(இ-ள்.)'உலகம்முழுதுஉம்-உலகம்முழுவதையும்,பரம்கொண்டு- தாங்குந்தொழிலைமேற்கொண்டு, இசை பரப்பி - கீர்த்தியை (உலக முழுவதிலும்) பரவச்செய்து, புரப்பான்-பாதுகாக்குந்தன்மைவாய்தவனான, பாண்டு எனும் - பாண்டுஎன்கிற, உரங்கொண்டு உயர்ந்தோன்- வலிமையினால்மேம்பட்டவனானஅரசன், அளித்தருளும் - பெற்ற, உரவோய்-வலிமையுள்ளவனே! நீ-, இங்கு - இப்போது, உனக்குஆன- உனக்குவிருப்பமான, வரம் - வரத்தை,கொண்டிடுக-(என்னிடம்) பெற்றுக்கொள்க,'என - என்றுசொல்ல,-வளையாசெங்கோலான் - நீதிநெறிதவறாதசெங்கோலையுடையவனானதருமபுத்திரன், முனியை- துருவாசமுனிவனை,வணங்கி-, 'பகைத்தோர்-(எம்மைப்)பகைத்தவரான துரியோதனாதியரின்,மாற்றங்கள்-வார்த்தைகளை,திரம்கொண்டு- உறுதியாகக்கொண்டு, ஒன்றுஉம் கொள்ளாதி-ஒருசிறிதும் (எம்மீது) மாறுபாடு கொள்ளாதிருப்பாய்,'என்றான்- என்று வரம்வேண்டினான்;(எ-று.) வளையாச்செங்கோலானாதலால்,துரியோதனாதியர்அழியுமாறு வரம் வேண்டினானில்லையென்க. திரங்கொண்டென்றுங் கேளாதி என்றும்பாடம். (630) 17.-துருவாசமுனிவனும்ஸ்ரீக்ருஷ்ணனும் தந்தமிடத்துக்குச்செல்ல, தருமன் தம்பியரோடும் திரௌபதியோடும்வனத்துத் தனியிருத்தல். அன்னோன்மொழிகேட்டம்முனியுமடைந்தான்றன்பேரருந்தவக்கான் முன்னோனானமுகுந்தனுந்தன்முந்நீர்த்துவரைநகர்புக்கான் பின்னோர்வணங்கப்பேரழலிற்பிறந்தாண்மகிழப்பேரருட்குத் தன்னோடொருவர்நிகரில்லானிருந்தானந்தத்தனிவனத்தே. |
(இ - ள்.)அன்னோன்மொழி கேட்டு - அந்தப் தருமபுத்திரனுடைய வார்த்தையைக் கேட்டு, அ முனிஉம்-அந்தத்துருவாசமுனிவனும், தன் பேர் அருந் தவம் கான்-தனக்குரிய பெரிய அரியதவத்திற்குஉரியகாட்டை, அடைந்தான்-;முன்னோன்ஆன முகுந்தன் உம்-(யாவர்க்கும்) முற்பட்டவனானதிருமாலினமிசமான ஸ்ரீக்ருஷ்ணனும், தன்-தன்னுடைய, முந்நீர் துவரைநகர் - கடலினாற்சூழப்பட்டுள்ளதுவாரகாபுரியை, புக்கான்- அடைந்தான்;பேர் அருட்கு தன்னோடுஒருவர்நிகர் இல்லான்- மிக்ககருணைக்குத்தன்னோடுஒருத்தரும்ஒப்பானவரைப் பெறாதவனான தருமன்,பின்னோர்வணங்க-தம்பிமார் வணங்கவும், பேர் அழலில் பிறந்தாள்-பெருமைபெற்றயாகாக்கினியிலே தோன்றினவளான திரௌபதி, மகிழ-மகிழ்ச்சியடையவும், அந்த தனிவனத்தே-ஒப்பற்றஅந்தவனத்திலே, இருந்தான்-தங்கியிருந்தான்;(எ-று.) வந்தவர்கள்சென்றிட்டதனால்வனத்தே தனியிருந்தானென்றாரெனினுமாம். (631) துருவாசமுனிச்சருக்கம்முற்றிற்று. ----- |