பக்கம் எண் :

92பாரதம்ஆரணிய பருவம்

னென்க.  வில்லம் - வடமொழித் திரிபு.  சூதம் - தற்சமவடசொல்.
பொருளாகுபெயர். அம்பை - அம்பா: வடசொல். மேரு - ஒளிக்கு உவமை.
விசுவாவசுவினது வீணைக்கு ப்ருஹதீ என்றும், தும்புருவினது வீணைக்குக்
களாவதீ யென்றும், நாரதரது வீணைக்கு  மகதீ என்றும், சரஸ்வதியினது
வீணைக்குக் கச்சபீ என்றும் பெயரென்று உணர்க. கருவியாகிய யாழினது
ஒலியுங் கண்டத்தினது ஒலியுஞ் சிறிதும்வேறுபடாமல் ஒத்துநிற்கிற
சிறப்புத்தோன்ற 'யாழினொடு இசைபாட' என்றார். தும்புரு - ஒருகந்தருவமுனி.
நாரத னென்பதற்கு - மனிதர்களுக்கு உள்ள ஒற்றுமையைக்
கெடுப்பவனென்றும் ஆத்துமஞானத்தைப் பலர்க்கும்உபதேசிப்பவனென்றும்
பொருள்; இவர், தேவமுனி.                                     (115)

வேறு.

116.ஆடினன் களித்தன னயர்ந்து நின்றனன்
ஓடினன் குதித்தன னுருகி மாழ்கினன்
பாடினன் பதைத்தனன் பவள மேனியை
நாடின னடுங்கின னயந்த சிந்தையான்.

     (இ-ள்.)நயந்த சிந்தையான் - மிகுந்த அன்புகொண்ட
மனத்தையுடைய அருச்சுனன், ஆடினன் - (ஆனந்தத்தாற்)கூத்தாடினான்;
களித்தனன் - மிகமகிழ்ந்தான்;அயர்ந்து நின்றனன் - (தன்னை)மறந்து
பரவசமாய் நின்றான்;ஓடினன் - (எதிரில்)விரைந்துசென்றான்;குதித்தனன்
- துள்ளினான்;உருகி - மனமுருகி, மாழ்கினன் - மயங்கினான்;பாடினன் -
பாடல் பாடினான்;பதைத்தனன் - மிகவிரைந்தான்;பவளம் மேனியை,-
பவழம்போற் சிவப்பான (சிவபிரானது)திருமேனியை, நாடினன் -
மிகவிரும்பினான்;நடுங்கினன் - (உடம்பு)நடுங்கினான்;(எ-று.)

     ஆடுதல் முதலியன- அருச்சுனனுக்குச் சிவபிரானிடத்துள்ள
பேரன்பின்செயல்கள். ஒருவனிடத்துப் பலதொழில் ஒருகாலத்தில்
நிகழ்ந்ததாகக் கூறியது - கூட்டவணியின்பாற்படும்;இதனை,வடநூலார்
ஸமுச்சயாலங்காரமென்பர்.  நடுங்கினன் - கீழ்த் தான் முடியில்
வில்லாலடித்ததைக் கருதிப் பயந்தா னென்றுமாம். நயத்தல் -
ஆசைப்பெருக்கம்.

     இதுமுதல்முப்பத்துமூன்றுகவிகள் - பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
மாச்சீரும், மற்றையவை விளச்சீருமாகிவந்த கலிவிருத்தங்கள்.       (116)

117.-இனிஐந்து கவிகள்-பரமசிவனைஅருச்சுனன்
பரவுதலைக்கூறும்.         

விழுந்தருவினையினின்மெலிந்துநாயினும்
அழுந்தியபிறவியி னயருவேன்முனம்
செழுஞ்சுடர்மணிப்பணித் திங்கண்மௌலியாய்
எழுந்தருளியவிஃ தென்னமாயமோ.