வன்போலப்பெருந்திருத்தி யடைந்து தான் வந்த காரணத்தைக் கூறிவிட்டுத் தன்தபோவனத்துக்கு மீண்ட செய்தியைக் கூறும் பகுதி யென்க. 1.-துருவாசமுனிவன்பாண்டவரிருந்த காட்டில் வந்தடைதல். சாபத் தாலுஞ்சாபமொழி தன்னால்வளருந் தவத்தாலும், கோ பத்தாலும் பேர்படைத்த கொடிய முனிவன் றுருவாசன், தீபத் தான்மெய்வகுத்தனையான்றிகழ்பன் முனிவர் புடைசூழ, ஆபத் தால் வந்தடைந்தவர்போ லடைந்தா னந்த வடவியின்வாய். |
(இ - ள்.) சாபத்தால்உம் - சாபத்தைக் கொடுப்பதனாலும், சாபம் மொழிதன்னால் வளரும் தவத்தால்உம் - (அங்ஙனம் பிறருக்குக் கொடுக்கின்ற) சாபமொழியினாலே வளர்கின்ற தவத்தினாலும், கோபத்தால்உம்-கோபத்தினாலும், பேர் படைத்த-பிரசித்திபெற்ற, கொடிய- கொடுமையையுடைய [கண்டவர் அஞ்சத்தக்க], முனிவன்-இருடியும், தீபத்தால் மெய் வகுத்து அனையான்-தீபத்தைக்கொண்டு உடம்பைச் செய்திட்டாற்போல ஒளிவடிவாய் விளங்குபவனுமாகிய, துருவாசன்-,-திகழ் பல் முனிவர் புடை சூழ-(தன்னைப்போலவே பிரமதேஜசினால்) விளங்குகிற பல இருடியர் (தன்னைச்) சுற்றிவர, ஆபத்தால்-பெருந்தீங்கு நேரிட்டதனால், வந்து அடைந்தவர்போல்-வந்து சேர்ந்தவர்போல, அந்த அடவியின் வாய்- அந்தக் காட்டிலே, அடைந்தான்-(பாண்டவரை) வந்து சேர்ந்தான்; (எ-று.) துருவாசமுனிவன் செந்நிறமுள்ளவ னாதலால், 'தீபத்தால் மெய் வகுத்தனையான்' என்றார்: இனி, கோபாக்கினி சொலிக்கின்ற மேனியையுடைமையால் இவ்வாறு கூறியது எனினுமாம். பன் முனிவர் என்றதை, முதனூலிற்கு ஏற்ப, சீடரான பதினாயிரம் முனிவரைக் காட்டுமென்னலாம். மிக்க பசியினால் விரைந்துவந்தானென்பார் 'ஆபத்தால்வந்தடைந்தவர்போல் அடைந்தான்' என்றார். மற்றைமுனிவர்க்குப் பிறரைச்சபித்தலால் தவங் குறையும்: துருவாசமுனிவனோசபிக்கச்சபிக்கத் தவம்வளருமாறு வரம் பெற்றுள்ளதனால் பெருங்கோபமுடையனாய்ச்சபிக்கும்இயல்புள்ளவ னென்ப. இதுமுதல்இச்சருக்கமுடியுமளவும் பதினேழுகவிகள்-பெரும்பாலும் மூன்று ஆறாஞ்சீர்கள்காய்ச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிவந்த கழிநெடிலடி நான்குகொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள். 2.-பாண்டவர் வந்ததுருவாசமுனிவரின் அடிபணிந்து முகமன்கூற, அன்னான்அவர்கட்கு ஆசிகூறுதல். அருமாதவப்பேறானதெமக்கம்மாவென்னச்செம்மாந்து குருமாமரபோரைவருந்தங் குஞ்சித்தலைமேலடிவைத்தெம் பெருமானிங்கேயெழுந்தருளப் பெற்றேமென்னப்பெரிதுவந்தங்கு அருமாமுனியைப்பூசித்தா ரவனும்புகன்றானாசியரோ. |
|