பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 163

பட்டசூரியனது கைகள்போலுமெனக் குறித்தார்; தன்மைத்தற்
குறிப்பேற்றவணி.                                          (147)

88.-அவ்வந்திமாலையிற்குவிந்த தாமரைமலர்களின்
வருணனை.

நீதியிற்புகல்பகலெலாநீரரமகளிர்
மீதுறைத்தெழும்வெவ்வெயில்படாவகைவிரித்துப்
போதுபுக்கதென்றினம்படச்சுருக்கியபூம்பட்
டாதபத்திரம்போன்றனதாமரையடவி.

     (இ -ள்.) தாமரை அடவி - (மாலைக்காலத்தில் குவிந்த) தாமரை மலர்த்
தொகுதிகள்,- நீதியின் புகல் பகல் எலாம் - முறைமையாகச் சொல்லப்படுகிற
பகற்பொழுது முழுவதிலும், உறைத்து எழும் வெம் வெயில் - உக்கிரமாக
எழுகிற உஷ்ணமாகிய சூரியனொளி, நீர் அரமகளிர்மீது - நீரில்வாழுந்
தெய்வமகளிர்மேல், படாவகை - பட வொண்ணாதபடி, விரித்து -
பரப்பப்பட்டிருந்து, - போது புக்கது என்று - அப்பகற்பொழுது
ஒடுங்கிவிட்டதென்ற காரணத்தால், இனம்பட சுருக்கிய - வரிசையாக
மடக்கப்பட்ட, பூ பட்டு ஆதபத்திரம் - அழகிய பட்டுக்குடைகளை, போன்றன
- ஒத்தன; (எ - று.)

    நீரின்மீது பகல்முழுவதும் மலர்ந்திருந்து அப்பகல்கழிகையில் குவிந்த
தாமரைமலர்களை, நீர் தன்னிடத்தில் வாழுந் தேவமாதர் மீது சூரியகிரணம்
பட்டு உறைக்காதபடி பகல்முழுவதும் மேலே விரித்துப் பிடித்து அப்பகல்
கழிகையில் மூடிவிட்ட குடைகளைப் போன்றனவென்று வருணித்தார்; இதுவும்,
தன்மைத்தற்குறிப்பேற்றவணி.வெண்தாமரை மலர்களை வெண்பட்டுக்
குடைகளாகவும், செந்தாமரைமலர்களைச் செம்பட்டுக் குடைகளாகவுங்
கொள்க.ஆதபத்ரம் - வெயிலினின்று காப்பதென்று பொருள்; ஆதபம் -
வெயில்:நன்றாகத்தபிப்பது.  வெம்மையுடையது, வெயில் எனக் காரணக்குறி.
நீரரமகளிர் - ஜல தேவதாஸ்திரீகள்.  அரமகளிர் - அமரமகளிர் என்பதன்
மரூஉ; அரம்பைமகளிர் என்பதன் விகாரமுமாம்.  நீதியின் விரித்து என
இயைத்து, தருமமாக மலர்த்திப்பிடித்து என்றுமாம்.             (148)

89.-இது -அந்திக்காலத்தில் அந்நகரம் இருந்த காட்சி.

கலந்துமங்கலமுழவுவெண்சங்கொடுகறங்க
மிலைந்தபூங்குழல்வனிதையர்மெய்விளக்கெடுப்பக்
கலந்ததாமரைத்தடமெலாங்குவிந்ததுகண்டு
மலர்ந்ததாமரைவாவிபோன்றதுநகர்வட்டம்.

     (இ -ள்.) (மாலைப்பொழுதில்), மங்கலம்முழவு - மங்கலகரமான
பேரிகைகள், வெள் சங்கொடு - வெண்ணிறமான மங்கலச்சங்குகளுடனே,
கலந்து - கூடி, கறங்க - ஒலிக்கவும், மிலைந்த பூ குழல் வனிதையர் - சூடின
மலர்களையுடைய கூந்தலையுடைய மகளிர், மெய் விளக்கு எடுப்ப -
உண்மையான தீபங்களை யேந்தவும், நகர் வட்டம் -