பக்கம் எண் :

150பாரதம்உத்தியோக பருவம்

கூர் சகுனி' என அவனைக் கவி வெறுத்துக் கூறினர்.  என்னை -
எவனென்னும் வினாப்பெயர் இடைகுறைந்து 'என்' என நின்று ஐகாரச்சாரியை
பெற்றது.                                                   (132)

73.-துரியோதனன் கண்ணனுக்குஇடமமைத்துச் சபையில்
வீற்றிருத்தல்.

சீர்வலம்புரிதிகிரிசேர்செங்கையான்றனக்குக்
கார்வலம்புரிகோயிலுங்காட்சியுமமைத்துப்
போர்வலம்புரிநிருபருமிளைஞரும்போற்றத்
தார்வலம்புரியவனிருந்தனன்பொலந்தவிசின்.

     (இ -ள்.) (சகுனி கூறியபடியே எதிர்கொள்ளுதலை யொழிந்த பின்பு),-
வலம்புரி தாரவன் - நந்தியாவட்டமலர்மாலையையுடையவனாகிய
துரியோதனன்,- சீர் வலம்புரி திகிரி சேர் செம் கையான் தனக்கு -
சிறப்பையுடைய (பாஞ்சஜந்யமென்னும்) வலம்புரிச்சங்கும் (சுதரிசநமென்னுஞ்)
சக்கரமும் பொருந்திய சிவந்த திருக்கைகளையுடையவனான கண்ணபிரானுக்கு,
கார் வலம் புரி கோயிலும் காட்சியும் அமைத்து - மேகங்கள் சூழ்ந்து
செல்லுதற்கு உரிய [மேகமண்டலம் வரையில் உயர்ந்த] ஒரு சிறந்த
இருப்பிடத்தையும் (அதிற் பல) அலங்காரங்களையும் சித்தஞ் செய்து வைத்து,-
போர் வலம்புரி நிருபரும் இளைஞரும் போற்ற - போரில் (தம் தமது)
வெற்றியை விரும்புகின்ற (பல) அரசர்களும் தன் தம்பிமார்களும் (தன்னைப்)
புகழ்ந்து வணங்க, பொலம் தவிசின் இருந்தனன் - பொன்மயமான
சிங்காதனத்தில் வீற்றிருந்தான்; (எ - று.)

    எம்பெருமானுக்கென்று அமைத்த இருப்பிடமாதலின், அதனை 'கோயில்'
என்றது மிகப்பொருந்தும்.  காட்சி - காணுதற்கு உரிய அலங்காரத்திற்கு
ஆகுபெயர்.  'போர்வலம்புரி' என்ற அடைமொழியை இளைஞர்க்குங் கூட்டுக.
ஈற்றடியில், வலம்புரி - நஞ்சா வட்டை, தார் வலம்புரியவன் -
வலம்புரித்தாரவன் என விகுதி பிரித்துக் கூட்டுக.  பொன்+தவிசு =
பொலந்தவிசு; இப்புணர்ச்சி "பொன்னென்கிளவியீறுகெட முறையின், முன்னர்த்
தோன்றும் லகார மகாரம், செய்யுண்மருங்கிற் றொடரியலான" என்ற
தொல்காப்பிய விதியா லமைந்தது; பிற்காலத்தார் நிகண்டுகளில் 'பொலம்' என
ஒரு சொற் கொண்டுள்ளதனால், பொலம் கழல் என்று பிரித்து மகரவீற்றுப்
புணர்ச்சியின்பாற் படுத்துதலுமுண்டு.

    மேகத்திற்கும் கோயிலுக்கும் சம்பந்தமில்லாதிருக்கவும் சம்பந்தத்தைக்
கற்பித்துக் கூறியதனால், 'கார்வலம்புரி கோயில்' என்றது.
தொடர்புயர்வுநவிற்சியணி. இச்செய்யுளில் ஒவ்வோரடியிலும் முதலெழுத்துத்
தவிர இரண்டு முதலிய சில எழுத்துக்கள் ஒன்றி நின்று பொருள் வேறுபட
வந்தது திரிபு என்ற சொல்லணியாம்.                        (133)

74.-வீடுமன் முதலியோர்கண்ணனை எதிர்கொள்ளுதல்.

தொல்பகீரதிமைந்தனுந்துரோணனுஞ்சுதனும்
வில்விதூரனுங்கிருபனுமுதலியவேந்தர
்