பக்கம் எண் :

46பாரதம்ஆரணிய பருவம்

60.-தேவமாதர் பந்தடித்தல்முதலிய விளையாடல்களை  
அங்குச் செய்தல்.

அந்தரத்தமரர்துந்துபிமுழங்க வநங்கதுந்துபியெதிர்முழங்க,
வந்துபொற்சிலம்புமேகலைவிதமுமலர்க்கைவெள்வளைகளு
                                         முழங்கப்,
பந்தடித்திடுவாரம்மனையெறிவார் பயில்கழங்காடுவார்நெற்றிச்,
சிந்துரத்திலகந்தீட்டுவாராகித்தனித்தனிதிசைதொறுஞ்சூழ்ந்தார்.

     (இ-ள்.) அந்தரத்து-வானத்திலே, அமரர் துந்துபி-தேவர்களின் துந்துபி
யென்னும் பறை, முழங்க-ஒலிக்கவும், எதிர்-(அதற்கு) நேராக, அநங்க
துந்துபி-மன்மதனது பேரிகை, முழங்க-ஒலிக்கவும், வந்து-, பொன்
சிலம்புஉம்-பொன்னாலாகிய சிலம்பென்னுங் காலணியும், மேகலை
விதம்உம்-இடையணிவகைகளும், மலர் கை வெள் வளைகள்உம்-
தாமரைமலர்போன்ற கைகளிலணிந்த வெள்ளிய சங்குவளையல்களும்,
முழங்க-ஒலிக்கவும், பந்து அடித்திடுவார்-; அம்மனை எறிவார்-
அம்மானையை உயரவெறிந்து விளையாடுவார்:பயில் கழங்கு ஆடுவார்-
(தாம்) பழகிய கழற்சிக் காயை யாடுவார்:நெற்றி-நெற்றியிலே, சிந்துரம்
திலகம்-சிந்துரமென்கிற செம்பொடியினாலான திலகத்தை, தீட்டுவார் ஆகி-
அணிவாருமாய், தனித்தனி-, திசைதொறுஉம்- திக்குக்களிலெல்லாம்,
சூழ்ந்தார்-சூழ்ந்துகொண்டார்கள்; (எ-று.)

     தேவமாதர் அருச்சுனன் தவம்புரியும் மலைச்சாரலில், அவன்
மனத்தைத் தவத்தினின்றும் கலைக்கப் பந்தடித்தல் முதலிய விளையாடல்
செய்தலையும் திலகந் தீட்டுதல் முதலிய அலங்காரத்தொழில் செய்தலையும்
மேற்கொண்டா ரென்பதாம்.                                   (60)    

61.-இதுமுதல் மூன்றுகவிகள் - பின்னுந் தேவமாதர்
புரிந்த பல்வகை இங்கிதச் செயல்களைக் கூறும்.

குயிலொடுகூவிக்கிஞ்சுகமலர்ந்து கொஞ்சுபைங்கிளிகளை
                                   யழைப்பார்,
மயிலினநடிக்கத்தாமும்வண்கலாப மணியணியொளி
                                 யெழநடிப்பார்,
வெயில்விடுபரிதிமதியுடன்வலஞ்செய்விடரக
                            முழுவதுமொலிப்பக்,
கயிலையங்கிரியின்சாரலோவெம்மூர்க் கடவுளா
                            லயமெனக்களிப்பார்.

     (இ-ள்.) கிஞ்சுகம் மலர்ந்து - முருக்கமலர்போன்ற (தம்) வாயைத்
திறந்து, குயிலொடுகூவி-குயிலுடனே மாறுபட்டுக்கூவி, கொஞ்சு-
கொஞ்சுந்தன்மையுள்ள, பைங் கிளிகளை - பசியநிறமுள்ள கிளிகளை,
அழைப்பார்-; மயில்இனம் நடிக்க-மயிலின்திரள் நடனஞ் செய்யாநின்க,
தாமும்-, வள் கலாபம் - வளப்பமுள்ள கலாபமென்னும்
இடையணியினின்றும், மணி அணி ஒளி எழ - மணியினது அழகியஒளி
எங்கும் வீசுமாறு, நடிப்பார் - நடனஞ் செய்வார்:வெயில் விடு பரிதி-
வெயிலைவீசுகின்ற சூரியன், மதியுடன் - சந்திரனுடனே, வலம்செய்-
பிரதட்சிணஞ் செய்கின்ற, விடர் அகம் முழுவதுஉம்-மலைமுழையினிடம்
முழுதும், ஒலிப்ப-ஒலிபெறுமாறு,