ருக், யஜு சு,ஸாமம், அதர்வணம் என்று நான்காகும். இப்படி நான்கு பகுப்பான வேதம் ஒவ்வொன்றும் "அநந்தாவைவேதா:" என்றபடி மிகவும் விரிந்திருத்தலால், 'அனந்தவேதம்'என்றார். அநந்தனென்பதற்கு - (பிரளயகாலத்திலும்)அழிவில்லாதவனென்று பொருள். அரிது அரிது- அடுக்கு, தேற்றப்பொருளது. பூதலம்-பூமியினுடைய இடம் என ஒற்றுமைப்பொருளில்வந்த ஆறாம்வேற்றுமைத்தொகையாகவாயினும், பூமியாகிய இடம் என இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகவாயினுங் கொள்க. (88) 89.-சிவபெருமான்பன்றியைக் காண்கையில், அது அருச்சுனனை யணுகுதல். மூகதானவனிவன்மேன்முந்தியுயிர்கவருமெனுஞ்சிந்தையானப் பாகசாதனிதவஞ்செய்பாக்கியபூமியைநோக்கிப்பரிவினோடும் ஏகசாபமும்வணக்கியேகினானேகுதலுமிலங்குவெண்ணீற்று ஆகனானோக்கப்பட்டணுகியதாலருந்தவன்மேலந்தவேனம். |
(இ-ள்.)(சிவபிரான்),'மூகதானவன்-மூகாசுரன், இவன் மேல்- இவ்வருச்சுனன்மேலே, முந்தி - முற்பட்டுப்பாய்ந்து, உயிர் கவரும்- இவனுயிரை ஒழிப்பனே,'எனும் சிந்தையான் - என்கிற கவலையையுடையனாய்,-அபாகசாதனி - அவ்விந்திரகுமாரன், தவம் செய் - (நின்று)தவஞ்செய்கின்ற, பாக்கியபூமியை நோக்கி - சித்திபெறுதற்குரிய இடத்தைக் குறித்து, பரிவினோடும்- அன்புடனே, ஏக சாபம்உம் வணக்கி - ஒப்பற்ற வில்லையும் வளைத்துக்கொண்டு, ஏகினான்- சென்றருளினான்: ஏகுதலும் - சென்றவளவில், அந்த ஏனம் - அப்பன்றி, இலங்கு வெள் நீறு ஆகனால்- விளங்குகின்ற வெண்ணிறமான விபூதியைத் தரித்த திருமேனியையுடைய அப்பரமசிவனால்,நோக்கப்பட்டு - பார்க்கப்பட்டு, அரு தவன்மேல் - அருமையான தவத்தையுடைய அருச்சுனன்மேலே, அணுகியது- நெருங்கி வந்தது; (எ-று.) பன்றியைக்கண்டவுடனே அதனைக்கொன்று வீழ்த்தும்படி வில்லை நாணேற்றிச் சித்தமாக வைத்துக்கொண்டு, சிவபெருமான் 'நாம்அந்தப் பன்றியைக் கண்டு பிடித்தற்கு முன்னமே அது அருச்சுனனது உயிரைக் கொள்ளுமோ?'என்னுங் கவலையோடுஅருச்சுனன் தவஞ்செய்யுமிடத்தை நோக்கி விரைந்துசெல்லுகையில், அப்பெருமானது கண்காண அப்பன்றி அருச்சுனனைநெருங்கிவந்த தென்பதாம். பாகனென்னும் அசுரனைக் கொன்றதனால்,இந்திரனுக்குப் பாகசாஸந னென்று பெயர்;அவன் மகன் - பாகசாஸநி:தத்தி தாந்தநாமம். ஏகசாபம் - ஒப்பற்றவில். வடமொழித்தொடர். பாக்கியபூமி - புண்ணியபூமி என்பாருமுளர். (89) 90.-அருச்சுனன்பன்றியின்முகத்தில் அம்பெய்ய, பரமசிவன் அதன்பின்புறத்தில் அம்பெய்தல். அதிர்ந்துவருகேழலைக்கண்டருந்தவத்தையழிக்குமெனவஞ்சி நாளும், உதிர்ந்தசருகுணவொழிய வுணவிலான்விரைவினிற்றன் |
|