பக்கம் எண் :

108பாரதம்உத்தியோக பருவம்

கிடக்க -(நமக்குள்) இருத்தலால் என உரைப்பாருமுளர்.  "தீராக்கோபம்
போராய்முடியும்" என்பது நீதியாதலால், பலநாளாயுள்ள பகைமை
சமாதானமாய் முடியாது என்றான்.  நாவலம்பூதலம், அம்-சாரியை யெனினுமாம்.
இந்தத்துவீபத்தின் மத்தியிலுள்ள மகாமேருமலையின் தென்புறத்தி
லிருக்கின்றதொரு மிகப்பெரிய நாவல் மரத்தைப் பற்றித்தான் ஜம்பூத்வீப
மென்கிற பெயர் இதற்கு உண்டாயிற்று; ஜம்பூ - நாவல்.  கோவலன் -
கோபாலன் என்னும் வடசொல்லின் விகாரம்:  பசுக்களைக் காப்பவனென்றும்,
உயிர்களைக்காப்பவனென்றும், பூமியைக் காப்பவனென்றும் பொருள்படும்.
இனி, தமிழ்மொழியாகவே, கோவலன் எனப்பிரித்து, பசுக்களைக் காத்தலில்
வல்லவன் எனப் பொருள்கொள்ளினுமாம்.  காவலன் - எனப் பிரிந்து
காத்தற்றொழிலையுடையவ னென்றும் பொருள்படும்.  நாவலந்தீவைக் கூறியது
- மற்றைத் தீவுகட்கும் உபலக்ஷண மென்றலும் ஒன்று.  அருகிலுள்ளவராதலின்,
இத்தீவினரசரை மாத்திரம் எடுத்துக் கூறினான்.  உம்மைகள் ஐந்தனுள், முதலது
சிறப்பு, மற்றவை - எண்ணுப்பொருளன.                          (87)

28.அன்னநடை யரம்பைதனையவுணர்கவர்ந்திட
                             விமையோரரசுக்காக,
முன்னமவருடன் பொருதுசிறை மீட்டானங்குலத்து
                                 முதல்வனன்றோ,
மன்னவையில் யாங்காணமடவரலைத்துகிலுரிந்த
                              வலியோன்றன்பால்,
இன்னமிரந்தவன்குடைக்கீ ழிருந்தக் கானம்மையுலகென்
                                     சொலாதே.

    (இ - ள்.) நம் குலத்து முதல்வன் - நாம்பிறந்த குலத்தில் தோன்றிய
பழையஅரசனாகிய புரூரவனென்பவன், முன்னம் - ஆதி காலத்திலே,
அன்னம் நடைஅரம்பைதனை - அன்னப்பறவையின் நடைபோன்ற
நடையையுடைய (ஊர்வசியென்னுந்) தேவமகளை, அவுணர் கவர்ந்திட -
அசுரர்கள் (பலாத்காரமாக)எடுத்துச்செல்ல, இமையோர் அரசுக்கு ஆக -
தேவர்களுக்கு அரசனானஇந்திரன் பொருட்டாக, அவருடன் பொருது -
அவ்வசுரரோடு போர்செய்து,சிறை மீட்டான் அன்றோ - (அவளை
அவ்வசுரரது) காவலில் நின்றும்விடுவித்தானன்றோ? (அவ்வாறிருக்க),
மடவரலை - (நம் ஐவர்க்கும்பத்தினியான) இளமைப்பருவத்தின்
வருகையையுடைய திரௌபதியை, மன்அவையில் - இராச சபையிலே, யாம்
காண - (கொழுநராகிய) நாமெல்லோரும்பார்க்க, துகில் உரிந்த -
(துச்சாதனனால்) வஸ்திராபஹரணஞ் செய்த,வலியோன்தன்பால் -
நெஞ்சுறுதியுள்ள துரியோதனனிடத்து, இன்னம் -இன்னமும், இரந்து -
(இராச்சியத்தை) யாசித்து, அவன் குடை கீழ்இருந்தக்கால் - அவனது
அரசாட்சியின்கீழே வாழ்ந்திருந்தால், உலகு நம்மைஎன்சொலாது -
உலகத்தவர் நம்மை யாதுதான் சொல்லமாட்டார்கள்?[பெரும்பழி கூறுவ
ரென்றபடி]; (எ - று.)

    சந்திரனது மைந்தனாகிய புதன் இளையினிடத்துப் பெற்ற புத்திரனாகிய
புரூரவனென்பவன், நிலவுலகத்தில் ஒரு பூஞ்சோலையில் வந்து
விளையாடிக்கொண்டிருந்த தேவலோகத்து மாதர்களுள்