லால், அக்காலம்கோடைக்காலமெனப்பட, பிறகு, கோடை-இலக்கணையால், வெயிலைக்காட்டிற்றென்னலாம். (691) 38.-சாய்ந்துகிடந்ததருமனைக்கண்ட பூதம் கருதியது. அந்தணன்சொன்னவேந்த ரைவரிலறனால்வந்த மைந்தன்மற்றிவனேயாவி மாய்ந்ததோர்வடிவனாகிச் சந்தனதருவிற்சார்ந்து சாய்முடித்தலையனாகி மந்திரமறந்தவிஞ்சை மாக்களின்வடிவுசோர்ந்தான். |
இதுமுதல் ஏழுகவிகள் - ஒருதொடர். (இ-ள்.)அந்தணன் - காளமாமுனிவன், சொன்ன-(கொன்றிடுமாறு) சொல்லிய, வேந்தர் ஐவரில்-பஞ்சபாண்டவருள், அறனால்வந்த மைந்தன் இவனே-யம தருமனால்தோன்றியமைந்தனாகியஇந்தயுதிஷ்டிரனே, ஆவி மாய்ந்தது ஓர் வடிவன் ஆகி - உயிரொழிந்ததாகிய ஒருவடிவத்தை யுடையவனாய்,சந்தனம் தருவில் சார்ந்து - சந்தனமரத்திலே சாய்ந்து, சாய் முடி தலையன்ஆகி-தொங்கிய கிரீடமணிந்த தலையையுடையவனாய், மந்திரம் மறந்த விஞ்சை மாக்களின்-(பலவகைவித்தைகளையுஞ்செய்யும் வல்லமையையுண்டாக்கவல்ல) மந்திரத்தை மறந்த வித்தியாதரரைப்போல, வடிவுசோர்ந்தான்-(தன்) உடல் சோர்ந்துகிடப்பானானான்;(எ-று.)-மற்று- அசை. 'அந்தணன்'என்று தொடங்கும் இந்தச்செய்யுள்முதல், அடுத்த செய்யுளில் "மற்றிங்கென்செய்வேன்"என்பதுவரையில், பூதம் தன் மனத்துள் முதன்முதல்எண்ணியதைத் தெரிவிக்கும். காளமாமுனிவன் கொல்லுமாறுஏவிய பஞ்சபாண்டவருள் பிரதானனாகியதருமபுத்திரனே ஆவிமாய்ந்தாற்போன்றவடிவினனாயிருத்தலைஅப்பூதம் கண்டு எண்ணியவகையைக் காட்டுவது, இது. தருமன்மாய்ந்தாற் போன்றிருக்கும்போது சந்தனதருவிற் சார்ந்து கொண்டிருந்தமை, இதனால் அறியப்படும். ஆவிமாய்ந்தவடிவினன் ஆனதால், தருமபுத்திரனுடைய முடித்தலைசாய்ந்திருந்த தென்க. 39.-தருமன்இறந்துபோனமைக்குஇரங்கிப் பின்பு, பூதம் வீமன்முதலியோர்இறந்துகிடத்தலைக்காணுதல். சிறந்தமெய்ந்நிழல்போற்சூழுந் துணைவருஞ்சேரவிட்டுத் துறந்தனர்போலும்யாண்டுந் துப்பிலாவெப்பந்தன்னால் இறந்தனனிவனுமற்றிங் கென்செய்வேனென்றென்றெண்ணி நிறைந்தநீர்ச்சுனையின்மற்றைநிருபர்நால்வரையுங்காணா. |
(இ-ள்.)சிறந்த மெய் நிழல் போல்-சிறப்பான உடம்பின்நிழல் போல, சூழும் -(விடாமற்)சூழ்ந்திருக்குந்தன்மையுள்ள, துணைவர்உம்-(வீமன்முதலிய) தம்பிமார்நால்வரும், சேர-ஒருசேர, விட்டு துறந்தனர் போலும்- (இந்தத்தருமபுத்திரனை)விட்டுஅப்பாற்சென்றனர் போலும்: மற்று-பின்னும், இவன்உம்-இந்தத்தருமபுத்திரனும், |