9.-'உனக்குஇடர்வரயாம் பிழைப்போமோ?'என்று தருமன் கூறுதல். வேந்தனம் மாற்றங் கேட்டு வில்வலான் றன்னைநோக்கி ஏந்திழைசொல்ல வோரா தினியவிக் கனியின் றீர்ந்தாய் மாந்தரின் மடங்க லொப்பாய் வருத்தநீ யுழக்க யாமோ[கான். பேர்ந்துபோய்ப் பிழைப்போ மென்றான்பிதாவினுங் கருணைமிக் |
(இ-ள்.)பிதாவின்உம் கருணைமிக்கான்-பெற்றதந்தையைக் காட்டிலும் கருணைமிக்குள்ளவனாகிய,வேந்தன்-தருமபுத்திரராசன்,-அ மாற்றம் கேட்டு- (அருச்சுனன் சொன்ன) அந்தவார்த்தையைக் கேட்டு, வில்வலான்தன்னை நோக்கி - வில்லில்வல்லவனானஅருச்சுனனைப்பார்த்து, 'மாந்தரின் மடங்கல் ஒப்பாய்-மனிதருக்குள் சிங்கம் போலச்சிறந்தவனே! ஏந்துஇழை- தரித்தபூணையுடையதிரௌபதி, சொல்ல-, ஓராது-(நாம் இக் கனியை வீழ்த்தினால்என்ன விளையும்என்று) ஆராயாமல், இன்று-, இனிய இ கனி-இனிய இந்தநெல்லிக்கனியை, ஈர்ந்தாய்-வீழ்த்திட்டாய்;(இதன்பயனாக), நீ-, வருத்தம் உழக்க - (முனிவன் சாபத்தாலான) வருத்தத்தை யனுபவிக்க, யாம்-நாங்கள், பேர்ந்து போய்-(உன்னை)விட்டுப்போய், பிழைப்போம்ஓ-?' என்றான்- என்றுகூறினான்;(எ - று.) புத்திரனிடத்துப் பிதா செய்யும் கருணையைவிடமிக்ககருணையைச் செய்பவ னென்பது 'பிதாவினுங்கருணைமிக்கான்'என்பதன் கருத்து. (640) 10.-'முனிவன்சினத்தைப்போக்கிநாமும் மேம்படவேணு மானால், இன்னமும்க்ருஷ்ணனைநினைப்பாய்'என்று நகுலன் கூறுதல். அம்முனிவந்தவாபத் ததனினுங்கொடிதிக்கானத்து இம்முனியுணவுகொண்ட தெனவெரீஇநகுலன்றானும் வெம்முனிவகற்றிநாமும் மேம்படவேண்டினின்னம் தெம்முனிதிகிரியானைச்சிந்தனைசெய்தியென்றான். |
(இ - ள்.)'அமுனி - அந்தத்துருவாசமுனிவன், வந்த- (உணவுண்ணவேண்டி) வந்ததனால்விளைவதாயிருந்த,ஆபத்துஅதனின் உம்-ஆபத்தைக்காட்டிலும், இகானத்து-இந்தக்காட்டிலே, இமுனி-இந்த அமித்திரமுனிவனுடைய, உணவு-உண்ணும்பண்டமான நெல்லிக்கனியை, கொண்டது-கவர்ந்தது, கொடிது-கொடியது [மிக்கதீமையைவிளைப்பது], என-என்றுசொல்லி, வெரீஇ - அச்சங்கொண்டு,-நகுலன் தான்உம் - நகுலனும்-'வெம்முனிவு-கொடிய (இருடியின்)கோபத்தை, அகற்றி-போக்கி, நாம்உம்-நாமும்,மேம்பட வேண்டின்-மேன்மைப்பட வேண்டினால்,இன்னம்- இன்னமும், தெம்முனி திகிரியானை- பகைவரைக் கோபித்து அடக்கவல்ல சக்கராயுதத்தையுடைய க்ருஷ்ணனை,சிந்தனைசெய்தி - (இங்குவருமாறு) கருதுவாய்,'என்றான்-என்றுகூறினான்;(எ-று.) |