மென்ற பொருளில்வருதலை,"சேதனமென்னுமச்சேறகத்தின்மையால்" என்றநாலடியாரிலுங் காண்க. சேறிலாத வெஞ்சுரம் எனவே, நீர்நிழலில்லாத பாலைவனம்என்றவாறாயிற்று. தருமபுத்திரன் தன்னிலுஞ்சிறியவரான விமன் முதலியோரை 'பெரியோர்' என்றது-அன்னார்உடம்பின்வலிமை முதலியவற்றாற்பெருமைபெற்றவராதலால். (703) 50.-வீமன்எழுதியதைக் கண்டு தருமன் செய்தியையறிதல். அண்டகோளகையனையதோ ராதபத்திரத்தான் மண்டலங்களீரொன்பதும் புரந்திடவல்லான் சண்டமாருதியெழுதிய தாழ்மணலெழுத்தைக் கண்டுநஞ்சமிக்கயத்தற லென்பதுகண்டான். |
(இ - ள்.)அண்டகோளகை அனையது- அண்டகோளத்தை ஒப்பதான, ஓர் ஆதபத்திரத்தால் - ஒப்பற்ற குடையினால்,மண்டலங்கள் ஈர் ஒன்பதுஉம்-பதினெட்டுப்பூமிகளையும்,புரந்திட-பாதுகாத்தற்கு, வல்லான்- வல்லவனாகியதருமபுத்திரன்,-தாழ் மணல்-குழிந்த மணலிலே, சண்டம் மாருதி - கொடுந்தன்மையையுடைய வீமசேனன், எழுதிய-எழுதியிருந்த, எழுத்தை-, கண்டு-பார்த்து, 'இகயத்து அறல்-இந்தச்சுனையிலுள்ளநீர், நஞ்சம்-விஷமாம்,'என்பது-என்பதை, கண்டான் - அறிந்தான்;(எ-று.)- வல்லான், எழுத்தைக் கண்டு, என்பது கண்டான் என்க. வீமன்எழுதியதைப் படித்த பின் கயத்தைக்கண்டு தருமன் அதன் நீரையும்நஞ்சுஉள்ளதென்று அறிந்தான். அண்டகோளகை-உருண்ட வடிவமான அண்டம். திரண்டு ஓங்கியிருத்தலில்,ஆதபத்திரத்திற்கு அண்டகோளகை உவமையாம். ஆதபத்திரம்=ஆதபத்ரம்;வெயிலினின்று காப்பது எனக் குடைக்குக்காரணக்குறி. மண்டலங்கள் ஈரொன்பதாவன:- சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கௌடம், கோசலம், திராவிடம் என்பன. அறல் நஞ்சம் - உடைமையையும் உடையதையும் அபேதப்படுத்திக் கூறிய உபசாரவழக்கு. நஞ்சம், அம்-சாரியை;நஞ்சு - நைதற்கு [இறத்தற்கு]க்காரணமானதெனக் காரணப் பொருள் உரைக்கலாம். அறல் - நீர்:மணலைஅறுத்துச்செல்வது எனக் காரணக்குறி. (704) 51.-தருமன்வீஷநிரைப் பருகச்செல்லுதல். வெஞ்சமஞ்செயவருவர்கொன் மீண்டுமென்றருளில் வஞ்சகன்செய்தவஞ்சனையிதுவெனமதித்து நஞ்சநீர்கொடுதானுந்தன் னாவினைநனைக்கும் நெஞ்சனாகியந்நிறைபுனற்கயத்திடைநேர்ந்தான். |
(இ - ள்.)'வெம்சமம் செய - கொடிய போரைச் செய்வதற்கு, மீண்டுவருவர்கொல் - மறுபடியும் (பாண்டவர்கள்) வந்துவிடுவார் |