ணிற வொளியினால், நெஞ்சினில்-மனத்திலுள்ள, இருளினை - அஜ்ஞானமாகிய இருட்டை, அகற்றி-போக்கி, மாறுபட்டிடும் - (நல்வழியிற் செல்லவொட்டாது)மாறுபடுந்தன்மையுள்ள, ஐம்புலன்கள்உம் ஒடுக்கும் - ஐம்பொறிகளையும் ஐம்புலன்களின்மேற் செல்லவொட்டாது ஒடுங்கச்செய்கின்ற, மா தவன்-பெருந்தவசியாகிய அருச்சுனன், வளர்த்த - (நாற்புறத்திலும்)மூட்டிக் கொழுந்துவிட்டெரியச் செய்த, செந் தழலால் - செந்நிறமுள்ள அக்கினிகளால், கூறு பட்டு உமையோடு ஒரு வடிவு ஆனோன் - (தனது)பாகமாகப் பொருந்தி உமாதேவியுடனே ஒருவடிவு ஆன சிவபெருமானுடைய, குன்று - கைலாசமலையிலே, சூழ் - சூழ்ந்துள்ள, அறை-பாறைகளும், பொறை-துறுகல்லுமாகிய, அனைத்துஉம் - எல்லாம், மாறுபட்டு-முன்னையநிலை [கெட்டியாயிருந்தநிலை] வேறாகி, உருகி-, பெருகி ஓடின -:(ஏனெனில்),அம்மலை வெள்ளி ஆதலினால்-; (எ-று.) வெள்ளிமலை நெருப்பினாலுருகுதல், இயல்பு என்க. திருநீற்றினால் மனத்தின் மாசுபோமென்பதை, திருநீற்றுப்பதிகத்தாலும் அறிக. நிலவினால் இருள் நீங்குமென்ற இயல்பு, இங்குக் கருதத்தக்கது. (58) 59. - அருச்சுனன்தவத்தைக்குலைப்போமென்றுவந்த தேவமங்கையர் பஞ்சாக்கினிமத்தியில் தவம்புரியும் அருச்சுனனைக்காணுதல். அலைத்தடங்கடலிலமுதொடுற்பவித்தாங்கமரர்வாழ்பதிகுடி புகுந் தோர், குலைத்துமென்றெண்ணியொருவருக்குக்கொருவர்கொடியிடை நுடங்கவந்தந்த, மலைத்தடநெருங்கப்புகுந்தனர்குயிலும் மயூரமு மானுமேயனையார், நிலைத்தவம்புரிவோனைவகைநெருப்பி னடுவுற நின்றவாகண்டார். |
(இ-ள்.)அலை - அலைகளையுடைய, தட கடலில்-பெரிய சமுத்திரத்திலே, அமுதொடு-அமிருதத்துடனே, உற்பவித்து-தோன்றி, அமரர் வாழ் பதி - தேவர்கள் வாழும் ஊரான அமராவதியிலே, குடிபுகுந்தோர்-குடி புகுந்தவரான, குயில்உம் மயூரம்உம் மான்உம் ஏ அனையார் - (குரலாற்) குயிலையும் (சாயலால்)மயிலையும் (நோக்கினால்)மானையுமே யொப்பவரான தேவமாதர், - 'குலைத்தும்- (இவ்வருச்சுனனுடையதவத்தை) அழிப்போம்',என்று எண்ணி-என்று நினைத்து,-ஒருவருக்கு ஒருவர் - ஒருத்தரினும் ஒருத்தர், (முற்பட்டு),கொடி இடை நுடங்க - (தமது)கொடி போன்ற இடை துவள, வந்து-,-அந்த மலை தடம் நெருங்க புகுந்தனர்-அந்த மலைச்சாரலை நெருங்கப் புகுந்தவர்களாய், நிலை தவம் புரிவோன்- நிலையான தவத்தைச் செய்பவனான அருச்சுனன், ஐவகை நெருப்பின் நடு உற-பஞ்சாக்கினிமத்தியிலே பொருந்த, நின்ற ஆ-நின்ற வகையை, கண்டார்- (எ-று.) புகுந்தனர் - முற்றெச்சம். ஆங்கு - அசை. (59) |