| தெண்ணீ ரினாற்பொருந்தத்தேற்றினான் சாற்றுகின்ற மண்ணீ ரனலனிலம் வான்வடிவாமாமாயன். |
(இ -ள்.) சாற்றுகின்ற - (நூல்களில்) எடுத்துக் கூறப்படுகின்ற, மண் - பூமியும், நீர் - ஜலமும், அனல் - அக்கினியும், அனிலம் - வாயுவும், வான் - ஆகாயமும் ஆகிய பஞ்சபூதங்களின், வடிவுஆம் - சொரூபமாகிய, மா மாயன் - மிக்க மாயையையுடையவனான கண்ணபிரான்,- தன் இரு கண்ணின் கருணை எனும் தெள் நீரினால் - தனது இரண்டு கண்களினின்று சொரிகின்ற அருளாகிய தெளிவான நீரினாலே, பெண் நீர்மை குன்றா பெருந் திருவின் செங்கமலம் கண் நீர் துடைத்து - பெண்மைக்கு உரிய குணங்களொன்றுங் குறையாத சிறந்த இலக்குமிபோன்ற திரௌபதியினது செந்தாமரை மலர் போலுங் கண்களின் நீரைப்போக்கி, பொருந்த தேற்றினான் - தக்கபடி [மனம் வருந்தா திருக்குமாறு] (அவளைச்) சமாதானப் படுத்தியருளினான்; (எ - று.) தனதுகடாட்சத்தில் தோன்றுங் கருணைத்தெண்ணீரினால் அத்திரௌபதியினது சோகக்கண்ணீரை அகற்றினனென்க. தம்மைச் சேர்ந்தவர் துன்பமடையக் கண்டபோது அன்புடையாரது கண்களினின்று அகத்தே நிகழ்கிற அன்பு புறத்தேதோன்றும்படி கண்ணீர் தளும்புமாதலின், 'கண்ணிற் கருணையெனுந்தெண்ணீர்' எனப்பட்டது. கருணையெனுந் தெள்நீர் - அருளென்கிற தெளிவான குணமென்றும் உரைப்பர். நாணம்மடம் அச்சம் பயிர்ப்பு என மகடூஉக்குணம் நான்காம்; அவற்றுள், நாணமாவது - செய்யத்தகாதவற்றில் உள்ளமொடுங்குதல், மடமாவது - எல்லாம் அறிந்தும் ஒன்றும் அறியாதுபோலிருத்தல்: கொளுத்தக்கொண்டு கொண்டதுவிடாமை யெனவும்படும். அச்சமாவது - புதியதைக் கண்டவிடத்து அஞ்சுதல். பயிர்ப்பாவது - தன்கணவனல்லாத ஆடவரது ஆடைமுதலியன தன்மேற்பட்டால் அருவருத்தல். மற்றைய பெண்குணங்கள்யாவும் இந்நான்கில் அடக்கப்படும். கண்ணீர் - இங்கே, சோகபாஷ்பம். உற்பத்திக்கிரமத்தில், ஆகாசத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து அக்கினியும், அக்கினியிலிருந்து ஜலமும், ஜலத்திலிருந்து நிலமும் பிறந்தனவென வேதம் ஓதுதலால், அக்காரிய காரண முறைப்படியே 'மண்ணீரனலனிலம் வான்' என அடுக்கினார்; இனி, லயகாலத்தில், நிலம் நீரிலும் நீர் நெருப்பிலும், நெருப்பு காற்றிலும், காற்று வானத்திலும் ஒடுங்குமென்பது நூல்வழக்காதலால், அம்முறைப்படி வைத்தாரெனினுமாம். ஈற்றடி, எம்பெருமான் எல்லாப் பொருள்களின் சொரூபமுமானவனென்பதை விளக்கும்; "ஸர்வம் விஷ்ணுமயம்ஜகத்," "நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச், சீரார் சுடர்களிரண்டாய்ச் சிவனா யயனானாய்" என்றார் ஆழ்வாரும். (111) 52.-ஆலோசனைச் சபையில்வரத்தகாதவர்கள். துன்று பிணியோர் துறந்தோரடங்காதோர் கன்று சினமனத்தோர்கல்லாதவ ரிளையோர் |
|