பக்கம் எண் :

158பாரதம்உத்தியோக பருவம்

பெயர். அம்ம - வியப்பிடைச்சொல்.  'ஆறு நூறாயிரம் மடையர்' என்றது,
கவிகளுக்கு இயற்கையான அதிசயோக்தி: மிகப்பல ரென்றபடி.  மடை -
சமைத்தல்; தொழிற்பெயர்; மடு - பகுதி; ஐ - விகுதி; அதனையுடையவர்,
மடையர்; (இச்சொல் அறிவிலாதவர் எனப்பொருள் படுமிடத்தில், மடைமை
யென்னும் பண்பினடியாப் பிறந்ததாம்.) புவனங்கள் முழுவதையும் என்றதில்,
திரிலோகத்திலுமுள்ள சராசரங்களான எல்லாவுயிர்களும் அடங்கும்.  அரசர்
வெளிப்படையாக வன்றிக் கண் முகம் முதலிய உறுப்புக்களின் குறிப்பாற்கூறும்
இயல்பினரும், அவர்களிடத்துப் பயில்பவர் அக்குறிப்பையுணரும்
நுண்ணறிவுடையவருமாயிருப்பாராதலால், 'மடையர் தம்மை நோக்கினன்
அவர்களும் விரைவுடன் சமைத்தார்' என்றார்.                (141)

82.-இதுவும் அது.

வந்தகொற்றவேல்வரிசிலையவர்க்கும்வாளவர்க்குங்
கந்தடர்ப்பனகரிக்கும்வெங்கவனவாம்பரிக்கும்
ஐந்துபத்துநூறாயிரமரசர்க்குமெவர்க்கும்
இந்திரற்குமெய்தாவமுதெனும்படியியற்ற.

இதுவும், மேற்கவியும் - குளகம்.

     (இ -ள்.) வந்த - (கண்ணனுடன்) வந்த, கொற்றம் வேல்
வரிசிலையவர்க்கும் - வெற்றியைத்தரும் வேலாயுதத்தையும் கட்டமைந்த
வில்லையுமுடைய வீரர்களுக்கும், வாளவர்க்கும் - வாளாயுதத்தை யுடைய
வீரர்களுக்கும், கந்து அடர்ப்பன கரிக்கும் - கட்டுத்தறியை முறிப்பனவாகிய
மதயானைகளுக்கும், வெம் கவனம் வாம்பரிக்கும் - விரைந்த நடையையுடைய
தாவிப்பாயும் குதிரைகளுக்கும், ஐந்து பத்து நூறு ஆயிரம் அரசர்க்கும் -
ஐம்பது லட்சம் அரசர்களுக்கும், எவர்க்கும் - மற்றும் எல்லோர்க்கும்,
இந்திரற்கும் எய்தா அமுது எனும்படி இயற்ற - தேவேந்திரனுக்குங் கிடைக்காத
தேவாமிருதமென்னும்படி (உணவுகளைச்) சித்தஞ்செய்ய; (எ - று.)- 'அருந்தி'
என மேற்கவியோடு தொடரும்.

    முதலடியிற் கூறியவர் - வேல்வீரரும் வில்வீரரும் வாள்வீரரும்.  கந்து -
ஸ்கந்தம், கவனம் - கமநம்; வடசொற்றிரிபுகள்.  கரத்தையுடையது, கரி; கரம் -
கை, இங்கே துதிக்கை; எவர்க்கும் என்றது, பரிசனங்களை உட்படுத்தி.  (142)

83.-கண்ணனும் அவனுடன்வந்தோரும் விருந்துண்டு
மகிழ்ந்திருத்தல்.

அமைத்தவாசநன்னீர்கொடுமஞ்சனமாடிச்
சமைத்தபல்கறியடிசிறம்விருப்பினாலருந்தி
உமைக்குநாயகனிரவொழித்தருளினானுதவ
இமைப்பிலாரமுதருந்தியவியல்பெனவிருந்தார்.

     (இ -ள்.) உமைக்கு நாயகன் இரவு ஒழித்து அருளினான் -
உமாதேவிக்குக் கணவனாகிய சிவபிரானது யாசகத்தொழிலைப் போக்கிக்