பக்கம் எண் :

140பாரதம்உத்தியோக பருவம்

59.-அந்நகரத்து அகழியின்வருணனை.

நடந்தநாயகன்கோலமாய்வேலைசூழ்ஞாலம்
இடந்தநாளிடையதுவழியாகவந்தெழுந்து
படர்ந்தபாதலகங்கையப்படர்மதில்சூழ்ந்து
கிடந்ததாமெனச்சிறந்ததுதாழ்புனற்கிடங்கு.

     (இ -ள்.) நடந்த - (அத்தினாபுரிக்கு இப்பொழுது பாண்டவ தூதனாக
எளிதில்) எழுந்தருளிய, நாயகன் - (யாவர்க்குந்) தலைவனான கண்ணன்,
கோலம் ஆய் - (முன்பு) வராகாவதாரமூர்த்தியாய், வேலை சூழ் ஞாலம் -
கடல் சூழ்ந்த பூமியை, இடந்த நாளிடை - (கோட்டாற்) குத்தியெடுத்துவந்த
காலத்திலே, அதுவழி ஆக - அக்கோடு குத்திப் பிளந்த பூமியின்
துளையின்வழியாக, வந்து எழுந்து படர்ந்த - புறப்பட்டுமேலெழுந்து
(பூமியின்மீது) பரவிய, பாதல கங்கை - பாதாள கங்கா நதியானது, படர் அ
மதில் சூழ்ந்து கிடந்தது ஆம் - பரந்த அந்த மதிலை வளைந்திருந்ததாம், என
- என்று சொல்லும்படி, தாழ் புனல் கிடங்கு - ஆழ்ந்த நீரையுடைய
அவ்வகழி, சிறந்தது - சிறப்புப்பெற்றது; (எ - று.)

    தற்குறிப்பேற்றவணி.  அவ்வகழி மிகவும் ஆழ்ந்து தெளிவாகவும்
இனிதாகவுமுள்ள நீரை யுடைமையின், பாதலகங்கையை ஒப்புமை எடுத்துக்
காட்டினார்.  (கீழுலகத்திலுள்ள கங்கைக்குப் போகவதி யென்று பெயர்;
அதனை, "ஓதப்புனற்பொன்னிநன்னீ ரரங்கருலகளந்த பாதத்துநீர் விண்படிபில
மூன்றிலும் பால்புரைவெண், சீதத்தரங்க மந்தாகினியாகிச் செழுங் கங்கையாய்,
மேதக்க போகவதியாகி நாளும் விழுகின்றதே" என்ற
திருவரங்கத்துமாலையினாலும் அறிக.) திருமாலின் அவதாரமாகிய வராகமூர்த்தி
பூமியைக் கோடு கொண்டு குத்தியெடுத்தபோது பூமியிலே உண்டான
துளையின் வழியாய்ப் பாதாளகங்கை பூமிக்கு எழுந்துவந்து இந்நகரத்து
மதிலைச் சூழ்ந்தாற் போன்றது, ஆழ்ந்த அகழியில் நிறைந்துள்ள தெள்ளிய
இனிய நன்னீரென்பது கருத்து.                                   (119)

60.-அந்நகரத்து மதில்களின்வருணனை.

அடிநிலத்திலேபடிவனவிடிமுகிலனைத்து
முடிநிலத்தினுக்குடுபதத்தினுமுடிவில்லை
நெடியசக்கரப்பொருப்பையுநிகரிலாவிதற்கோர்
படிவகுத்ததாமெனும்படிபரந்ததுபுரிசை.

     (இ -ள்.) இடி முகில் அனைத்தும் - இடியிடிக்கின்ற மேகங்களெல்லாம்,
அடி நிலத்திலே படிவன - (அந்நகரத்து மதிலின்) அடிப்புறத்திலே வந்து
படிவனவாம்; முடி நிலத்தினுக்கு - (அம்மதிலின்) சிகரத்தினிடத்துக்கு, உடு
பதத்தினும் - நக்ஷத்திர மண்டலத்திலும், முடிவு இல்லை - முடிதலில்லையாம்;
(இங்ஙனம் மேக மண்டலத்தையும், நக்ஷத்திர லோகத்தையும் மிகக் கடந்து),
நெடிய சக்கரப் பொருப்பையும் நிகர் இலா இதற்கு ஓர் படி வகுத்தது ஆம்
எனும்படி - (எல்லா மலைகளினும்) உயர்ந்த சக்கரவாள மலையையும்
ஒப்பில்லாத