பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்49

     (இ-ள்.)(மார்க்கண்டேயமுனிவனைக் காப்பதற்காக),கூற்றினை-
யமனை, உதைத்த-உதைத்துத்தள்ளிய, பாதம்உம் - திருவடிகளும், உடுத்த-
ஆடையாக அணிந்த, குஞ்சரத்து உரிவைஉம்-யானைத்தோலும், அணிந்த
நீறு ஒளிபரந்து-பூசியுள்ள திருநீற்றினொளி பரவுதலால், நிலவுஎழு-
வெள்ளொளி மேலெழுகின்ற, வடிவுஉம்-திருமேனியும், நிலா வெயில்
அனல்உமிழ் விழிஉம்-நிலவையும்வெயிலையும் அனலையும்
வெளிப்படுத்துகின்ற கண்களும், ஆறு அறல்பரந்த-கங்கையாற்றின்நீர்
பரவிய, கொன்றை-கொன்றைமலரையணிந்த, வார் சடைஉம்-நீண்ட
சடைமுடியும், (ஆகியஇவற்றை),அல்லது-அல்லாமல், யாவைஉம்-வேறு
எவற்றையும், கருதான்-(மனத்தில்)நினையாதவனாய், வச்சிராயுதன்
திருமகன்உம் வச்சிரப்படையையுடையவனாகிய தேவேந்திரனது மகனான
அருச்சுனனும், மாற்றம் ஒன்று இன்றி-ஒருபேச்சும் பேசுதலின்றி, வரை
போல் நின்றனன்-மலைபோல் அசையாது நின்றான்;(எ-று.)

     சிவபெருமானது மேனி செந்நிறமாயினும் திருமேனியிலணிந்த
வெண்ணீற்றால் அவ்வடிவினின்றும் நிலாவொளி எழுமென்க.
இறைவனுக்குச் சூரியசந்திராக்கினியர்என்ற முச்சுடர்களும் மூன்றுகண்க
ளாதலால், நிலாவெயிலனலுமிழ்விழியும் என்றார்.               (65)

66.-மன்மதனும்அருச்சுனன்தவத்தைக்குலைக்கஅஞ்சிச்
சென்றிடுதல்.

அன்றரனிருந்தயோகினையகற்றி யறிவிலா தநங்கனாய்வெந்த,
குன்றிதுதடங்கணாயிரமுடையோன் கூறியகூற்றினைத்தேறி,
இன்றவன்மதலைபுரிதவங்குலைத்தாலென்விளைந்திடுமென
                                          வஞ்சி,
நின்றிலன்மதனனிற்குமோநெற்றிநெருப்பினானீறு
                                    பட்டுள்ளோன்.

     (இ-ள்.)'அன்று- முற்காலத்தில், அரன்-சிவபெருமான், இருந்த-
மேற்கொண்டிருந்த, யோகினை - தவயோகத்தை, அறிவு இலாது-
ஆராய்ச்சியில்லாமல், அகற்றி-அகற்ற முயன்று, அநங்கன் ஆய்-
அங்கமில்லாதவனாகும்படி, வெந்த-எரிந்துபோன, குன்று-மலையாகும், இது-
: தட கண் ஆயிரம் உடையோன் கூறிய கூற்றினை தேறி-பெரிய
ஆயிரங்கண்களையுடையவனான இந்திரன் சொன்ன பேச்சினை நம்பி,
இன்று-இன்றைக்கு, அவன் மதலை புரிதவம் குலைத்தால்-அந்தத்
தேவேந்திரனுடைய புதல்வன் [அருச்சுனன்] செய்கின்ற தவத்தை (நாம்)
கெடுத்தால், என் விளைந்திடும்-என்ன தீங்கு நேரிடக்கூடுமோ?'என-
என்று, அஞ்சி-பயந்து, மதனன்-மன்மதன், நின்றிலன் - (அவ்விடத்து)
நில்லரதவனாயினான்: நெற்றி நெருப்பினால் - நெற்றிக்கண்ணினின்று
தோன்றிய நெருப்பினாலே, நீறுபட்டுஉள்ளோன்-உடல் சாம்பராக்கப்பட்டுப்
போனவன் [மன்மதன்], நிற்கும்ஓ-(அங்கே)நிற்பானோ?

    ஏற்கெனவே தன்னுடல்வெந்த மலையாதலால், இந்திரன்
பேச்சைக்கேட்டு இந்த அருச்சுனனது சிவத்தியானத்தைக் கெடுத்