லன்றி நினைத்தலாற்குற்றமில்லையென்பது துவாபரயுகதருமமாதலாலென்பர். நம்புதற்குளதோ என்றும் பாடம்.இச்செய்யுளின்கருத்தையொட்டியவடமொழிச் சுலோகம்-"பஞ்சமே பதயஸ்ஸந்தி-மஹயம் ஷஷ்டோபி ரோசதே| புருஷாணா மபாவேந-ஸர்வாநார்ய:பதிவ்ரதா."என்பது. கன்னடபாரதம், திரௌபதி தன்னுள்ளக்கிடக்கையென்று "ஸுந்தரம்புருஷம்த்ரஷ்ட்வா - பிதரம்ப்ராதரம் ஸு தம் | யோநிர்த்தவதிநாரீணாம்- ஸ்த்யம்ப்ரூமீஹகேஸவ"என்பதைச் சொல்ல, அப்போது அந்தக்கனி மேலேசெல்லாததாக, 'நங்காய்! உன்மனத்திலுள்ளதை யொளியாமற் கூறுவாய்'என்று ஸ்ரீக்ருஷ்ணன்சொல்ல, பிறகு, "பஞ்சமேபதய:"என்ற இதைக் கூறினாளென்னும். (652) 22.-கவிக்கூற்று: க்ருஷ்ணன்கேட்கஅறுவரும் உண்மை யுரைத்ததால் பறித்தகனி முறைமுறையாகக் கொம்பை யணைந்ததெனல். அறுவருமிவ்வாறுண்மையேயுரைத்தா ராதலானிரைநிரைப் படியே, மறுவணிதுளபமார்பனுங்கேட்டான் மாமுனிக்கோதனமான, நிரைசுவையமுதநெல்லியின்கனியுநின்றகொம்பணைந்த தாலென்றும், பெறுமுறைபெறுமேயுள்ளவாறுரைத்தாற்பெரியவர்பேசும் வாசகமே. |
(இ-ள்.) மறுஅணி-ஸ்ரீவத்ஸமென்கிற மறுவையணிந்த, துன்பம்- துளசிமாலையைப்பூண்ட,மார்பன்உம்-மார்பையுடைய ஸ்ரீக்ருஷ்ணனும், கேட்டான்-(மனத்திலுள்ளதை உள்ளபடியே கூறுமாறு) வினாவினான்: அறுவர்உம்-பஞ்சபாண்டவரும் திரௌபதியும், இ ஆறு-இவ்வகையாக [கீழ்க்கூறியபடி],உண்மைஏ உரைத்தார்-தம் மனத்திலுள்ள சத்தியமானகொள்கையையே சொன்னார்கள்: ஆதலால்-,நிரை நிரை படிஏ - வரிசைவரிசையான முறையாக, மா முனிக்கு ஓதனம் ஆன நிறை சுவை அமுதம் நெல்லியின் கனிஉம்-சிறந்த அமித்திரமுனிவனுக்கு உணவான நிறைந்த சுவையுள்ள அமுதம் போன்ற நெல்லிக்கனியும், நின்ற- அந்தவனத்திலேயிருந்த (நெல்லிமரத்தின்), கொம்பு-கிளையை,அணைந்தது- சேர்ந்திட்டது:ஆல்-இது என்னே! என்றுஉம் - எப்போதும், பெரியவர்- பெருமையுள்ளோர், பேசும்-பேசுகின்ற, வாசகம் - வார்த்தை, உள்ள ஆறு உரைத்தால்-உண்மையாக உரைக்கப்படுமாயின், பெறும்- பாராட்டப்படுதற்குஉரிய, முறை-முறைமையை, பெறும்-அடையும்;(எ-று.) நிரைநிரைப்படியே கொம்புஅணைதலாவது-மரத்திற்கனியிருந்த இடத்திற்கும் இப்போது கனியுள்ள இடத்திற்குமுள்ள தூரத்தை ஆறாகப்பகிர்ந்துகொண்டு,தருமன் தன்மனக்கிடக்கையைக் கூறியதும் ஒருபகுதிமுன்னேறுதல், மற்றொருவர்கூறியதும் மற்றொருபகுதி முன்னேறுதல் என்று இவ்வாறாகச்சென்றுஆறாமவர்கூறியதும்கனிஇருந்த இடத்திற்போய் ஒட்டிக்கொள்ளுதல். முதல்மூன்றடிகளிற் கூறியசிறப்புப்பொருளைஈற்றடியிற்கூறியபொதுப்பொருள்சமர்த்தித்துநின்றது - வேற்றுப்பொருள்வைப்பணியாம். ஆல்-வியப்புக்குறிப்பிடைச்சொல். அறுவருமிவ்வாறுரைத்தனருண்மை யவரவர் நினைவினின்படியேஎன்று பிரதிபேதம். (653) |