மகிழ்ந்து-(இனித்தன்கருத்துமுற்றுமென்ற எண்ணத்தினால்) மகிழ்ச்சியடைந்து, தன்மனைபுக்கான்-தன் அரண்மனைக்குச்சென்றான்; சலிப்பில்லாதமனமுடைய அந்தமுனிவனும் துஷ்டர்களான அந்நால்வர் பணிந்தேத்துதலினால்மனஞ்சலித்தனனென்பார்'அசைவிலாமனத்தருந்தவ முனிவனைஇசையுமாறுசெய்து'என்றார். இருடி என்றபொருளில் தபோதனனென்று ஒருசொல்இருத்தலால், 'தவச்செல்வன்'என்றது. ஓமவான் பொருள்களுக்கு என்றஇடத்து உருபு பிரித்துக்கூட்டப்பட்டது. (665) 12.-முனிவன்அபிசாரவோமஞ்செய்ய வரைப்புறஞ் சார்தல். போனமாமுனிதன்றபோ வனத்தொருபுடைமிசைநெடுங்கள்ளிக்' கானமானதுபுகுந்துபா ரிடங்களுங்கழுகினங்களுந்துன்றி, யானையோடிடநரிதுரத் திடுநிலத்தெரிவெயிற்கழைமுத்தம், வானெலா நெடுந்தாரகைபோலெழுமால்வரைப்புறஞ்சார்ந்தான். |
(இ-ள்.)போன-புறப்பட்டுச்சென்ற, மா முனி-சிறந்தஅந்தக் காளமாமுனிவன், தன் தபோவனத்து-தன்னுடைய தவச்சாலையில்,ஒருபுடை- ஒருபக்கத்திலே, மிடை-நெருங்கிய, நெடுங் கள்ளிக்கானம் ஆனது-நீண்ட கள்ளிக்கானமாகிய இடத்திலே, புகுந்து-,பாரிடங்கள்உம்-பூதங்களும், கழுகு இனங்கள்உம்-கழுகின் கூட்டங்களும், துன்றி-நெருங்கப்பெற்று, யானை ஓடிட நரி துரத்திடு-யானையஞ்சியோடும்படிநரியானது ஓட்டவல்ல, நிலத்து- (பாலை)நிலமாகிய, எரி வெயில் எரிகின்ற வெயிலினால்,கழை முத்தம் வான் எலாம் நெடுந்தாரகை போல் எழும் - மூங்கிலிருந்து முத்துக்கள் ஆகாயமெல்லாம் பெரிய நட்சத்திரங்கள்போல மேலேயெழுகின்ற, மால் வரை புறம்-பெரியமலையின்பக்கமாகிய இடத்தை, சார்ந்தான்-;(எ-று.) பாலைநிலத்தில்யானைவலிகுன்றிடு மாதலால், அதனைநரி துரத்திடும் என்றார்:எரிகின்றதுபோன்றவெயிலால் வேய்பிளக்க, அவ்வேயினின்று முத்துக்கள் தாரகைபோல வானத்தி லெழு மென்க.(666) 13.-முனிவன்பலிகொடுத்து அக்கினியை வளர்த்தல். அண்டர்யாவருமானுட முனிவருமகலிடந்தனின்மற்றும் கண்டகண்டவர்யாவரும் வெருவரக்கடும்பலிபலநல்கி உண்டியால்வளர்ந்தாரழல் கோளகையூடுறும்படியோம[தான். குண்டமெவ்வளவவ்வள விந்தனங்கொடுந்தருக்களிற்சேர்த் |
(இ - ள்.)அண்டா யாவர்உம் - தேவர்களெல்லாரும், மானுடம் முனிவர்உம் - மனுஷ்யவர்க்கத்தைச்சேர்ந்த இருடியரும், அகலிடந்தனில் மற்றும் கண்ட கண்டவர் யாவர்உம் - பெரியபூமியிலே மற்றுங் காணப்பட்டமானுடர்யாவரும், வெருவர-அஞ்சும்படி, கடும் பலி பல நல்கி- கொடியபலபலிகளைக்கொடுத்து,-உண்டியால்- |