத்திஏல் -
இவ்விடத்தில்(சாந்தமாய்) இருப்பாயானால்,வாழ்வுஉம்-
செல்வவாழ்க்கையையும், இன்உயிர்உம் -இனியபிராணனையும்,எய்தல்
ஆம்-அடைந்திருத்தல்கூடும் [அவனால்உனக்கு ஒன்றும் அபாயமுண்டாகா
தென்றபடி];(இப்படியல்லாமல்), திருத்திய சேனைஉம்நீஉம் சென்று-
சீர்திருத்தப்பட்டுள்ள உனதுசேனையும்நீயுங் கூடிப்போய்,