உணர்க.)இனி, தொல்காப்பியத்து மரபியலில் "அந்தணாளர்க்கு அரசுவரைவின்றே" என்ற சிறப்புவிதிபற்றி வேந்தரென்றதாகவுங் கொள்ளலாம். மூவிருபத்து நூறாயிரம் மகிபர் - பண்புத்தொகைப் பன்மொழித்தொடர். மஹீபர் - பூமியைக் காப்பவர்; மஹீ - பூமி. இக்கவியில் 'அறுபது லட்சம் அரசர்', இரண்டுயோசனை தூரம், கீழ் 71-ஆங் கவியில் 'எழுநூறு யோசனை' என்பவற்றை அவ்வத்தொகையையே குறியாமல் மிகுதியை விளக்கும் அதிசயோக்தி யெனக் கருதுக. இம்மை மறுமை வீடு என்னும் மூன்று இடங்களிலும் யாவரும்பெறும் ஐசுவரியங்களெல்லாம் எம்பெருமானுடையவை யாதலால், 'செல்வ நாயகன்' என்றார்; 'செல்விநாயகன்' என்ற பாடத்துக்கு - செல்வத்துக்குத் தலைவியான திருமகளது கொழுந னென்க. நாயகற்கி யோசனை - குற்றியலுகரம் யகரம் வர இகரமானதென்றாவது, யகரமுதல் வடமொழி இகரத்தை முன்பெற்றதென்றாவது கொள்க. (134) 75.-கண்ணன் விதுரனதுமாளிகையினுட் செல்லுதல். வந்துவந்திருமருங்கினுமன்னவர்வணங்கப் பைந்துழாய்முடிப்பரமனுங்கண்மலர்பரப்பி அந்தமாநகர்புகுந்தபினரசனிற்புகாமற் புந்திகூரருள்விதுரன்வாழ்வளமனைபுகுந்தான். |
(இ -ள்.) (இங்ஙனம்), மன்னவர் - அரசர்கள், இருமருங்கினும் - இரண்டு பக்கங்களிலும், வந்து வந்து - (எதிர்கொண்டு) மிகுதியாக வந்து, வணங்க - (கண்ணபிரானை) நமஸ்கரிக்க,- பைந் துழாய் முடி பரமனும் - பசிய திருத்துழாய்மாலையைச்சூடிய திருமுடியையுடைய (யாவரினுஞ்) சிறந்தவனான அக்கண்ணனும்,- கண் மலர் பரப்பி - (தனது) தாமரை மலர்போலுந் திருக் கண்களால் (அவர்களைக்) குளிரப் பார்த்தருளி,- அந்த மா நகர் புகுந்த பின் - அந்தப் பெரிய அத்தினாபுரியினுட் சென்ற பின்பு,- அரசன் இல் புகாமல் - துரியோதனராசனது அரண்மனைக்குச் சென்று சேராமல், புந்தி கூர் அருள் விதுரன் வாழ் வளம் மனை புகுந்தான் - தத்துவ ஞானத்தையும் மிக்க அருளையுமுடைய விதுரன் வசிக்கின்ற எல்லா வளங்களையுமுடைய திருமாளிகையினுட் சென்றான்; (எ - று.) விதுரன் பரம பாகவதனாதலாலும், பாண்டவர்பக்கல் மிக்க பிரியமுடையவனாதலாலும், கண்ணன் அவன் மனைக்கே சென்றனன். கண்ணனது பஞ்ச பிராணன்களை யொத்த பஞ்ச பாண்டவர்களுக்குத் துரியோதனன் பகைவனாதலால், அவனரண்மனைக்குச் செல்லவில்லை. "வெற்றி விதுரன் கைவில்லிருக்க மேதினியில், மற்றவனை வெற்றிகொள்ளுமாறுண்டோ" என்று தருமபுத்திரன் கொண்ட சங்கைக்குப் பரிகாரமாக, கண்ணன் யாவரினும் வில்வித்தையிற் சிறந்த விதுரன் எதிர்ப் பக்கத்தில் வந்து போர்செய்து பாண்டவர்களை வெற்றியடைய வொட்டாமற் செய்யாதிருத்தற்கு ஓர் உபாயத்தை உத்தேசித்தும், விதுரன் வீட்டிற் புகுந்தனனென்க. இங்ஙனம் புகுந்தது, துரியோதனனுக்கு விதுரனிடத்தில் வெகுளி |