126. | வந்தவன்முந்துமுன் மங்கைதன்னுடன் இந்தவெற்புறைதருமெயினவேடமாய்ச் சுந்தரமரகதச்சோதிவீரனே அந்தவல்லசுரனையம்பின்வீழ்த்தினேன். |
(இ - ள்.)சுந்தரம் - அழகிய, மரகதம் சோதி-மரகதரத்தினம் போன்ற பச்சையொளியையுடைய, வீரனே - வீரனானஅருச்சுனனே!அவன்- அவ்வசுரன், வந்து-, முந்து முன்-(உன்னைக்கொல்ல) முற்படுதற்கு முன்னே, (யான்), மங்கைதன்னுடன் - உமாதேவியுடனே, இந்த வெற்பு உறைதரும் எயின(ன்) வேடம் ஆய்-இந்தமலையில்வாசஞ்செய்கிற வேடனது வடிவமாகி, அந்த வல் அசுரனை- வலிமையையுடையவனாகிய அந்த மூகாசுரனை,அம்பின்-அம்பினால்,வீழ்த்தினேன்-கொன்று தள்ளினேன்; அஸு ரன் என்ற வடசொல்லுக்கு - பாற்கடலினின்று தோன்றிய சுரையைப் பருகாதவ னென்றும், தேவர்களுக்கு எதிரானவ னென்றும், பகைவருடைய உயிரைக் கவர்பவ னென்றும் பொருள்கொள்ளப்படும். (126) 127. | நின்னுடனமர்செய்து நின்வின்னாணறுத்து அந்நெடுவில்லினாலடியுமுண்டனன் உன்னருமல்லினாலுதையுமுண்டனன் என்னினியுன்கருத்தென்றுகூறினான். |
(இ - ள்.)நின்னுடன் - உன்னுடனே, அமர் செய்து-யுத்தம் பண்ணி, நின் வில் நாண் அறுத்து-உனது வில்லினது நாணியை அறுத்துவிட்டு, அ நெடு வில்லினால்அடிஉம் உண்டனன் - அந்தப்பெரிய வில்லின் தண்டத்தால் அடியும் பட்டேன்;உன் அருமல்லினால்உதைஉம் உண்டனன்-உனது அருமையான மற்போரினால்உதையும் பட்டேன்:இனி உன் கருத்து என்-இப்பொழுது நீ கருதிய வரம் யாது? (சொல்வாய்), என்று கூறினான்-; (எ - று.) அடியும்உதையும், உம்மைகள்-எச்சப்பொருளன:இழிவு சிறப்புமாம். உன்னரு-நினைத்தற்குஅரிய, மல் எனினுமாம். (127) 128.-அருச்சுனன்பாசுபதம் வேண்டுதல். அந்தவில்விசயனுமரன்பதம்பணிந்து எந்தைபாரதவமர்க் கிசைந்தவீரர்மெய் சிந்தநின்பேர்பெறு தெய்வவாளியைத் தந்தருளென்றனன் றவத்தின்மேனின்றான். |
(இ - ள்.) தவத்தில் மேல் நின்றான் - தவத்திற் சிறந்து நின்றவனாகிய, அந்த வில் விசயன்உம்-விற்போரில் வல்ல அவ்வருச்சுனனும், அரன் பதம் பணிந்து-சிவனது திருவடிகளை வணங்கி, 'எந்தை-எமது தலைவனே! பாரதம் அமர்க்கு இசைந்த வீரர் மெய் சிந்த- பாரதயுத்தத்துக்கு இணங்கிவந்த பகைவீரர்களது உடம்பைச் சிதறடிக்கும்பொருட்டு, நின் பேர் பெறு தெய்வம் |