னுக்கு உயிரெனச்சிறந்தோன்'என்றது;"மாலோனுயிர்போல்வான்" எனக் கன்ன பருவத்து வருமாறும் உணர்க. இதுமுதல் ஏழுகவிகள் - 54-ஆங்கவிபோன்ற எழுசீராசிரிய விருத்தங்கள். (75) 76. | ஆடியானனன்றன்மதலையர்விரகாலாடியசூதினுக்கழிந்து காடுதாமுறையுங்கடனினரவரிற் கடவுணாயகன்றருகாளை[மை நீடுபேரமரிற்பகைவரைச்செகுக்குநினைவினானெருப்பிடைநம் நாடியேயரிதிற்றவம்புரிகின்றானாமிதுமுன்னமேயறிவோம். |
(இ-ள்.)ஆடி ஆனனன் தன்-கண்ணாடிபோன்றமுகத்தையுடைய திருதராஷ்டிரனது, மதலையர்-புத்திரர்களாகியதுரியோதனாதியர்,விரகால்- வஞ்சனையினால்,ஆடிய - ஆடின, சூதினுக்கு-சூதாட்டத்தில், அழிந்து - தோற்று, காடு தாம் உறையும் கடனினர் அவரில் - காட்டில் தாங்கள் வாசஞ் செய்யவேண்டும் கடமையை யுடையவர்களாகிய அப்பாண்டவர்களில், கடவுள் நாயகன் தரு காளை-தேவராஜனான இந்திரன்பெற்ற புத்திரனாகியஅருச்சுனன், நீடு பேர் அமரில் - நீண்ட பெரிய யுத்தத்தில், பகைவரை செகுக்கும் நினைவினால்- பகைவர்களாகிய துரியோதனாதியரைக்கொல்ல வேண்டுமென்னும் எண்ணத்தால், நெருப்பு இடை - பஞ்சாக்கினி மத்தியில் நின்று, நம்மை நாடிஏ - நம்மைக்குறித்தே, அரிதின் - (பிறருக்கு)அரிய விதமாக, தவம் புரிகின்றான்- தவஞ் செய்கின்றான்;இது-இதனை,நாம்-,முன்னம்ஏ - (நீசொல்வதற்கு)முன்னாகவே,அறிவோம்-;(எ-று.)-இதனால்,அருச்சுனன் தவம்புரிகின்ற காரணத்தைச் சிவபெருமான் பார்வதீதேவியினிடம் கூறுகின்றன னென்க. ஆடியானனன்என்றது - கண்ணாடிதான் பிறராற் காணப்பட்டுப் பிறரைத் தான் காணும் உணர்ச்சியில்லாதது போலத் தான் பிறராற் காணப்பட்டுப் பிறவிக்குருடனாதலாற்பிறரைத்தான் காணாத முகத்தையுடையவ னென்றவாறு: இனி, கண்ணாடி போலவிளக்கமுடைய முகமுடையவ னென்றுமாம்;அன்றியும், கண்ணாடிபுறங்காட்டாதவாறுபோல வீரத்தால் முதுகுகாட்டாத முகமுடையவ னென்றுங் கொள்ளலாம்: "வயக்குறுமண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற, முகத்தவன்"என்றார், கலித்தொகையிலும். ஆடிய-ஆடுவித்த. கடவுணாயகன்-தேவேந்திரன்;நீடு அமர்-பலநாள் செய்யும் போர் என்றபடி. நீடுபேர் - ஒருபொருட்பன்மொழியுமாம். சூதினுக்கு=சூதில்: உருபுமயக்கம். (76) 77. | பருகுநீர்துறந்துகாற்றும்வெவ்வெயிலும்பாதவங்களின் சினையுதிர்ந்த, சருகுமேயொழியக்காய்கனிகிழங்குந் தானினிதருந்து தறவிர்ந்தான், உருகுமாமனத்தைநாமுவந்திருத்தற்குறைபதியாக்கி நம்மிடத்தே, செருகினானுணர்வையாவரேயிவன்போற் செய்தவஞ் சிறந்தவரென்றான். |
|