95.-இதுவும்,மேற்கவியும்-தருமன் குபேரனைத்துதிப்பன. அனகனேயமலனே யளகைவேந்தனே தனதனேசங்கரன் றன்சகாயனே புனிதனேகுபேரனே புலத்தியன்குல செனகனேசெல்வனே தேவதேவனே. |
மூன்று கவிகள் - ஒருதொடர். (இ - ள்.)அனகனே-பாவமில்லாதவனே! அமலனே- குற்றமில்லாதவனே! அளகை வேந்தனே - அளகாபுரியரசனே தனதனே- வேண்டுவார்க்கு வேண்டிய) செல்வத்தைக் கொடுப்பவனே! சங்கரன் தன்சகாயனே-சிவனதுதோழனே! புனிதனே- பரிசுத்தகுணமுள்ளவனே! குபேரனே-! புலத்தியன் குலம் செனகனே - புலஸ்தியமகா முனிவருடையகுலத்திற் பிறந்தவனே! செல்வனே - எல்லாச்செல்வங்களையும் உடையவனே! தேவதேவனே - தேவர்களுக்குத் தலைவனே!(எ - று.) படைத்தற்றொழிலில்தனக்கு உதவியாம்படி பிரமதேவனாற் சிருஷ்டிக்கப்பட்ட உபப்பிரமர்கள் ஒன்பதின்மருள் ஒருவராகிய புலஸ்தியப்பிரசாபதியினது குமாரர் விச்சிரவசு;அவரதுபுத்திரன் குபேரனென்க. செனகன் - ஐநகன்; வடசொல். ஒருகால்பார்வதிமீதுகண் சென்று அதனால்அக்கண் மழுங்கியதனால்,குபேரன் என்று பெயர்: இழிவான, பேரன்-உடலுள்ளவனென்க. (597) 96. | வெறுப்பதோவிளைந்ததுமிகையதாயினும் மறுப்பதோவென்மொழி மாறுகொண்டெதிர் செறுப்பதோவிளையவர்செய்ததீமைகள் பொறுப்பதேபெரும்புகழ் புனிதமூர்த்தியே. |
(இ-ள்.) புனிதமூர்த்தியே-பரிசுத்தமான வடிவமுடையவனே! வெறுப்பதுஓ-(நீ) வெறுக்கத்தக்கசெயலோ, விளைந்தது-(என்தம்பியால்) நேர்ந்துவிட்டது;அது-,மிகை ஆயின்உம்-குற்றமானாலும்,என் மொழி- எனது(வேண்டுகோள்) வார்த்தையை, மறுப்பதுஓ-(நீ ஏற்றுக்கொள்ளாது) விலக்குவது தகுதியோ?இளையவர்செய்த தீமைகள் - சிறியவர் செய்த குற்றங்களுக்காக, மாறு கொண்டு - பகைமைகொண்டு, எதிர் - (அவற்றுக்கு) எதிராக, செறுப்பதுஓ-(அவர்களை)அழிப்பது தகுதியோ?பொறுப்பதுஏ - (அவற்றைப்) பொறுத்திடுவதே, பெரு புகழ்-மிகுந்த கீர்த்திக்குக் காரணமாம்; இளையவர்செய்ததீமைகள் - மத்திமதீபம். ஓகாரங்கள் மூன்றனுள், முன்னது - இழிவுசிறப்பு;பின்னவை-எதிர்மறை. (598) 97.-தருமனுடைய துதியினால்சினம்மாறிக் குபேரன் அவனையுபசரித்தல். எனவிவனிவைபகர்ந் திசையவேத்தலும் முனிவொடுவயிரமு முரணுமாறியே மனனுறமகிழ்ந்தெதிர் கொண்டுமார்புறத் தனதனுந்தருமனைத்தழீஇக்கொண்டானரோ. |
|