பட்டன. இங்குக் கூறிய இக்காரியங்களெல்லாம் செய்து முடிக்கக் கூடாதனவாதலால், பாரதப் போர் வாராமற்காத்தலும் முடியாதெனக் குறிப்பித்தபடி. அணங்கு- தேவமகளும், திருமகளும், மோகினி யென்னும் பெண் தெய்வமுமாம்; இங்கே திரௌபதிக்கு உவமவாகுபெயர். கன்னன் கர்ண குண்டலங்களோடு பிறந்தமை பற்றியது; காதின் வழியே பிறந்ததனால் வந்த பெயரென்றுங் கூறுவர்; கர்ணம் - காது. பாண்டவர்கள் தாயான குந்திதேவி கன்னிகையா யிருந்தபொழுது தனக்குத் துருவாசமுனிவ ருபதேசித்த மந்திரத்தைப் பரீட்சித்தறியும் பொருட்டுச் சூரியனை நினைத்து அம்மந்திரத்தை உச்சரிக்க, உடனே அத்தேவன் வந்து அவளுக்கு அநுக்கிரகித்ததனால், அவளிடம் பிறந்த புத்திரன் இவன்; இவனைப் பிறந்தபொழுதே குந்தி பழிக்கு அஞ்சி மிதக்கும் மரப்பெட்டியொன்றில் வைத்துப் பூட்டிக் கங்கையாற்றில் விட்டிட, அதனைத் திருதராட்டிரனது தேர்ப்பாகனான அதிரதனென்பவன் கண்டு எடுத்துத் திறந்து பார்த்துக் கொண்டுபோய்த் தன் மனைவியான ராதையும் தானுமாக வசுசேனனென்று பெயரிட்டு வளர்த்தான்; இவனுக்குக் கர்ணனென்ற பெயர் ஆகாசவாணி யிட்டது. இவன் துரியோதனனுக்குப் பிராணசினேகிதனாகி அவனருளால் அங்கதேசத்திற்கு அரசனாயினான். கார் ஆர் குழல் - மேகத்தை யொத்த கூந்தலுமாம்; ஆர் - உவமவுருபு. ஏல் - என்னில்; மரூஉ. ("குற்றமே காக்க பொருளாக," "அரும்பண்பினாற்றீமைகாக்க," "செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்" என்ற விடங்களிற்போல) இங்கே, காத்தல் தடுத்தற் பொருளதாயிற்று. நின்னையும், உம் - இறந்தது தழுவிய எச்சத்தோடு உயர்வுசிறப்பு. 'கன்னன் பாராள' என்றது - துரியோதனனது தீச்செயல்க ளெல்லாவற்றிற்கும் அவனே பெரிய உதவியாய் நிற்பதனாலும், பாண்டவதுரியோதனாதியர் அனைவரிலும் மூத்தவனாதலாலும், துரியோதனனுக்கு மிக நண்பனும் பாண்டவர்க்கு மிகப்பகைவனு மாதலாலும், ஈகைக் குணமுடைய அரசனாதலாலுமென்க. 'காலில் தளைபூட்டி' என்பதற்கு திரௌபதியின் காலிலே விலங்கைப் பூட்டி யென்று உரைப்பாருமுளர்; அதற்கு இங்கே இயைபின்று. (95) 36.-கண்ணன் சகதேவனதுதிறத்தைப் பரீக்ஷித்தல். முன்னநீ கூறியவை யெல்லாமுடித்தாலும் என்னைநீ கட்டுமாறெவ்வா றெனமாயன் உன்னைநீ தானு முணராதாயுன்வடிவந் தன்னைநீ காட்டத்தளைந்திடுவன் யானென்றான். |
(இ -ள்.) (இங்ஙனங்கூறிய சகதேவனைநோக்கி),- மாயன் - விசித்திர சக்தியை யுடையவனான கண்ணன்,- 'நீ முன்னம் கூறியவை எல்லாம் முடித்தாலும் - நீ முன்னே சொன்ன காரியங்களையெல்லாம் நிறைவேற்றினாலும், நீ என்னை கட்டும் ஆறு எ ஆறு - (இறுதியிற்சொன்னபடி) நீ என்னைக்கட்டும் வகை எப்படி?' என - என்று வினாவ,- (அதற்குச் சகதேவன்),- 'உன்னை நீதானும் உண |