வீறுகோளணி. துலாம் - இங்கு, உத்திரத்தின் உறுப்பு. நிரைத்த - அளவொத்து அமைந்த என்றபடி, வைடூர்யமென்னும் வடமொழி, முதற்போலிபெற்றது. பத்மராகம் - (செந்) தாமரை மலர்போலச் செந்நிறமுடையது. துலாம் - கைத்துண்டுமாம். (162) 103. | முட்டநித்தில நிரைத்தபந்தரி னகைத்தசீரரிமுகத்தகால், வட்டமெத்தைகொடமைத்தபீடமிசை வாசவன் கொலெனவைகினான், பட்டவர்த்தனருமகுடவர்த்தனரும்வந்துசேவடிபணிந்தபின், இட்டபொற்றவிசின்முறைமையாலினிதிருக்கவென்றவரை யேவியே. |
(இ -ள்.) முட்ட - மிகநெருங்கும்படி, நித்திலம் நிரைத்த - முத்துக்களைஒழுங்காகக் கோத்து அமைக்கப்பட்ட, பந்தரின் - பந்தலின் கீழ்,- நகைத்த சீர்அரி முகத்த கால் - சிரிக்கின்ற தன்மையையுடைய சிங்கத்தின் முகவடிவமாகச்சித்திரிக்கப்பட்ட கால்களையுடையதும், வட்டம் மெத்தை கொடு அமைத்த -வட்டவடிவமான மெத்தையைக்கொண்டு மேல் அமைத்து வைக்கப்பட்டதுமான,பீடம் மிசை - சிங்காதனத்தின்மீது, வாசவன்கொல் என - தேவேந்திரனோவென்று (பார்ப்பவர்) கருதும்படி, வைகினான் - (வந்து) வீற்றிருந்து,-பட்டவர்த்தனரும் மகுடவர்த்தனரும் வந்து சே அடி பணிந்த பின் -பட்டந்தரித்த அரசர்களும் மகுடந் தரித்த அரசர்களும் வந்து சிவந்த (தனது)பாதங்களை நமஸ்கரித்தபின்பு, இட்ட பொன் தவிசில் இனிது இருக்க என்று-அங்கு இடப்பட்டுள்ள பொன்மயமான ஆசனங்களில் இனிமையாகஇருப்பீர்களாக வென்று, அவரை - அவ்வரசர்களை, முறைமையால் -(அவரவர்க்குரிய) முறைமைப்படி, ஏவி - கட்டளையிட்டு,- (எ - று.) -'கண்பரப்பி' என மேற்கவியோடு தொடரும்.
பந்தர் - பந்தல்; இறுதிப்போலி. மெத்தை - மெத்தென்றிருப்பது. வாஸவன் - அஷ்டவசுக்களுக்குத் தலைவன்; அல்லது, எல்லாஐசுவரியமு முடையவன். பட்டவர்த்தனர், மகுடவர்த்தனர் - அரசர்களின் பகுப்புக்கள். ஒருகோடி கிராமம் ஆள்பவன் - மகுட வர்த்தனனென்றும், அவனுக்கு மேற்பட்டவன் - பட்டவர்த்தனனென்றுங் கூறுவர். கொல் - ஐயம். (163) 104.-கண்ணனைஎதிர்கொள்ளக்கூடாதென்று துரியோதனன் அரசர்க்குக் கட்டளையிடுதல். காவன்மன்னவர்முகங்கடோறுமிருகண்பரப்பியமர்கருதுவோ ரேவலின்கண்வருதூதனாமிடையனின்றுநம்மவையிலெய்தினால் ஓவலின்றியெதிர் சென்று கண்டுதொழுதுறவுகூரிலினியுங்களூர் தீவலஞ்செயவடர்ப்பனென்று நனிசீறினான் முறைமைமாறினான். |
(இ -ள்.) முறைமை மாறினான் - நீதிதவறினவனான துரியோதனன், - காவல் மன்னவர் முகங்கள்தோறும் இரு கண் பரப்பி - (இராச்சியத்தை) ஆளுதற்றொழிலையுடைய அரசர்களது முகங்களிலெல்லாந் தனது இரண்டு கண்களைப்பரவச்செய்து (அவர்களை நன்றாகப்பார்த்து), 'அமர் கருதுவோர் ஏவலின்கண் வருதூதன் ஆம் |