ராதாய் உனது(அருளுடைமை முதலிய) குணங்களின் பெருமையை நீயும் அறியமாட்டாதவனே! உன் வடிவந் தன்னை நீ காட்ட - உனது திவ்வியசொரூபத்தை நீ (என்னுடைய) அறிவிற்கு விஷயமாக்கி யிருப்பதால், யான் தளைந்திடுவன் - நான் (உன்னைக்) கட்டிவிடுவேன்,' என்றான் - என்று (கண்ணனைநோக்கிக்) கூறினான்; (எ - று.) முன்னங்கூறியவை - கர்ணனை அரசாள்வித்தல், அருச்சுனனைக் கொல்லுதல், திரௌபதியின் குழலைக் களைதல். சகாதேவன் கடவுளின் கருணையால் தத்துவஞான மடைந்துள்ளதனால் அக்கடவுளின் அடியர்க்கெளியனாந்தன்மையைக் கருதி இங்ஙனங் கூறினனென்க. முடித்தாலும் என்ற உயர்வு சிறப்பும்மை, முடித்தலின் அருமை தோன்ற நின்றது. 'உன்னை நீதானு முணராதாய்' என்றதனால், எம்பெருமானது எவராலும் அளவிடப்படாத அநந்தசக்தி விளக்கப்பட்டது; ஆதலால், இது எம்பெருமானுக்கு ஒருகுறைவு கூறியதாகாது; "தனக்குந் தன்தன்மை யறிவரியான்" என்றார் திருவாய் மொழியிலும். தன் தன்மை யுணராதவனென்றால் எம்பெருமானது முற்றுணர்வுக்குக் குறைவு வாராதோ? என்னில்,- ஒவ்வொரு பொருளின் தன்மையையும் உள்ளபடி அறிவதே முற்றுணர்வுக்கு இலக்கணமாவதாதலால், அநந்தசக்தியை அவ்வாறே அளவிட முடியாதென்றே உணர்வதனால், குறைவு வாராதென்க. நீதானும் - ஸர்வஜ்ஞனான நீயும் என்றபடி; நீதானும் என்ற உம்மையால் மற்றவர் அறியமாட்டாமை நன்கு விளங்கும். காட்ட - காரணப்பொருட்டாய் வந்த செயவெனெச்சம். (96) 37.-இதுவும் அது. மாயவனு மன்பன் மனமறிவான்கட்டுகவென்று ஆயவடிவு பதினா றாயிரங்கொண்டான் தூயவனு மூலமாந்தோற்றமுணர்ந் தெவ்வுலகுந் தாயவடி யிணைக டன்கருத்தினாற்பிணித்தான். |
(இ -ள்.) மாயவனும் - விசித்திரசக்தியுடையவனான கண்ணனும், அன்பன் மனம் அறிவான் - (தன்னிடத்து) மிக்க பக்தியுடையவனான சகதேவனது கருத்துநிலையை அறிதற்பொருட்டு, - கட்டுக என்று - (என்னை நீ) கட்டுவாயாக என்று சொல்லி, ஆய வடிவு பதினாறு ஆயிரம் கொண்டான் - பொருந்திய பதினாறாயிரம் திருவுருவங்களை (ஒருங்கே) எடுத்துக்கொண்டான்; (அப்பொழுது), - தூயவனும் - பரிசுத்தனான சகதேவனும், மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து - (அவ்வடிவங்கட்கெல்லாம்) முதன்மையான திருவுருவத்தை (இன்னதென்று தனது தத்துவஞானத்தால்) அறிந்து, ஏ உலகும் தாய அடி இணைகள் - எல்லாவுலகங்களையும் அளவிட்ட (அவ்வெம்பெருமானது) உபய பாதங்களை, தன் கருத்தினால் பிணித்தான் - தனது மனமாகிய கயிற்றினாற் கட்டினான்; (எ - று.) சகதேவன் கடவுளின் அருளால் உண்மையறிவை யடைந்துள்ளானாதலால், பகவானது சொரூபத்தைத் தனது கருத்தால் |