சோதி- க்ஷத்திரிய தேஜசு; "உறங்குமாயினு மன்னவன் தன்னொளி, கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்" எனக் கூறியபடி, தாம் உறங்குகையிலும் உலகத்தைக் காக்கின்ற அரசரது தெய்வத்தன்மையோடு கூடிய ஒளி யென்க; இனி, புகழ் என்றுங் கொள்ளலாம். வேதம் - பிறநூல்கள் போல ஒருவராற் செய்யப்படாமல் கடவுளால் வெளியிடப்படுதல்மாத்திரமாய்க் கடவுளைப்போலவே நித்தியமாய் என்றும் ஒருபடிப்பட இருத்தலால் 'பழையசுருதி' எனப்பட்டது. உயிரினும் வியப்புற - ஒவ்வொருபிராணிக்கும் தன்தன் உயிரினிடத்தில் எவ்வளவு அன்பு இருக்குமோஅதனினும் அதிகமாகத் துரியோதனனுக்கும் இவ்வரசர்களுக்கும் ஒருவர்க்கொருவர் அன்பு உள்ள தென்க.ஆறுவகையைந்துபத் தொடறுபத்தொராயிரவர் - ஐந்து பத்து - ஐந்தாகிய பத்துஎன ஐம்பது; ஆறுவகை யைந்து பத்து - ஆறினாற் பெருக்கப்பட்ட ஐம்பது என முந்நூறு. முந்நூறாயிரவரும், அறுபத்தொராயிரவரும் எனத் தனித்தனி -இயைக்கவே, மூன்று நூறாயிரத்து அறுபத்தொரு ஆயிர மென்னுந் தொகையையுடையராயிற்று. இனி, நீதியாறு வகை - அறுவகை முறைமைகளையுடைய,ஐந்துபத்தொடு அறுபத்தொராயிரவர் - ஐம்பது ஆயிரத்தோடு அறுபத்தொருஆயிரங் கூடிய லட்சத்துப் பதினோராயிரம் பேர் என்று உரைப்பாரு முளர்.மூன்றாமடியின் கருத்து - மிகப்பலரென்பது. ஆறுவகை நீதி - ஓதல்,வேட்டல், ஈதல், உலகோம்பல், படைபயிற்றல், பொருதல் என்னும்அரசரறுதொழி லென்றேனும்; அறநிலையறம், மறநிலையறம்;அறநிலைப்பொருள், மறநிலைப் பொருள்; அறநிலையின்பம், மறநிலையின்பம்என்னும் அரசிய லாறென்றேனும்; அமைச்சு, நாடு, அரண், பொருள், படை,நட்பு என்னும் ஆறு அங்கமென்றேனும் கொள்க. திறலுக்குத் தீது - தோல்வி. அநேகர் - ஒன்றல்லாதவர்; எனவே, பலர்; ந + ஏக எனப் பிரிந்து புணரும். அக்குரோணி - அகௌஹிணி என்னும் வடசொல்லின் சிதைவு; அது - தேர்இருபத்தோராயிரத்தெண்ணூற்றெழுபது, யானை - இருபத்தோராயிரத்தெண்ணூற்றெழுபது, குதிரை - அறுபத்தையாயிரத் தறுநூற்றுப்பத்து, காலாள் -லக்ஷத்தொன்பதினாயிரத்து முந்நூற்றைம்பது; ஆக இரண்டுலக்ஷத்துப்பதினெண்ணாயிரத் தெழுநூறு கொண்டது.
இதுமுதல் நாற்பத்தொருகவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள் விளங்காய்ச்சீர்களும்,ஏழாவது விளச்சீருமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீர்ஆசிரியவிருத்தங்கள். (160) 101. | தொக்கவெண்கவரியாலவட்டநிரைசொட்டை வாள் பரிசைதுகிலுடன், கைக்களாசியிவைகொண்டுலாவிவரு கன்னி மங்கையர்களனைவரு, மிக்கவேதியர்கள் வல்லபல்கலைவிதத்திலுள்ளவர்கள் யாவருந், தக்கதம்பியரும் வந்துசூழவுயர்தரணிமேனிருபர் தம்பிரான். |
(இ -ள்.) தொக்க - (கற்றையாக) அடர்ந்துள்ள, வெள் கவரி - வெண்ணிறமான சாமரங்களும், ஆலவட்டம் நிரை - ஆலவட்டங் |