62.-அந்நகரத்துமாடமாளிகைகளின் வருணனை. புயங்கபூமியோபுரந்தரற்கமைத்தபொன்னுலகோ தயங்குசெல்வநீடளகையோநிகரென்னுந்தரத்த இயங்குகார்முகில்வரையினின்றெழுவனபோல வயங்குகாரகினறும்புகையுயிர்ப்பனமாடம். |
(இ -ள்.) வரையினின்று எழுவன - மலைகளினின்று மேலெழுவனவான, இயங்கு கார் முகில் - (எப்பொழுதுஞ்) சஞ்சரிக்குந் தன்மையுள்ள கரிய நீர்கொண்டமேகங்களை, போல - ஒக்கும்படி, வயங்கு கார் அகில் நறும்புகை உயிர்ப்பன - விளங்குகின்ற கருமையான அகிற்கட்டைகளின் சுகந்தமுள்ள புகையை மேலெழுப்பப் பெற்றவையான, மாடம் - (அந்நகரத்து) உபரிகை வீடுகள்,- 'புயங்க பூமியோ - நாகலோகமோ? புரந்தரற்கு அமைத்த பொன் உலகோ - இந்திரனுக்காகப் படைக்கப்பட்ட சுவர்ணமயமான சுவர்க்கலோகமோ? தயங்கு செல்வம் நீடு அளகையோ - (எல்லாவற்றினுஞ்) சிறந்து விளங்குகிற செல்வப் பொருள்மிக்க (குபேரனது) அளகாபுரியோ? நிகர் - (இவ்வீடுகளுக்கு) ஒப்பு,' எனும்-என்று கருதத்தக்க, தரத்த- தன்மையையுடையன; (எ - று.) முன்னிரண்டடி - ஐயநிலையுவமையணியும், பின்னிரண்டடி - உவமையணியுமாம். புயங்கம் - மார்பினால் ஊர்ந்து செல்வது எனப் பாம்புக்குக் காரணப்பெயர். பாதாளலோகத்திலுள்ள நாகஜாதியாரது இராசதானியான போகவதியென்னும் நகரம், அழகுசெல்வம் ஆகியவற்றில் மிகச்சிறந்ததாம். தேவலோகத்திலுள்ள இந்திரனது இராசதானிக்கு அமராவதியென்பது பெயர். செல்வம் - நவ நிதிகள். தரம் - தகுதி. தரத்த - பலவின்பாற் குறிப்புவினைமுற்று. மலை - மாடத்துக்கும், காளமேகம் - புகைக்கும் உவமை. கார்ப்புகையென்றும் இயைக்கலாம். 'காழகில்' என்ற பாடத்துக்கு வைரம் பற்றிய அகிலென்க. 'தரத்தது' என்ற பாடத்துக்கு மாடங்கள் இங்ஙனம் உள்ளனவாதலால், நகரம் புயங்கபூமி முதலியவற்றுள் எதனையொக்குமோவென்று ஐயமுறத்தக்க தென்க. அகிற் புகை - இடத்துக்கும் கூந்தலுக்கும் ஆடையா பரணங்கட்கும் நறுமண மூட்டுதற்கும் இடுவது. (122) 63.-அந்நகரத்து இராசவீதிகளின் இயல்பு. மன்னர்வேழமுஞ்சேனையுமெதிரெதிர்மயங்கப் பின்னுமுன்னுமெம்மருங்கினும்பெயரிடம்பெறாமற் றுன்னிநின்றவரேகுமினேகுமினென்னும் என்னுமோசையேயுள்ளனவீதிகளெல்லாம். |
(இ -ள்.) வீதிகள் எல்லாம் - (அந்நகரத்து) நெடுந்தெருக்கள் தோறும்,- மன்னர் - அரசர்களது, வேழமும் - யானைகளும், சேனையும் - மற்றைச் சேனைகளும், எதிர் எதிர் மயங்க - (ஒன்றோடொன்று) எதிரெதிரில் நெருங்கிக்கலத்தலால், பின்னும் முன்னும் எ மருங்கினும் பெயர் இடம் பெறாமல் - பின்பக்கத்திலும் முன்பக்கத்திலும் |