பக்கம் எண் :

துருவாசமுனிச்சருக்கம்393

என்றார். 'முன்னேநுகர்ந்தாம்'என்று திரௌபதியும், 'மேவாருரைக்க
விவன்வந்ததல்லாற் பிறிதுவேறில்லை'என்று வீமசேனனும்,
'சுனைநீர்படிந்துவரச்சொல்லிக்கருதிநாம் பிறபுரியுமது கடனோ?'என்று
விசயனும் கூறியதுபோல இந்தத்தருமன் ஒருவர்மீதும் குற்றங்
கூறவில்லையென்பார்'தப்போதாமல்'என்றார்.                (623)

10.-ஸ்ரீக்ருஷ்ணன்வினவ, திரௌபதி சோற்றுப்பருக்கை
யொன்றிருந்ததைஅப்பிரான்கையிற்கொடுத்தல்.

திருக்கண்கருணைபொழியவருந்திருமாலவரைத்தேற்றிமுதல்
அருக்கனுதவும்பாண்டத்தி னன்னமுளதோவெனவினவ
முருக்கினிதழைக்கருக்குவிக்கு முறுவற்செவ்வாய்த்திரௌபதியும்
இருக்குமுறையோரன்னங்கண்டெடுத்தாள்கொடுத்தாளிறைவன்கை

     (இ - ள்.)திரு கண்-(தன்னுடைய) அழகிய கண்களினின்று, கருணை
பொழிய - கருணைவெளிப்பட்டுச்சொரிய,வரும்-(அப்போது) வந்த,
திருமால்-ஸ்ரீக்கிருஷ்ணன், அவரை - அந்தப்பாண்டவரை, தேற்றி-துயரம்
மாற்றி,-'முதல்- முன்பு [ஆரணியவாசஞ்செய்ய ஆரம்பித்த காலத்தில்],
அருக்கன்-சூரியபகவான், உதவும்-உதவிய, பாண்டத்தின்-அட்சய
பாண்டத்திலே, அன்னம் உளதுஓ-சோறு உள்ளதா?'என வினவ-,-
முருக்கின் இதழை கருக்குவிக்கும் செம்முறுவல் வாய் திரௌபதிஉம்-
(செந்நிறமுள்ள) பலாசமலரையும் கருநிறமுள்ளதென்று சொல்லுமாறு
மிகச்சிவந்துள்ளமந்தகாசத்தோடு கூடிய வாயையுடையதிரௌபதியும்,
இருக்கும் முறை ஓர் அன்னம் கண்டு - ஒட்டிக்கொண்டிருக்கும் முறையில்
ஒரு சோற்றுப்பருக்கையிருந்ததுகண்டு, எடுத்தாள்-எடுத்து, இறைவன்
கைகொடுத்தாள்-கடவுளமிசமான அந்த ஸ்ரீக்ருஷ்ணன் கையிற்கொடுத்தாள்;
(எ-று.)-அன்னம் என்பதற்கு - உண்ணுதற்கு உரியபொருள் எனப்பொருள்
கொண்டு,முதனூலுக்கு ஏற்பக் கீரைத்துணுக்கையைக் காட்டுமென்றலும்
உண்டு.                                              (642)

11.-அந்தச்சோற்றுப்பருக்கையை ஸ்ரீக்ருஷ்ணன்
தன்வாயிற்கொள்ள,நீராடச்சென்ற முனிவர்
உண்டவர்போலத்திருப்தியடைதல்.

அந்தவன்னஞ்சதுர்மறையு மன்னமாகியருள்செய்தோன்
முந்தவுலகமுழுதுண்ட முளரியிதழினிடைவைத்தான்
வந்துசுனையில்வந்தனைசெய்மறையோரெவரும்வாரிதிமுன்
தந்தவமுதுண்டவர்போலத் தாபந்தணிந்துதண்ணென்றார்.

     (இ - ள்.)அந்த அன்னம்-அந்தச் சோற்றுப்பருக்கை, சதுர் மறைஉம்-
நான்குவேதங்களையும்,அன்னம் ஆகி - அன்னப்பறவை வடிவமாய்,
அருள்செய்தோன்-அருளிச்செய்தவனாகியதிருமாலினமிசமாகிய அந்த
ஸ்ரீக்ருஷ்ணன்,-முந்த - முன்பு [பிரளயகாலத்தில்],உலகம் முழுது உண்ட-
உலகங்களையெல்லாம்உட்கொண்டருளிய, முளரி இதழின்இடை -
தாமரையிதழ்போன்ற (தனது)