பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 169

மீதுகண்வளர்ந்தான் - பரிமளத்தையுடைய அன்று மலர்ந்த
மலர்களைக்கொண்டு பரப்பப்பட்ட படுக்கையின் மேற்
பள்ளிகொண்டருளினான்; (எ - று.)

     உம் -எச்சம்.  மூன்றாமடியிற் கூறியது, இரவில் துயில்கொள்ள
வேண்டிய பொழுது வந்ததைக் குறித்தற்கு அடையாளமாக வாத்தியம்
வாசிக்கப்படுதலை.  முற்காலத்தில் அரண்மனைகளில் அவ்வக்காலங்கள்
வந்தமையை அரசர்கள் அறியுமாறு வாத்திய முழக்கத்தால் அறிவித்தல், மரபு.
கொடுந்துடி - கடூரமான [மிக்க] தொனியையுடைய துடி யென்க; இனி,
கண்ணபிரானிருக்குமிடத்தில் ஒலிப்பதால், பாண்டவதூதனாக வந்த
அப்பிரானிடத்தும் பகைமைகொண்டுள்ள துரியோதனாதியர்க்குக் கொடிய துடி
யென்றலும் ஒன்று; ஒலியின் தன்மையை வாத்தியத்தின் மேலேற்றிக் கூறிய
உபசாரவழக்கு:  இனி, வளைந்த துடி யென்பாரு முளர்.  மன்றல் - வாசனை.
நாள் மலர் - புதிய மலர்.  மலர்ப்பாயல் - புஷ்ப சயநம்; இது, விதுரன்
கண்ணபிரானுக்காக அமைத்ததென்க.  கண்வளர்தல் - ஒரு சொல்.   (156)

97.-இனி - இராத்திரிகாலவருணனை.

குளிருமாமதிமுகத்தொளிர்குமுதவாய்மலர்த்தித்
தளவவாணகைபரப்பிவண்சததளமலர்க்கை
அளவிலேகுவித்தளியொடுமகன்றிலாமையினாற்
களிகொடோள்விலைக்கணிகையைப்போன்றதக்கங்குல்.

     (இ -ள்.) குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுதம் வாய் மலர்த்தி -
குளிர்ச்சியாகவுள்ள பெரிய பூர்ணசந்திரன் போன்ற தனது முகத்திலே
விளங்குகிற செவ்வாம்பல் மலர்போன்ற வாயைத்திறந்து [குளிர்ந்த பெரிய
சந்திரமண்டலத்தினெதிரிலே விளங்குகிற ஆம்பலரும்புகளின் நுனியை
மலரச்செய்து], தளவம் வாள் நகை பரப்பி - முல்லையரும்பு போன்ற
பிரகாசமான பற்களி னொளியைப் புன்சிரிப்பினாற் பரவச்செய்து [முல்லை
மலர்களின் ஒள்ளிய விளக்கத்தை வெளித்தோற்றி], வள் சத தளம் மலர் கை
அளவிலே குவித்து அளியொடும் அகன்றிலாமையினால் - அழகிய தாமரை
மலர்போன்ற (தன்) கையை (ப் பொருள்வந்த) அளவிலே குவியச் செய்து
(வெளித்தோற்றத்துக்கு) அன்போடு நீங்காமையால் [அழகிய தாமரை
மலரினிடத்தை (வண்டுகள் வந்து சேர்ந்த) அளவிலே குவியச்செய்து
அவ்வண்டுகளோடும் நீங்காமையால்], அ கங்குல் - அவ்விராத்திரி, களி
கொள் விலை தோள் கணிகையை - (பொருள் கொடுப்பவர் பலருந் தழுவிக்)
களிப்புக் கொள்ளுதற்கிடமான தோள்களையுடைய வேசையை, போன்றது -
ஒத்தது; (எ - று.)

    இப்பாட்டு - சிலேடையுவமையணி.  இதில், முதல் மூன்றடி -
விலைமகளுக்கும், இரவுக்கும் சிலேடையாக ஒரு பொருள் பட்டது.  அளி -
அன்பும் வண்டு மாதலை "வண்டின் பெயரு மதுவுங்கொடையும் அன்புங்
கூறும் அளியென் கிளவி" என்ற திவாகரத்தாலும் அறிக.  அளி - அன்பைக்
குறிக்கையில் தமிழும், வண்டைக்குறிக்