பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 121

இனி என்பாதந்தன்னை விடுக - இனி எனது கால்களை விட்டிடுவாயாக,
என்று உரைப்ப - என்று சொல்ல,- (அதற்குச் சகதேவன் கண்ணனைநோக்கி),
- நெடுமாலே - பெருமைக்குணமுடையவனான கண்ணனே! - வந்து
அடைந்தேம் ஐவரையும் - (உன்னை) வந்து சேர்ந்துள்ளவர்களான எங்கள்
ஐந்துபேரையும், வல் பாரதம் போரில் - (இனி நிகழும்) கொடிய பாரத
யுத்தத்திலே, நின்பார்வையால் காக்க வேண்டும் - உனது  திருவருள்
நோக்கத்தாற்  பாதுகாத்தருளவேண்டும்; (எ - று.)-'என்று' என, அடுத்த
கவியோடு இயையும்.

    அடைந்தேம் ஐவர் - தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி;
வழாநிலையாயின், 'ஐவேம்' என நிற்கும்; இதில், உம்மை - இனைத்தென்றறி
பொருளில் வந்த முற்றும்மை.  பார்வை - நோக்கம்: கடாட்சம்; தொழிற்பெயர்:
வை - விகுதி.  நெடுமால் - மகாவிஷ்ணு; நீண்ட திருமாலுமாம்.       (99)

40.-கண்ணன் சகதேவனுக்குவரமளித்து, நடந்ததை
இரகசியமாக வைக்கும்படி நியமித்தல்.

என்றென் றிறைஞ்சி யிருதாமரைத்தாளி
லொன்றுங் கதிர்முடியாற்கோமென் றுரைத்தருளி
யின்றிங் கிருவேமு மிப்போதுரைத்தமொழி
யொன்றும் பிறரறிய வோதாதொழிகென்றான்.

    (இ - ள்.) என்று என்று-என்று பலதரஞ்சொல்லி, இறைஞ்சி-நமஸ்கரித்து,
இருதாமரை தாளில் - (கண்ணனது) தாமரைமலர்போன்றஇரண்டு
திருவடிகளிலே,ஒன்றும் - பொருந்திய [சரணமடைந்த], கதிர் முடியாற்கு -
ஒளியுள்ளகிரீடத்தை யுடையவனான சகதேவனுக்கு, (கண்ணன்), ஓம் என்று
உரைத்தருளி- 'அப்படியேயாகுக' என்று உடன்பாடாகக் கூறியருளி,- 'இன்று
இங்குஇருவேமும் இப்போது உரைத்த மொழி ஒன்றும்-இன்றைத்தினம்
இவ்விடத்தில்நாமிரண்டுபேரும் இப்போது (தனியே) பேசிக்கொண்ட
வார்த்தைகளுள்ஒன்றையும், பிறர் அறிய ஓதாது ஒழிக - எவரும் அறியச்
சொல்லாமல்விடுவாயாக,' என்றான் - என்று கூறினான்;

    என்று என்று-அடுக்கு, பன்மைப்பொருளது; இது, சகதேவனது அன்பு
மிகுதியை விளக்கும்.  ஓம் - அங்கீகாரப் பொருளை யுணர்த்தும் வடமொழி
யிடைச்சொல்; (வடமொழி மகா காவியத்தினுரையில் மல்லிநாதசூரி
உரைத்தவாறும் காண்க.) இருவேம் - இரண்டு என்னும் எண்ணினடியாப்
பிறந்த தன்மைப் பன்மைப் பெயர்; (முன்னிலை - இருவீர், படர்க்கை -
இருவர்.) 'ஓதா தொழிக' என்றது, அவதாரத்தின் மெய்ப்பாட்டால்.  ஓதா
தொழிக-ஒருசொல்தன்மையது; 'ஒழி' - துணிவுப்பொருளுணர்த்தும்.  (100)

41.- சகதேவன் திரௌபதியைநோக்கித் தனது அபிப்பிராயங்
கூறுதல்.

ஆண்டிருந்த வவைநீங்கியறிவுடையோ ரிருவோரும்
பாண்டவர்கண் முன்னெய்திப்பழுதில்புகழ்ப் பாஞ்சாலி