பக்கம் எண் :

170பாரதம்உத்தியோக பருவம்

கையில்ஸம்ஸ்கிருதமுமாம்.  தனது முகமண்டலத்திலுள்ள அதரத்தினழகை
வெளிக்காட்டி மினுக்குதலும், வாய் மலரைத்திறந்து பல்லினழகு தோன்றப்
புன்சிரிப்புச் செய்தலும், சமயம் பார்த்துக் கை நீட்டிப் பணம்பறித்தலும்,
மனத்திற் சிறிதும் அன்பில்லாதிருந்தும் பொருள்காரணமாக வெளியில்
அன்பைமிகுதியாகக் காட்டுதலும் ஆகிய வேசையரியல்புகளும், சந்திரனுதித்த
மாத்திரத்தில் ஆம்பல் மலர்தலும், முல்லை மலர்விளங்குதலும், தன்னில்
மொய்த்த வண்டோடு தாமரை குவிதலும் ஆகிய இரவின் இயல்புகளும் இதில்
விளங்கும்.  வேசைக்கு ஆகும்பொழுது, அளியொடும் அகன்றிலாமையினால்
என்பதற்கு - அன்பினுடன் பரவாமையால் என உரைப்பினும் பொருந்தும்.
வடமொழியிற் பெண்பாற்சொல்லும் பலர்க்கும் பொதுவுமாகிய இரவைப்
பொதுமகளாகவருணித்தல்மிகப் பொருந்துமாறு காண்க.  குமுதம், தளவம் -
அவற்றின் மலர்களுக்கு முதலாகுபெயர்.  வாள் என்பது -
ஒளியையுணர்த்தும்பொழுது, உரிச்சொல்லாம்; 'வாளொளியாகும்' என்பது
தொல்காப்பியம்.  சததளம் என்பதற்கு - நூறு [மிகப்பல] இதழ்களையுடைய
தென்றும், கணிகா என்பதற்கு - (செல்வத்தையே எப்பொழுதும் விரும்பி)
எண்ணுபவளென்றும் காரணப்பொருள்.  விலைக்கணிகை - தனது
இன்பத்தைப் பொருளுக்கு விற்றலையுடைய கணிகை.  வேசைக்கு
ஆம்பொழுது, சததள மலர்க்கை அளவிலே குவித்து என்பதற்கு - வருபவர்
அளவிற்கேற்பத் தனது கையைக் கூப்பி யுபசரித்து என்றலுமொன்று
சததளம் -நூறாகிய இதழையுடையதெனப் பண்புத்தொகையன்மொழி.(157)

98.- இருள் நீங்கிக்கீழ்வானம் வெளுக்கச் சூரியகிரணங்கள்
வெளித் தோன்றுதல்.

அளைந்தவாரிருட்கடல்பொறாதொருபுடையண்டம்
பிளந்ததாமெனக்கரும்படாம்பீறியதென்ன
வளைந்தவேழ்கடல்வற்றமேல்வடவையின்முகத்தீக்
கிளர்ந்ததாமெனக்கிளர்ந்தனவிரவியின்கிரணம்.

     (இ -ள்.) அளைந்த - (எங்கும்) பரவி நிறைந்த, ஆர் இருள் -
போக்குதற்கு அரிய இருட்கூட்டமாகிய, கடல்-கடல் வெள்ளத்தை, பொறாது -
பொறுக்கமாட்டாமல், அண்டம் - இவ்வண்டகோளம், ஒரு புடை - ஒரு
பக்கத்தில் [கீழ்த்திசையில் என்றபடி], பிளந்தது ஆம் என - பிளந்தது
போலுமென்று சொல்லவும்,- கரும் படாம் பீறியது என்ன -
கருநிறமுடையதொரு பெருஞ்சீலை (ஒரு பக்கத்திற்) கிழிந்தது போலுமென்று
சொல்லவும்,- வளைந்த ஏழ் கடல் வற்ற - (உலகத்தைச்) சூழ்ந்துள்ள ஏழ்
கடல்களும் வற்றும்படி, வடவையின் முகம் தீ - படபாமுகாக்கினி, மேல்
கிளர்ந்தது ஆம் என - மேலே எழுந்ததுபோலு மென்று சொல்லவும்,
இரவியின் கிரணம் - சூரியனது கிரணங்கள், கிளர்ந்தன - வெளி விளங்கின;

    பின்மாலைவேளையில் கன்னியிருள் மிக்கிருக்கையில் திடுக்கென்று
கீழ்வானம் வெள்ளென்னச் செஞ்சுடர் ஞாயிற்றின் கிரணங்