பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 165

சிங்கந்தாங்கினதாகச் சித்திரித்துச் செய்யப்பட்ட பெரியபீடத்திலே, அழகுடன்
இருந்த - பொலிவோடு எழுந்தருளியிருந்த, புரவலன் தனை -
காத்தற்றொழிலில்வல்லவனான கண்ணபிரானை, புண்ணியம் விதுரனும் -
நல்வினைகளையுடையவிதுரராசனும், போற்றி - வணங்கி, (எ - று.) -
'என்றான்' என அடுத்தகவியோடு தொடரும்.

    புங்கவம் என்பதற்கு ஆண்பசு [எருது] என்று பொருள்; காளை,
சிங்கம்,யானை, புலி முதலிய சொற்கள் - உயர்திணையில் வரும்பொழுது
சிறப்புப்பொருளைக் குறிப்பன வாகுதலால், தலைவனென்கிற பொருளில்
புங்கவனென்றது.  உரகம் - (காலில்லாமையால்) மார்பினால் (நகர்ந்து)
செல்வது; உரம் - மார்பு.  அகல் முதலியவற்றில் எரியும் தீச்சுவாலை
ஆதிசேஷனுடைய சிரசிலுள்ள மாணிக்கங்களை யொத்திருக்கு மென்க;
உவமையணி.மணிமுடி என்பதை - முடிமணி என மாறுதல் பொருந்தும்.
'ஆயிரமாயிரரேந்த' என்றும் பாடம்.  பரமபாகவதனாதலாலும், கண்ணபிரான்
தன்வீட்டுக்கு எழுந்தருளும் பாக்கியமுடைமையாலும், 'புண்ணிய விதுரன்'
என்றார்.                                                 (150)

91. 

பொங்கராவணைபொலிவறப்போந்தபின்பொதுவர்
தங்கள்பாடியில்வளர்ந்துமாமருதிடைத்தவழ்ந்து
கங்கைமாநதிகால்வழிகருணையங்கடலே
யிங்குநீதனிநடந்தவாறுரைத்தருளென்றான்.

     (இ -ள்.) (பாற்கடலிலே), - பொங்கு - சீறுந்தன்மையுள்ள, அரா -
ஆதிசேஷனாகிய, அணை - திருப்பள்ளிமெத்தை, பொலிவு அற - (நீ
இவ்வுலகத்தில் எழுந்தருளிவிட்டமையால்) விளக்கத்தை யொழியும்படி,
போந்தபின் - (அங்குநின்று இங்குத்) திருவவதரித்த பின்பு, பொதுவர்
தங்கள் பாடியில்வளர்ந்து - இடையர்களது சேரியான கோகுலத்திலே
வளர்ந்தருளி, மாமருதிடை தவழ்ந்து - பெரிய இரட்டை மருதமரத்தின்
நடுவிலே தவழ்ந்துசென்றவனாய், கங்கை மாநதி கால் வழி - சிறந்த
கங்காநதி திருவடியினின்றுபெருகப்பெற்ற, கருணை அம் கடலே - அழகிய
கிருபா சமுத்திரமே!  நீஇங்கு தனி நடந்த ஆறு உரைத்தருள் - நீ
இவ்விடத்தில் [இப்பொழுது]தனியே எழுந்தருளின காரணத்தைக்
கூறியருள்வாய்,' என்றான் - என்றுகூறினான், (விதுரன்); (எ - று.)

    "பாற்கடலில் தங்குகின்ற திருமாலாகிய இந்நாராயணமூர்த்தி,
ஆதிசேஷனாகிய பாயலைவிட்டு மதுரைக்கு வந்தானன்றோ!" என்று
கூறியுள்ளபடி பாற்கடலிற் பாம்பணையிற் பள்ளிகொள்ளும் பரமனே
திருவவதரித்ததனால் 'பொங்கராவணை பொலிவறப்போந்தபின்' என்றார்:
இவ்வாறு கூறுவது, கடவுளின் அம்சமுழுவதும் அப்பாற்கடலி லில்லாமையா
லென்க.

     முதல்மூன்று அடிகள் - விதுரன் கண்ணபிரானைப் போற்றியபடி.
போந்த - இதில் பகுதியாகிய போ என்பதைப் புகு என்பதன் மரூஉ என்பர்.
பொதுவர் தங்கள் பாடி - திருவாய்ப்பாடி.  திருமால் உலகமளந்த காலத்தில்
மேலே சத்தியலோகத்திற்சென்ற அப்பிரா