பொருட்டு அதனடிகளைத்தேடிப் புறப்பட்டாரென்று கவி ஒரு வகைச்சாதுரியந் தோன்றக் கூறினார். ஏனைந்தனைத்தேட நின்ற சரிதம், கீழ்க்கூறப்பட்டது. இவர் வைணவராயினும் பிறன்கோட் கூறலாக ஏனந்தேடிய சரிதையைக் கூறியுள்ளார். அப்பிரமவிஷ்ணுக்கள் அங்ஙனந்தேடிக் காண முடியாமையாற் செருக்குஒழிந்து பூசிக்க, அவர்களுக்குச் சிவபிரான் பிரதியட்சமாகித் தரிசனந் தந்து நின்றா னென்பது தோன்ற, 'அருளும்' என்றது. ஏனம் என்பதை ஏநஸ் என்னும் வடமொழித்திரிபாகக் கொண்டால், பாவமென்று பொருள்படுமாதலால், ஓரேனம்....ஒருவன்-ஒப்பற்ற தீவினையுடையவர் தன்னை யெதிரில் தேடிக்காணுமாறுமுயல அவர்களுக்கு அகப்படாதபடி மறைத்தருளிய உபயபாதங்களையுடையவனான உருத்திரமூர்த்தியென்று பொருளுரைப்பர், ஒருசாரார். ஏனம்-இலக்கணையால், பாவிகளை உணர்த்திற்று. மலையும் மலையைச்சார்ந்த இடமுமாகிய குறிஞ்சிநிலத்துக்கு முருகக்கடவுள் தெய்வ மாதலை "சேயோன் மேய மைவரை யுலகமும்" என்னுந் தொல்காப்பியத்தால் அறிக. பார், உலகு - இடவாகுபெயர்கள். ஏனை- பிறிதென்னும்பொருளது: இடைச்சொல். (87) 88.-சிவபெருமான்பரிவாரங்களோடு பன்றியின் அடிவைப்பைத் தேடிப்பார்த்தல். அனந்தவேதமுமிறைவனேவலினான்ஞாளிகளாயருகுசூழ அனந்தகோடியிற்கோடிகணநாதர் வேட்டுவராயருகுபோத அனந்தனாலினித்தரிக்கவரிதரிதிப்பூதலமென்றமரர்கூற அனந்தமாமுகமாகியடிச்சுவடுநோக்கினானடவியெல்லாம். |
(இ-ள்.) இறைவன்-(யாவர்க்குந்) தலைவனான சிவபெருமான், ஏவலினால்-(தனது) கட்டளையினால், அனந்தம் வேதம்உம் - எல்லையில்லாத வேதங்களெல்லாம், ஞாளிகள் ஆய் - வேட்டை நாய்களாகிய, அருகு சூழ - பக்கங்களிற் சுற்றிவரவும்-அனந்தம் கோடியின் கோடி - அளவில்லாத கோடிகளினும் பலகோடிகளாகிய, கணநாதர் - கணத்தலைவர்கள், வேட்டுவர் ஆய் - வேடர்களாகி, அருகு போத - பக்கங்களில்வரவும்,-'இ பூதலம் - இந்தப் பூமியை, இனி - இனிமேல், அனந்தனால்-ஆதிசேஷனால், தரிக்க - சுமக்க, அரிது அரிது - முடியாதுமுடியாது,' என்று-, அமரர்-தேவர்கள், கூற-சொல்லவும்,-அனந்தம் மா முகம் ஆகி - எல்லையில்லாத பெரிய பலவகைகளால், அடவி எல்லாம்-காடுமுழுவதிலும், அடிசுவடு - (பன்றியினது) கால்களின் அடையாளத்தை, நோக்கினான்-பார்த்தருளினார்; (எ-று.) சிவபெருமான்பன்றிவடிவுகொண்ட மூகாசுரனுடைய அடிச்சுவடுகளைக் காட்டில் நாற்புறத்திலும் தேடிப்பார்த்தனரென்பதாம். ஆதிசேஷனாற் பூமியைப் பரித்தல் முடியாதென்றது, அளவற்ற சகல கணங்களும் ஒருங்கே கூடிச் சஞ்சரிப்பதனாலென்க. அடிச்சுவடுகளைநோக்குதல், சென்ற வழியை அறியும்பொருட்டு, ந+அந்தம்=அநந்தம்: முடிவில்லாதது;அந்தம் - முடிவு. வேதம்- |