பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்429

கொண்டு, விரைவின்- விரைவாக, ஓடிவருதி - ஓடிவருவாய், என்றான்-
என்று கட்டளையிட்டான்;(எ-று.)

     பாவத்தொழிலைச்செய்தாரைத் தண்டித்துத் தருமத்தைநிலை
நாட்டுதலால், யமனுக்கு 'தருமன்'என்றுஒருபெயர்: அறன் என்றது போல:
யுதிஷ்டிரன் குந்திதேவியினிடத்தில் யமதருமராசனது அருளால் தோன்றியவ
னாதலால்,தருமபுத்திரன் எனப்படுவான்:  ஆகவே, இங்கே 'தருமன்'
என்பது-தருமபுத்திரன் என்பதன் நாமைகதேசம்: இனி, 'தந்தையே
மகனாகப்பிறக்கின்றான்'என்ற நூற்கொள்கைபற்றி, யுதிஷ்டிரனைத்
தந்தையின் பெயரிட்டு 'தருமன்'என்றுகூறினாரென்பாரு முளர்.  காட்டில்
மானைத்தேடி அலைந்துதிரிந்ததனால்மிக்க வெப்பம்
அடைந்திருத்தல்பற்றி, தருமபுத்திரனை,'எரியுறுகானம்போல்வான்'
என்றார். இளவல்-சகதேவனைக்குறிக்குமென்பது, மேற்கவியாற்
பெறப்படும்.

     இதுமுதல்இருபத்துநான்கு கவிகள் - முதற்சீரும்நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றையநான்கும் மாச்சீர்களுமாகிவந்த
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள்.                  (676)

23.-நீர்கொணரச்சென்றசகதேவன்
நச்சுப்பொய்கையையடைந்து நீர் பருகுதல்.

அக்கணத்தினிற்சாதேவ னடவிகடோறுந்தேடி
எக்கணுங்காணானாகியென்றுதோய்குன்றொன்றேறி
மிக்கவண்சீதவாச விரிசுனையொன்றுகாணாப்
புக்கனன்பருகலுற்றான்பொலிவறப்புலர்ந்தநாவான்.

     (இ-ள்.)அகணத்தினில்-அப்பொழுது, சாதேவன்-சகதேவன், பொலிவு
அற புலர்ந்த நாவான்-விளக்கம்நீங்க [ஈரமற]வறண்ட
நாவையுடையவனாய்-அடவிகள்தோறுஉம் - காடுகள்தோறும், தேடி-நாடி,
எக்கண்உம்-எவ்விடத்திலும், காணன்ஆகி-(ஜலத்தைப்) பாராதவனாய்,
என்று தோய் குன்று ஒன்று-சூரியன்படிகின்ற [மிகவோங்கிய]
மலையொன்றின்மீதுஏறி-,அவண்-அவ்விடத்தில், சீதம் வாசம் மிக்கு விரி
சுனைஒன்று-குளிர்ச்சியும் நறுமணமும்மிக்குப் பரந்துள்ள சுனையொன்றை,
காணா-கண்டு,புக்கனன்-புகுந்து, பருகல் உற்றான்-(நீரைக்)குடிக்கலானான்;
(எ-று.)

     'மிக்கதாகங்கொண்டதருமபுத்திரனால்நீர் கொணருமாறு ஏவப்பட்ட
சகதேவன் முதன்முதலில் தான் சுனையின்நீரைக்கொண்டு செல்லாது,
நீரைப்பருகியது தகுதியோ?'என்று உண்டாகும் வினாவைச்
சமர்த்திப்பதற்காக, சகதேவனை'பொலிவுஅறப்புலர்ந்தநாவான்'என்றார்:
இங்ஙனம் சமர்த்திக்குங் கருத்துடன் அடைமொழி வந்ததனால்,பொலிவு
அறப்புலர்ந்த நாவான் என்பது-கருத்துடையடைமொழியணியாம்.
என்றுதோய் குன்று -மலையின்ஓங்கியிருக்குந்தன்மையை விளக்கவந்த
தொடர்புயர்வு நவிற்சியணி:ஸம்பந்தாதிஸயோக்தி எனப்படும்.     (677)