பக்கம் எண் :

380பாரதம்ஆரணிய பருவம்

காலகேயர்வதை. உருநலந்திகழு மதனராசனென வொருவனெய்திட
என்றும்பாடம்.

    இதுமுதல்ஒன்பதுகவிகள்-பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ் சீர்கள்
மாச்சீர்களும், ஏழாவது விளச்சீரும், மற்றவை விளங்காய்ச்சீர்களுமாகிய
கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்.         (605)

104.அந்தவிண்ணுலகினின்றுநின்றுணைவமைரர்சூழவர
                                 நாளையே,
இந்தமண்ணுலகுநீயும்வாழ்வுபெற விந்திரன்றனுடனெய்
                                   துமால்,
எந்தமண்ணுலகுநின்னதாகுமிடருற்றிரங்கலெனமகிழ்
                                   வினிற்,
கந்தவண்ணமலருங்கொடுத்துவிடைநல்கினானளகை
                                 காவலன்.

     (இ - ள்.)'நின்துணைவன்-உனதுதம்பியான அவ்வருச்சுனன், அந்த
விண் உலகினின்று - அத்தேவலோகத்திலிருந்து, அமரர் சூழ வர-தேவர்கள்
சுற்றிலும் உடன்வரும்படி, நாளைஏ-நாளைத்தினமே [மிகவிரைவிலே],இந்த
மண் உலகுஉம் நீஉம் வாழ்வு பெற-இந்தப்பூலோகமும் நீயும் சிறந்த
வாழ்க்கையடையும்படி, இந்திரன்தனுடன்-தேவேந்திரனுடனே, எய்தும்-
வருவான்;ஆல்-ஆதலால், எந்த மண் உலகுஉம் - பூலோகம் முழுவதும்,
நின்னது ஆகும் - (பின்பு) உன்னுடையதாய்விடும்;இடர் உற்று இரங்கல் -
துன்பமடைந்து வருந்தாதே,'என - என்று (தருமனைநோக்கிக்)கூறி,
அளகை காவலன் - அளகாபுரிக்கு அரசனானகுபேரன், மகிழ்வினின்-
மனமகிழ்ச்சியுடனே, கந்தம் வண்ணம் மலர்உம் கொடுத்து- வாசனையையும்
நிறத்தையுமுடைய அத்தாமரைப்பூவையும் (அவனுக்குக்) கொடுத்து, விடை
நல்கினான்-(மீண்டுசெல்லுதற்கு)அனுமதியுங் கொடுத்தான்;(எ-று.)

     துரியோதனனோடுசேர்ந்த துஷ்டர்கள்பலரையும் அழித்து நல்
லவர்களையோம்புதலால், 'இந்தமண்ணுலகும்நீயும்வாழ்வுபெற'
எனப்பட்டது.  மலரும், உம்மை-உயர்வுசிறப்பு;எச்சப்பொருளதுயாம். (606)

105.-என்தம்பிஇளமையாற்செய்த குற்றங்களைப்
பொறுப்பாயென்றுகுபேரனிடம் வேண்டிக்கொண்டு
தருமன்புறப்பட்டுப்போதல்.

ஐயநின்னையறியாமனின்னகரிலணுகினன்சிறுவனாதலின்,
செய்ததீமைகள்பொறுத்தியொன்றுநனிதிருவுளத்திடை
                                 கொளேலெனா,
மொய்கொடாமமுடியுறவணங்கிமுடி மன்னர்மன்னனிளை
                                   யோரெடும்,
மைதவழ்ந்துலவுமாடநீள்புரிசை ஞாயில்வாயிறனிலெய்தினான்.

     (இ-ள்.)'ஐய- தலைவனே!நின்னைஅறியாமல்-உன்பெருமையை
அறியாமல், சிறுவன் - இளையவனானவீமன், நின் நகரில் அணுகினன்-
உனது அளகாபுரியில் வந்துசேர்ந்தான்;ஆதலின் - ஆகையினால்,செய்த
தீமைகள் பொறுத்தி-(அவன்)செய்த குற்றங்களைப்பொறுத்தருள்வாய்;திரு
உளத்திடை ஒன்றுஉம் நனி