பக்கம் எண் :

144பாரதம்உத்தியோக பருவம்

ரணம், உபமாஎன்னும் வடசொற்களின் திரிபுகள்.  புலவர் - புலவோர் என
ரகரவீற்றயல் அகரம் ஓவாயிற்று.                               (124)

65.-இது - அந்நகரத்துச்சதுரங்கசேனைகளின் தன்மை.

விரவுகான்மலரினும்பலவீரரின்விதங்கள்
பரவைவெண்மணலினும்பலபுரவியின்பந்தி
இரவில்வானமீனினும்பலயானையினீட்டம்
நிரைகொள்கார்த்துளியினும்பலதேரணிநிலையே.

    (இ - ள்.) (அந்நகரத்தில்), வீரரின் விதங்கள் - வீரர்களது பகுப்புக்கள்,
கான்விரவு மலரினும் பல - காட்டிற்பொருந்திய பூக்களின் தொகையினும்
மிகப்பலவாம்: புரவியின் பந்தி - குதிரைகளின் வரிசைகள், பரவை வெள்
மணலினும் பல-கடலின் வெள்ளிய மணல்களின் தொகையினும் மிகப்பலவாம்;
யானையின் ஈட்டம்-யானைகளின் கூட்டங்கள், இரவில் வானம்
மீனினும் பல - இராத்திரி காலத்தில் ஆகாயத்தில் (விளங்குகிற)
நட்சத்திரங்களின் தொகையினும் மிகப்பலவாம்; தேர் அணி நிலையே -
இரதங்களின் அழகிய வரிசைகள், நிரை கொள் கார் துளியினும் பல
கூட்டத்தைக் கொண்ட மேகங்களின் மழைநீர்த்துளிகளினும் மிகப்பலவாம்;
(எ- று.)          

   எனவே, நால்வகைப்படையும் அங்கு வரம்பிகந்தன என்பதாம்.
ரதகஜதுரகபதாதி என்பவற்றை எதிர்நிரனிறைபடக் கூறினார்.
முதல்வாக்கியத்தில் வீரரின்விதங்கள் என்றதில், காலாள்வீரர் மாத்திரமே யன்றி,
யானை தேர் குதிரைகளில் ஏறும் வீரரும் அடங்குவர்.  ஆகாயத்தில்
மின்னுதல்பற்றி, நட்சத்திரங்களுக்கு வான மீனெனப்பெயர்; மின்னுதல் -
விளங்குதல், பளபளத்தல், மின்னுவது, மீன்; வினைமுதற்பொருள்விகுதி
புணர்ந்து கெட்டுப் பகுதி முதல் நீண்ட காரணப்பெயர். இனி, கரியதாய்
அளவின்றிப் பரந்த வானமாகிய கடலிற்சஞ்சரிக்கும் மீன்கள்போல விளங்குவன
என்ற காரணமுங் கூறலாம்.                                    (125) 

66.- இது - அந்நகரத்துமாளிகைகளைப் பற்றியது.

ஆசிலாமறையந்தணராலயமொருபான்
மாசிலாமுடிமன்னவர்மாளிகையொருபாற்
காசிலாமதியமைச்சர்தங்கடிமனையொருபாற்
பேசிலாவளவணிகர்தம்பேரிடமொருபால்.

    (இ - ள்.) (அந்நகரத்து இராசவீதியிலே), ஒரு பால் - ஒருபக்கத்தில்,
ஆசுஇலா மறை அந்தணர் ஆலயம் - குற்றமில்லாத வேதங்களையுணர்ந்த
பிராமணர்களது கிருகங்களும்,- ஒரு பால் - ஒருபக்கத்தில், மாசு இலா
முடிமன்னவர் மாளிகை - குற்றமில்லாத கிரீடத்தையுடைய அரசகுலத்தாரது
கிருகங்களும்,- ஒரு பால் - ஒருபக்கத்தில், காசு இலா மதி அமைச்சர்தம்
கடிமனை - குற்றமில்லாத அறிவையுடைய மந்திரிகளது சிறப்பையுடைய
கிருகங்களும்,- ஒரு பால்-ஒருபக்கத்தில், பேசு இலா வளம் வணிகர் தம்பேர்
இடம் -