பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 155

சிலை -சங்கத்தை யேந்திய திருக்கையையுடைய கண்ணபிரானை,- அலர்ந்த
கோகனதம் காடு கண்டு என - மலர்ந்த தாமரைமலர்க் காட்டைக்
கண்டாற்போல, கண்டு - தரிசித்து, தன் கண் இணை களியா - தனது
கண்களிரண்டும் களிப்படைந்து, இ பிறப்பையும் தொலைத்தான் - இந்தச்
சன்மத்துக்கருமத்தையும் நீக்கினான்; வீடு கண்டவர்க்கு - முத்தியின்
சொரூபத்தை யறிந்தவர்களுக்கு, இயம்பவும் வேண்டுமோ - (ஒருவர்)
சொல்லவும்  வேண்டுமோ?  வேண்டா - வேண்டுவதில்லை; (எ - று.)

    எம்பெருமானது தன்மையை யுணர்ந்தவர்கள் முத்தியின் தன்மையை
யுணர்ந்தவர்களே யாவராதலின், அங்ஙனமே பரமபாகவதனான விதுரன்
கண்ணனைப் பரம்பொருளாக உணர்ந்து தரிசித்துத் தனது இருவினைகளும்
தொலைந்து ஜீவந்முக்தனாயினனென்க.  பிராரப்தம் ஒழிந்தமை இப்பாட்டினாற்
கூறப்பட்டது.  நான்காமடி - கவிக்கூற்று.  இவ்வடியிற் கூறிய
பொதுப்பொருள் முதல் மூன்றடிகளிற் கூறிய சிறப்புப்பொருளை விளக்குதலால்,
வேற்றுப்பொருள்வைப்பணி.குரிசில் - ஆண்பாற் சிறப்புப்பெயர்.
திருமாலின் முகம் வாய் கண் கை உந்தி பாதம் முதலிய உறுப்புக்களெல்லாம்
செந்தாமரைபோல்வன வாதலின், 'கோகனதக்காடு கண்டெனக்கண்டு' என்றார்.
கோகநதம் என்னும் சொல்லுக்கு - சக்கரவாகமென்னும் பறவைகள் தம்மில்
மகிழ்ந்து வாழப்பெறுவதென்றாவது, கோகமென்னும் நதியில் முதலில்
உற்பத்தியானதென்றாவது, பொருள்கொள்க.  காடு - தொகுதி யென்றபடி.  வீடு
- (இவ்வுலகப்பற்றை) விட்டு அடைவது; முக்தியென்னும் வடசொல்லின்
பொருளது.  கண்ணனைத் தாமரைக்காடென்றற்கு ஏற்ப, விதுரனது
கண்ணிணையை வண்டின மென்க.  இரண்டாமடியில் ஒவ்வொரு சீரின்
முதலெழுத்தும் ஒன்றிவந்தது, முற்று மோனை யெனப்படும்.          (138)

79.- விதுரன் கண்ணபிரானைத்தரிசித்துப் பரவசனாதல்.

உள்ளினானுணர்ந்துள்ளமுமுருகினானெழுந்து
துள்ளினான்விழுந்திணையடிசூடினான்றுயரைத்
தள்ளினான்மலர்த்தடக்கையாற்றத்துவவமுதை
யள்ளினானெனக்கண்களாலருந்தினானளியோன்.

     (இ -ள்.) அளியோன் - (கண்ணனது) அருளைப் பெற்றவனாகிய
விதுரன்,-உள்ளினான் - (கண்ணனைத்) தியானித்தான்; உணர்ந்து - (அங்ஙனம்
பகவானது சொரூபத்தை) நினைத்து அறிந்து, உள்ளமும் உருகினான் -
மனமுங்கரைந்தான்; (அங்ஙனம் மனங்கரைதற்குக் காரணமான மிக்ககளிப்பால்),
எழுந்து துள்ளினான் - (ஆநந்தபரவசனாய்) எழுந்து குதித்தான்; விழுந்து -
(கீழே) விழுந்து, இணை அடி சூடினான் - (கண்ணனது) உபயபாதத்தை(த்
தலையின்மேல்) அணிந்து கொண்டான்; துயரை தள்ளினான் -
பிறவித்துன்பங்களையெல்லாம் ஒழித்தான்: மலர் தட கையால் தத்துவம்
அமுதை அள்ளினான் என - தாமரைமலர்போன்ற பெரிய தன்கைகளால்
மெய்ப்பொரு