பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 147

ஒலிக்கப்பெற்ற அழகியதொரு சோலையில், அமர்ந்தனன் -
எழுந்தருளியிருந்தான்; (எ - று.) என்று இசைக்கும் நகர் என இயையும்.

    இரண்டாமடியில், இசைக்கும் - உவமவுருபு.  வண்டுணாமலராகிய
சண்பகத்தில் வண்டுகள் நின்று இசைக்கிறதாகக் கூறுதல் எங்ஙனம்,
பொருந்துமெனின்,- வண்டுகள் சண்பகமலரிலுள்ள தேனைக் குடித்தால்
இறந்துபடுமென்பதே யன்றி, மற்றைமலர்களிற்போலச் சாதாரணமாக
அதனிடத்திலும் மொய்த்துச்சேர்வது அசம்பாவிதமன் றென்று, இங்ஙனம்
வருமிடங்களிலெல்லாம் சமாதானங் கூறப்படும்; அன்றியும், மிகஉஷ்ணகரமான
சண்பகமும் அந்நகரத்தின் வளத்தால் வண்டுமொய்க்கும்படி
குளிர்ந்துள்ளதென்றுங் கூறலாம்; 'குளிர் செண்பகம்' என அடைமொழி
கொடுத்துக் கூறியது, இதற்கு ஒக்கும்.  அல்லது, மிக்க மதுபானமயக்கத்தைத்
தகாதவிடத்திற்சென்று சேர்தற்குங் காரண மென்னலாம்.  இனி, நின்று
என்பதற்கு - செண்பகமலரிற் சேராது தடைப்பட்டு நின்று என்று உரைப்பினும்
அமையும்.  செண்பகம் - சம்பகமென்பதன் திரிபு.  கோபுரத்துக்கு மகுடம் -
கலசத்தோடுகூடிய மேலிடம்.  சோலையில் அமர்ந்தது.  நெடுந்தூரம் வந்த
இளைப்பு ஆறுதற்பொருட் டென்க; துரியோதனனது நோக்கத்தை
நோக்குதற்குமாம்.  மூன்றாமடியில், தென்று இசை எனப்பதம்பிரித்து,
தென்றற்காற்றுப் பொருந்துதலையுடைய என உரைப்பாருமுளர்.  இச்செய்யுளில்
ஒவ்வோரடியிலும் முதலெழுத்து மாத்திரம் வேறுபட்டிருக்க, இரண்டு முதலிய
சில எழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள் வேறுபட்டு வந்தது - திரிபு என்ற
சொல்லணியாம்.                                           (129)

70.-கண்ணபிரான் சோலையில்தங்கியதைத் தூதுவர்
துரியோதனனுக்கு அறிவித்தல்.

அன்றுதூதுகொண்டிலங்கைதீவிளைத்தவரைவர்க்
கின்றுதூதுவந்தெயிற்புறத்திறுத்தனரென்னாத்
துன்றுதூதுவண்டினமுரறொடையலான்றனக்குச்
சென்றுதூதுவரியம்பினர்சேவடிவணங்கி.

     (இ -ள்.) (அப்பொழுது), தூதுவர் - தூதர்கள்,- சென்று -
(அரண்மனையிலுள்ள துரியோதனனிடம்) போய், சே அடி வணங்கி -
(அவனது) சிவந்த பாதங்களைத் தொழுது, துன்று தூது வண்டு இனம் முரல்
தொடையலான் தனக்கு - நெருங்கின தூதாகவிடப்பட்ட
வண்டுகளின்கூட்டங்கள் ஒலிக்கப்பெற்ற (நஞ்சாவட்டைப்) பூமாலையை
யுடையவனான அத்துரியோதனனுக்கு,- 'அன்று தூது கொண்டு இலங்கை தீ
விளைத்தவர் - முன்பு [ஸ்ரீராமாவதாரஞ்செய்த அக்காலத்தில்] தூதனாகிய
அநுமானால் (இராவணனது) லங்காபுரியில் நெருப்புப்பற்றவைத்தருளியவரான
திருமால், இன்று ஐவர்க்கு தூதுவந்து - இப்பொழுது
பஞ்சபாண்டவர்களின்பொருட்டுத் (தாமே) தூதாகிவந்து, எயில் புறத்து
இறுத்தனர் - (உனது நகரத்து) மதிலின் வெளியில் தங்கியுள்ளார்,' என்னா -
என்று, இயம்பினர் - சொன்னார்கள்; (எ - று.)