தமதுதூதுவனைக்கொண்டு இலங்கையை அழித்தவர் தாமே இப்பொழுது உனது நகரத்திற்குத் தூதாகவந்ததனால் உனது நகரத்திற்கு என்ன தீங்கு நேருமோ என்பது குறிப்பு. இராமதூதனாய்ச் சீதையைத்தேடிக் காணச்சென்ற அநுமான் அசோகவனத்தை அழித்தபின் இராவணனது ஏவலாளரால் வாலில் தீமூட்டப்பட்டு அதைக்கொண்டு இலங்காபுரியை எரித்தமை, மிகப்பிரசித்தம். இராமன், கிருஷ்ணன் என்ற இருவரும் திருமாலின் அவதாரமே யாதலால், 'இலங்கைதீவிளைத்தவர் தூதுவந்து இறுத்தனர்' என அபேதமாகக் கூறப்பட்டது. 'அன்று தூதுகொண்டு இலங்கை தீவிளைத்தவர் இன்று ஐவர்க்குத் தூதுவந்து எயிற்புறத்து இறுத்தனர்' என்ற தொடரால், திருமாலுக்கு இராமாவதாரத்தினும் கிருஷ்ணாவதாரத்தில் மிக்குள்ள சௌலப்பியமும், அடியார்களிடத்து வாற்சலியமும் நன்கு விளங்கும். 'முன்னோர் தூது வானரத்தின் வாயின் மொழிந் தரக்கன், மன்னூர்தன்னை வாளியினான் மாளமுனிந்தவனே, பின்னோர்தூ தாதிமன்னர்க்காகிப் பெருநிலத்தார், இன்னார் தூதனென நின்றான்" என்ற ஆழ்வாரருளிச்செயலை நினைத்துச் செய்யப்பட்டது இச்செய்யு ளென்னலாம். விளைத்தவர், இறுத்தனர் - ஒருவரைக்கூறும் உயர்வுப்பன்மை. வண்டுகள், தமது காதலைத் தெரிவித்தற்பொருட்டு மகளிரால் தூதுவிடப்பட்டவை; "சங்கங்கேய் செங்கைநல்லார்விடுத்தன சுரும்பின் சாலங், கொங்கெங்கே யெங்கேயென்று தனித்தனிகுடையுந்தாரான்" எனக் கீழ் நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கத்தில் அருச்சுனனைக்கூறியதுங் காண்க. இனி, தூது வண்டு - தூதுவிடுதற்கு உரிய வண்டுமாம். தூதுவிடப்படுதற்குரிய கிளி, மேகம், நாரை, அன்னம் முதலியவற்றுள் வண்டும் ஒன்றாதலால், 'தூதுவண்டு' எனப்பட்டது. துன்று வண்டு, முரல்தொடையல் - வினைத்தொகைகள். தூது என்ற சொல் ஒரே பொருளிற் பலமுறை வந்தது - சொற்பொருட்பின்வருநிலையணியாம். (130) 71.- துரியோதனனதுகட்டளையால் நகரத்தை அலங்கரித்தல். தொல்லைநாயகன்வந்தனனென்றலுஞ்சுரும்பார் மல்லன்மாலையானேவலான்மாநகர்மாக்கள் எல்லைநீண்மதில்வட்டம்யோசனையெழுநூறாஞ் செல்வமாநகர்த்தெருவினையொப்பனைசெய்தார். |
(இ -ள்.) தொல்லை நாயகன் வந்தனன் என்றலும் - '(யாவர்க்கும்) ஆதிநாயகனான கண்ணபிரான் எழுந்தருளினான்' என்று (தூதர்கள்) செய்தி கூறியவுடனே,- சுரும்பு ஆர்மல்லல் மாலையான் ஏவலால் - வண்டுகள் நிறைந்த அழகுள்ள பூமாலையையுடையவனான துரியோதனன் கட்டளையிட்டதனால்,- மா நகர் மாக்கள் - பெரிய அஸ்தினாபுரியிலுள்ள சனங்கள், - நீள்வட்டம் மதில் எல்லை ஏழு நூறு யோசனை ஆம் - நீண்டுவளைவாகச் சூழ்ந்துள்ள மதிலின் அளவு எழுநூறுயோசனை தூரமாகப்பெற்ற, செல்வம் மாநகர் - |