தாஞ்சால்புடனப்பதிவந்தனர் தானையோடும்" எனக் கூறப்பட்டவர்களை, அம்தண் என்பதற்கு - அழகையும் குளிர்ந்த கருணையையுமுடைய என்று உரைத்து முரசகேதனனுக்கு அடைமொழியாக்கினும் அமையும். திருமுகம் என்றது - தனது சொல்லாற்றலால் யுதிட்டிரனிடம் அவ்வரசர்களுக்குள்ள மதிப்பை நன்கு விளக்கும். 'முந்தத்திருமுகம் வரவிடுக' என்றது, போரை விரைந்து செய்தற்பொருட்டுத் திருமுகம் வரவிடுக' என்றது, போரை விரைந்து செய்தற்பொருட்டுத் தாம் துணையாய் வருதற்கு என்க; தங்களைத் துரியோதனன் படைத்துணையாக விரும்புமுன் நீ பத்திரிகையனுப்பிவிடுவாய் என்ற பொருளும் இதில் ஏற்படும். அவன்-துரியோதனனென்றுங் கொள்ளலாம். அந்தம் மன்னவர் எனப் பிரித்தால், அழகையுடைய அரசரென்று பொருள்படும்.(6) தருமன் உலூகனைத் தூதனுப்புதல். 7. | அரசர்போனபின்மால்பணிதவறுறாதம்முனிதனைநோக்கி முரசகேதனனீயெழுந்தருள்கெனமுனிவனைத்தொழுதேத்தி விரைசெய்தார்புனைவீடுமனெந்தைமெய்விதுரன்வேதியர்கோவை பரசினோமடியென்றுபின்னுரியசொற்பணித்தருளெனப்போந்தான். |
(இ -ள்.) அரசர் போன பின் - வந்த அரசர்கள்யாவரும் (தத்தம் நகருக்குச்) சென்றபின்பு, முரசகேதனன் - பேரிகைவடிவையெழுதிய கொடியையுடைய தருமபுத்திரன்,- மால் பணி தவறுறாது - திருமாலின் திருவவதாரமான கண்ணபிரானது கட்டளையைப் பிழையாமல் [கட்டளைப்படியே என்றபடி], அ முனிதனை நோக்கி - அந்த உலூக முனிவனைப் பார்த்து, நீ எழுந்தருள்க என - 'நீ கருணையுடன் தூது செல்வாயாக' என்றுகூறி, முனிவனை - அவ்வுலூகனை, தொழுது - வணங்கி, ஏத்தி - துதித்து, 'விரைசெய் - நல்வாசனையை வீசுகிற, தார் - பூமாலையை, புனை - தரித்துள்ள, வீடுமன் - பீஷ்மனும், எந்தை - எமது பெரியதந்தையான திருதராட்டிரனும், மெய் விதுரன் - சத்தியந்தவறாத விதுரனும், வேதியர் கோவை - அந்தணர்களுக்குத் தலைவனான துரோணாசாரியனும் என்னும் இவரை, அடி பரசினோம் என்று - திருவடிகளை நமஸ்கரித்தோம் என்று முதலிற்கூறி, பின் - அதன் பின்பு, உரிய சொல் பணித்தருள் - (நீ செல்லும் தூத காரியத்துக்கு) உரிமையுடைய சொற்களைக் கூறியருள்வாய்,' என என்று பிரார்த்திக்க,- போந்தான் (அம்முனிவன் புறப்பட்டுச்) சென்றான்; (எ - று.) இப்பாட்டில்,கண்ணன் முதலியோர் சென்றபின்பு தருமன் சிலகூறி வேண்டியபின் உலூகன் சென்றான் என்றதனால், கீழ் ஐந்தாங்கவியில் கண்ணன்செய்கையாக 'போக்கி' என்றதற்கு செல்ல உடன்படுத்தியென்று கருத்துக் கொள்க. முனி - கடவுளை எப்பொழுதுந் தியானஞ் செய்பவன் அல்லது திரிகால ஞானமுடையவன் என்றுபொருள்; இனி, எல்லாப்பற்றுக்களையும் முனிந்தவன் [வெறுத்துவிட்டவன்] ஆதலால் முனி என்று தமிழ்வகையால் காரணப்பொருள் கூறலாகாது. நோக்கி என என்று இயையு எழுந்தருள்க என்றதில், அருள் என்றதுணைவினை மரியாதையை |