கங்காநதியினது நீர் சிந்தவும், பிறைஉம் மான்உம் குலைய -பிறைச்சந்திரனும் (அதன்களங்கமாகிய)மானும் நிலைகெடவும், ஒருகணை-ஓரம்பை, எய்தான்- (அவன்முடியின்மேல்)தொடுத்தான்;(எ-று.) அருச்சுனன் தன்னோடு போர் செய்கின்றவன் மனத்திற் சிறிதும் சினமென்பதின்றிப் பொழுதுபோக்காக விளையாட்டுப்போர் செய்கின்ற சிவன் என்பதை உணராமல் உண்மையாகவே தன்னோடு சினந்துபொருகின்ற வேடனே யென்று கருதி மிகவும் உக்கிரமாக ஓரம்புஎய்ய, அதனால் அப்பரமன் முடியிலணிந்திருந்த பீலி முதலியன சிதறலாயின வென்பதாம். அம்புகள் விரைந்து செல்லுதற்பொருட்டு இறகுகட்டிவிடுவரென்க. வெய்தின்-விரைவாக என்றுமாம். ஐது-அற்பம், மென்மை: ஐம்மை - பகுதி. சிவபெருமான்முடியி லணிந்துள்ள பிறைச்சந்திரனுக்குக் களங்கமிருக்க வழியில்லையாயினும், சந்திரனுக்குக் களங்கங்கூறும் முறையில் 'மான்'கூறினார். பிறைச்சந்திரனை முடியிலணிந்த கதை:-சந்திரன் தக்ஷமுனிவரது புத்திரிகளாகிய அசுவினி முதலிய இருபத்தேழு நக்ஷத்திரங்களையும் மணஞ்செய்துகொண்டு அவர்களுள் உரோகிணியென்பவளிடத்து மிகவும் காதல் கூர்ந்து அவளுடனே எப்பொழுதும் கூடிவாழ்ந்திருக்க, மற்றைமகளிரின் வருத்தத்தை நோக்கி முனிவன் அவனை 'க்ஷயமடைவாயாக' என்று சபிக்க, அச்சாபத்தாற் சந்திரன் பதினைந்துகலைகளும் குறைந்து மற்றைக் கலையொன்றையும் இழப்பதற்கு முன்னம் சிவபிரானைச் சரணமடைய, அப்பெருமான் அருள்கூர்ந்து அவ்வொற்றைக்கலையைத் தன்தலையிலணிந்து மீண்டும் கலைகள் வளர்ந்து வரும்படி அனுக்கிரகித்தன னென்பதாம். (101) 102. | அற்போலச்சூழ்கின்றகிராதரெல்லா மவன்முடிமேலிவ னெய்ததறிந்துதீயின், நிற்போன்மேலெழுதலுமங்கவரை யெல்லா நில்லுமெனக்கையமர்த்திநீயின்றெய்த, விற்போர்கண்டனமடடாவிற் பிடிக்கும்விரகறியோ முன்னிடத்தேவேத விற்போற், கற்போமென் றொருகணைமற்றவன்மேல்விட்டான் கனகமலைச்சிலைவளைத்தகையினானே. |
(இ-ள்.)அல் போல-இருள்போல, சூழ்கின்ற - (சிவனைச்) சுற்றிலுமுள்ள, கிராதர் எல்லாம்-வேடர்கள் யாவரும், அவன் முடிமேல் இவன் எய்தது அறிந்து-சிவவேடனது சிரசின்மேல் அருச்சுனன் அம்பெய்ததை உணர்ந்து, தீயில் நிற்போன்மேல் எழுதலும்- அக்கினிமத்தியில்நின்று தவஞ்செய்த அவ்வருச்சுனன்மேல் (போருக்கு) எழுந்த அளவில், அங்கு-அப்பொழுது, கனகம் மலை சிலை வளைத்த கையினான் - பொன்மயமான மேருமலையை வில்லாகவணக்கின திருக்கையையுடைய சிவன், அவரை எல்லாம் - அவ்வேடர்களையெல்லாம், நில்லும் என கைஅமர்த்தி -'(நீங்கள்போருக்கு எழாமல்)நில்லுங்கள்' என்று சொல்லிக் கையினால் அமைந்திருக்கக் குறிப்புக்காட்டி, (அருச்சுனனைநோக்கி),'நீஇன்று |