பெற்றுஅதனாற் செருக்கி எப்பொழுதுஞ் சூரியனை வளைத்து எதிர்த்துப் போகவொட்டாது தடுத்துப் போர்செய்கின்றன ரென்றும், அந்தணர்கள் சந்தியாகாலங்களில் மந்திர பூர்வமாகக் கையிலெடுத்து விடும் அர்க்கியதீர்த்தங்கள் வச்சிராயுதம் போலாகி அவர்கள்மேல் விழுந்து அவர்களை அப்பால்தள்ளிச் சூரியனது சஞ்சாரத்துக்குத் தடையில்லாதபடி செய்கின்றனவென்றும் வேதம் கூறும். மாலைப்பொழுதிற் செவ்வானம்பரந்ததை இங்ஙனம் அடிபட்ட அரக்கரது இரத்தம் பட்டுச்சிவந்ததாக உத்பிரேக்ஷித்தார்; ஏதுத்தற்குறிப்பேற்றவணி. இரண்டாமடியிலுள்ள உருவகம் இதற்கு அங்கமாய் நின்றது. அம்பு என்ற ஒருசொல்லே இங்கு இருபொருள்பட்டு நீராகிய அம்பு எனப்பட்டது; ச்லிஷ்டரூபக மெனப்படும் சிலேடை பொருந்தின உருவகமென்க. அம்பு என்னுஞ்சொல் - பாணத்தைக் குறிக்கும்போது தென்மொழியும், நீரைக் குறிக்கும்போது வடமொழியுமாம். அம்புசெலுத்துதற்கு வில் இன்றியமையாத கருவியாயிருத்தல்போல, இந்தநீரைச்செலுத்துதற்கு வேதமந்திரம் இன்றியமையாமையின், இதனை 'வில்' என்றது. சுருதி - இங்கு, காயத்திரி மந்திரம். இவ்வரக்கர்கள் என்றும் அழியாதவராதலாலும், எப்பொழுதுஞ் சூரியனையே எதிர்ப்பவராதலாலும், 'பரிதிதன் பெரும் பகைவர்' எனப்பட்டனர். (146) 87.-மாலைப்பொழுதிற்கடலோரத்தில் விளங்குகிற பவழக்கொடிகளின் வருணனை. தரங்கவாரிதிப்புறத்தெதிர்மலைந்தவெஞ்சமரி லுரங்கொள்கூர்நெடும்படைகளாலுடன்றமந்தேகர் துரங்கமேழுடைக்கடவுளைநிரைநிரைதுணித்த கரங்கள்போன்றனகரைதொறும்வளர்துகிர்க்காடு. |
(இ -ள்.) கரைதொறும் - கடற்கரையி லெங்கும், வளர் - வளர்ந்து தோன்றுகிற, துகிர் காடு - பவழக்கொடிகளின் கூட்டங்கள்,- தரங்கம் வாரிதி புறத்து - அலைகளையுடைய கடலின் மேலிடத்தில், எதிர் மலைந்த வெம் சமரில் - எதிர்த்துப் போர்செய்த கொடிய யுத்தத்தில், உடன்ற - பெருங்கோபங்கொண்ட, மந்தேகர் - மந்தேகரென்னும் அரக்கர், உரம்கொள் கூர் நெடும் படைகளால் - வலிமையைக்கொண்ட கூர்மையாகிய பெரிய (தமது) ஆயுதங்களால், துரங்கம் ஏழ் உடை கடவுளை - ஏழு குதிரையையுடைய சூரியனை, நிரை நிரைதுணித்த - வரிசை வரிசையாகத் துண்டு செய்த, கரங்கள் - கிரணங்களாகிய கைகளை, போன்றன - ஒத்தன; (எ - று.) கரங்கள் - ச்லிஷ்டரூபகம். கரம் என்பது இவ்விருபொருளு முடையதாதலை "கரமென்ப கிரணஞ் செங்கை கழுதைநஞ் சிறுத்தலும் பேர்" என்னும் நிகண்டினாலும் அறிக. தரங்கவாரிதி, வாரிதி - நீர் தங்குமிடமெனக் கடலுக்குக் காரணக்குறி; வாரி - நீர். உடன்ற, உடல் - வினைப்பகுதி. துரங்கம் - துரிதமாகச் செல்வது; காரணப்பெயர். கடலில் வளர்ந்த பவழக்கொடிகளை, அக்கடலின்மீது வானத்திற்பொருத மந்தேகரால் ஆயுதங்கொண்டு துணித்துத் தள்ளப் |