பக்கம் எண் :

94பாரதம்ஆரணிய பருவம்

அன்பர்களுக்கெல்லாம், மெய்யனே - உண்மையாய் நிற்பவனே! எங்குஉம்
ஆய் விளங்கும்-எல்லாவிடங்களிலும் பொருந்திவிளங்குகின்ற, சோதியே-
தேஜோரூபியே!(எ-று.)

     மிகுந்தபக்தியுடன் கூறிய தாதலால், மேற்கவிகளோடு
கூறியதுகூறலென்னும் குற்றமில்லை: "பத்தர்சொன்னவும் பன்னப்பெறுபவோ"
எனக் கம்பர்கூறியவாறு அறிக.                                 (119)

120.முக்கணுநிலவெழ முகிழ்த்தமூரலும்
சக்கரவதனமுந் தயங்குவேணியும்
மைக்கயன்மரகத வல்லிவாழ்வுறு
செக்கர்மெய்வடிவமுஞ் சிறந்துவாழியே.

     (இ-ள்.)(உன்னுடைய),முக்கண்உம்-மூன்று திருக்கண்களும், நிலவு
எழ முகிழ்த்த மூரல்உம்-சந்திரனொளிபோன்றஒளி
வெளித்தோன்றும்படியுண்டான புன்சிரிப்பும், சக்கரம் வதனம்உம்-
வட்டவடிவமான முகமும், தயங்கு வேணிஉம்-விளங்குகின்ற சடையும், மை
கயல் மரகதம் வல்லி வாழ்வுறு செக்கர் மெய்வடிவம்உம்-மையிட்ட
கயல்மீன்போற் பிறழ்கிற கண்ணையுடையமரகதமணியாலாகிய
கொடிபோலப் பசுநிறமாகவுள்ள பார்வதீதேவி வசிக்கப்பெற்ற சிவப்பான
திருமேனியின் உருவமும், சிறந்து வாழி-மேன்மைப்பட்டு வாழக்கடவன;
(எ-று.)

     முக்கண் -இயற்கை யிருகண்ணோடுநெற்றிக்கண்.  கயல், வல்லி -
உவமவாகுபெயர்கள்.  ஒப்புயர்வில்லாத கடவுளுடைய திருமேனி
கண்ணெச்சிற்படாமே காலதத்துவமுள்ளவரையும் ஒரு குறையுமின்றிக்கே
நிலைபெறவேண்டுமென்கிறகருத்தோடு கூடிய மிக்க ஆர்வத்தால்,
'சிறந்துவாழி'என வாழ்த்தினான். செக்கர் - பண்புப்பெயர்.      (120)

121.அன்புறுதருமனுக் கனுசனாயினேன்
நன்பரம்பொருளுக்குநண்புமாயினேன்
பொன்புரைமேனியாய்போற்றினேனுனை
என்பெருந்தவப்பயன்யார்பெற்றார்களே.

     (இ-ள்.)பொன் புரை மேனியாய்-பொன்னையொத்துஅருமையான
திருமேனியையுடையவனே!அன்பு உறு தருமனுக்கு-(உயிர்களிடத்து)
அன்புமிகுந்த தருமபுத்திரனுக்கு, அனுசன் ஆயினேன்-தம்பியானேன்;நல்
பரம் பொருளுக்கு-சிறந்த பரதத்துவமாகிய கண்ணபிரானுக்கு, நண்புஉம்
ஆயினேன்-சினேகிதனும் ஆனேன்;உனைபோற்றினேன்-உன்னையும்
வணங்கினேன்;என் பெரு தவம் பயன்-எனது சிறந்த தவத்தினது
பயன்போன்ற பயனை,யார் பெற்றார்கள்-வேறேயாவர் பெற்றார்?
[எவருமிலர் என்றபடி];

     அனுசன்=அநுஜன்:பின்பிறந்தவன்: பரம்பொருள்-எல்லாப்
பொருள்களுக்கும் மேலான பொருள்.  நண்பு-ஆகுபெயர்.  "எஞ்சு
பொருட்கிளவி செஞ்சொலாயிற், பிற்படக்கிளவார் முற்படக்