பக்கம் எண் :

உலூகன் தூது சருக்கம் 13

தையும் உணர்த்தும்;"கருந்தனம் கைத்தலத்தவுய்த்துச் சொரிந்திட்டு"
என்னுமிடத்துக் காண்க.  இனி, கார் என்பதற்கு - கரியவென்று உரைத்து,
களிறு என்பதனோடு சேர்த்தலுமாம்; பண்பாகுபெயராய், மேகம் போன்ற
எனினும் அமையும்.  யானைக்காலுக்கு உரல் உவமை வடிவத்துக்கும்
வலிமைக்குமென்க;  'உரற்கால்யானை' என்றார் முன்னோரும்.  களிறு -
ஆண்பாற்பெயர்; இது யானைக்கு உரியதாதலை "வேழக்குரித்தேவிதந்து
களிறென்றல்" என்ற தொல்காப்பியத்தா லறிக; மதக்களிப்பை யுடையதெனக்
காரணப்பெயர்; இது, பால்பகா அஃறிணைப்பெயராதலால், று - ஒன்றன்பால்
விகுதியாகாது; இதன் பெண்பால் - பிடி.

     விசித்திரவீரியன்மனைவியருள் ஒருத்தியான அம்பிகை, கணவனை
யிழந்த பின்பு சந்ததிவிருத்தியின்பொருட்டு மாமியார் கட்டளைப்படி
மைத்துனனோடு சேர்கையில், கூச்சத்தால் கண்விழியாதிருந்ததனால் அவளிடம்
திருதராஷ்டிரன் பிறவிக்குருடனாய்ப் பிறந்தான்.  இங்கே உலூகனுக்குச் சீர்
என்றது, தூதுரைப்பார்க்கு இன்றியமையாத அன்பு, அறிவு, ஆராய்ந்த
சொல்வன்மை, உயர்குடிப்பிறத்தல், தானே வகுத்துச் சொல்லுமாற்றல் முதலிய
குணங்களை கண்ணன் குழந்தையாயிருக்குங் காலத்தில் துன்பப்படுத்துகின்ற
பல திருவிளையாடல்களைச் செய்யக்கண்டு கோபித்த
நந்தகோபர்மனைவியான யசோதை, ஒருநாள் கிருஷ்ணனைத் திருவயிற்றில்
கயிற்றினாற்கட்டி ஓருரலிலே பிணித்துவிட, கண்ணன்
அவ்வுரலையிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின்
நடுவிலே எழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய் நின்று
இழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்த வளவில்,
முன் நாரதர் சாபத்தால் அம்மரங்களாய்க் கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன்
என்னுங் குபேரபுத்திரரிருவரும் சாபந்தீர்ந்து சென்றனரென்பது கதை.
உலூகனைத் தூதனுப்பின சமயத்தில் கண்ணனுக்கு இராசதானியான ஊர்
மதுரையன்றித் துவாரகையாதலை, அடுத்த சருக்கத்தில் (3) "மாயவன்
றன்னைக் கூட்டவளர்மதிற்றுவரை சேர்ந்தான்" என்பதனாலு மறிக;
தவழ்ந்தவன் உலூகளைக் கண்ணிலான்பால் தூதுசென்று மீள்கெனப்போக்கித்
தனதூர்புகுந்தன னென்று அந்வயம்.                              (5)

அங்குவந்துள்ள அரசர்கள்யாவரும் திருதராஷ்டிரன்
இராச்சியம் தராவிட்டால் செய்தி தெரிவிக்கும்படி கூறித்
தம்தம் நகரமடைதல்.

3.இந்தவந்தணனீயிசைத்தனவெலாமியல்புடனினிதாக
வந்தவந்தனோடுரைத்தபினவனின்தவனிதந்திலனாகின்
முந்தவந்தண்மாமுரசகேதனதிருமுகம்வரவிடுகென்று
வந்தவந்தமன்னவர்களுந்தத்தமாநகரடைந்தனர்மன்னோ.

     (இ -ள்.) அம் - அழகிய, தண்-குளிர்ந்த [செவிக்கினிய ஒலியையுடைய],
மா - பெரிய, முரசம் - பேரிகைவாத்தியத்தின் வடிவத்தையெழுதின, கேதன -
துவசத்தையுடைய தருமபுத்திரனே!- இந்த அந்தணன் - (உலூகனென்னும்)
இந்தப்பிராமணன், நீ இசைத்தன