58.-யமதருமன்பிரதியட்சமாக வந்து கூறுதல். இவ்வகைப்பலவினவலுமியம்பியமகனை அவ்வயிற்பெரிதுவந்துகண் ணினுக்கிலக்காகிச் செவ்வயிற்பொலஞ்சிலம்பெனச் சேர்ந்துமெய்தழுவி வெவ்வயிற்புரிவிரகெலாம்விளம்பினன்மாதோ. |
(இ-ள்.) இவகை-இவ்வாறு, பல-பலவினாக்களை,வினவலும்- கேட்டவுடனே, இயம்பிய-(தாமதிக்காமல்)விடைகூறிய, மகனை- யுதிஷ்டிரனை,-(யமதருமன்),-அவயின்-அப்போது, பெரியது உவந்து- மிகவுங்கொண்டாடி, கண்ணினுக்கு இலக்கு ஆகி - (அந்த யுதிஷ்டிரனுடைய) கண்ணுக்குப் பிரதியட்சமாகி, செவ் வயின்-அழகைத் தன்னிடத்திற்கொண்ட,பொலம் சிலம்பு என-பொன்மயமான மேருமலை போல, சேர்ந்து-வந்து,மெய் தழுவி-(அந்தத்தருமபுத்திரனுடைய) உடம்பை அணைத்துக்கொண்டு,வெவ் வயின்-வெப்பமாகிய காட்டில், புரி- செய்யவேண்டிய, விரகுஎலாம் - உபாயங்களையெல்லாம்,விளம்பினன்- கூறினான்;(எ-று.)-மாது, ஓ-ஈற்றசைகள். தன்வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நச்சுநீரைப் பருகாதுநின்று தான்கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஏற்றவிடை அளித்ததனால்,யமதருமன் மகனைமிகவுவந்து, கண்ணுக்கிலக்காகி மெய்தழுவினன். யமதருமன் கோரமான கரியரூபத்துடன்வராது கண்ணுக்கினியஓங்கிய வடிவுகொண்டு வந்தன னென்பார்,'செவ்வயிற்பொலஞ்சிலம் பெனச் சேர்ந்து என்றார்.(712) வேறு. 59.-இதுவும் அடுத்தகவியும்-குளகம்:'உன்தம்பியரின் மரணத்தையொழிக்கவழியுண்டு'என்று ஒருமந்திரத்தை யமன்யுதிஷ்டரனுக்குக் கூறியது. அறப்பெருங் கடவுளென் றறிந்து தாதையைச் சிறப்புடன் சேவடி சென்னி சேர்த்திய மறப்பெரும் புதல்வனைமகிழ்ந்து நும்பியர் இறப்பினையொழிப்பதற் கேது வுண்டெனா. |
(இ-ள்.)'(தன்னைத்தழுவியவன்),அறம் பெரு கடவுள்- தருமத்தைநிலைநாட்டும்பெருமைபெற்ற யமதருமன்,'என்று-என்பதை, அறிந்து-, தாதையை - தந்தையினுடைய, சே அடி-அழகிய திருவடிகளில், சிறப்புடன் - மதிப்புடனே, சென்னி - (தன்) முடியை, சேர்த்திய-சேர்த்தின [காலில்விழுந்துவணங்கின என்றபடி],மறம் பெரு புதல்வனை- வீரத்தையுடையபெருமைபெற்ற புத்திரனை,மகிழ்ந்து-, நும்பியர் இறப்பினை - உனதுதம்பிமார்க்கு (இப்போது) நேர்ந்துள்ள மரணத்தை, ஒழிப்பதற்கு - போக்குவதற்கு, ஏது-காரணம்[வழி],உண்டு-,'எனா-என்றுசொல்லி,-(எ-று.)- "எனஅருள்செய்தான்"(60) என்க. |