பக்கம் எண் :

178பாரதம்உத்தியோக பருவம்

107.-துரியோதனன், கண்ணன்தனது
அரண்மனையிலிறங்காமைக்குக் காரணம் வினாவுதல்.

முன்னகங்குடை கவித்தகாளமுகின்முன்னிருந்தபின் முகங்
                                          கொடா,
தென்னகந்தனையொழித்து நென்னலிடை யிந்தமா
                                    நகரிலெய்தியும்,
பொன்னகங்கொள் புயவிதுரனில்லிடைபுகுந்ததென்கொலிது
                                       புகலெனாப்,
பன்னகந்தனையுயர்த்தகோவுமுரைபகரமாலுமெதிர்பகருவான்.

     (இ -ள்.) முன் - முன்னே [இளமையில் இந்திரன் பெருமழை
பொழிவித்தபொழுதில் என்றபடி], நகம் - கோவர்த்தனமலையை குடை
கவித்த- குடையாக எடுத்துப்பிடித்த, காள முகில் - கரிய மேகத்தையொத்த
கண்ணபிரான், முன் இருந்தபின் - முன்னே வீற்றிருந்தபின்பு, பன்னகந்தனை
உயர்த்த கோவும் - பாம்புக்கொடியை உயர எடுத்த துரியோதனராசனும்,
முகம்கொடாது - லட்சியஞ் செய்யாமல், 'நென்னலிடை - நேற்றைப்
பொழுதிலே, இந்தமா நகரில் எய்தியும் - இந்தப் பெரியபட்டணத்தில் (நீ)
வந்து சேர்ந்தும், என்அகந்தனை ஒழித்து - எனது வீட்டிற்கு வருதலை
நீக்கி, பொன் அகம் கொள்புயம் விதுரன் இல்லிடை - பொன்னா
பரணங்களைத் தன்னிடத்தே கொண்டதோள்களையுடைய விதுரனது வீட்டில்,
புகுந்தது - (நீ) நுழைந்தது, என்கொல்- என்னகாரணத்தால்? இது புகல் -
இதற்கு விடைசொல்,' எனா - என்று,உரை பகர - வார்த்தை சொல்ல,-
மாலும் - கண்ணபிரானும், எதிர் பகருவான்- மறுமொழி கூறுபவனானான்;
(எ-று.) அதனை, மேலிரண்டு கவிகளிற்காண்க.

    'கவிழ்த்த' என்ற பாடத்துக்கு - பசுக்களும் கன்றுகளும் எட்டிப்
புல்மேயலாம்படி தலைகீழாக எடுத்துப்பிடித்த என்க; "மதுசூதனனெடுத்து
மறித்தமலை" "காம்பாகக் கொடுத்துக் கவிழ்த்த மலை" என்றார்
பெரியாழ்வாரும்.  என் அகம் என்றதில் துரியோதனனது அகங்கார
மமகாரங்கள் நன்கு விளங்கும்.  பொன் - கருவியாகுபெயர்.  இனி,
பொன்நகம்கொள் புயம் - பொன் மலையையொத்த தோளென்றும், பொன்
அகம் கொள்இல் - திருமகள் இடமாகக்கொண்ட வீடென்றும், பொன் நகம்
கொள் இல் -மேருமலையை யொத்த மாளிகை யென்றும் உரைக்க இடமுண்டு.
முகங்கொடாது ஒழித்து என இயைப்பினும் அமையும்.  'என் அகந்தனை
யொழித்து' என முதலில் துரியோதனன் வாக்கில் மேல் முடிவுக்கு ஏற்ப,
அமங்கலமான வார்த்தை வந்ததும் காண்க.                     (167)

108.-கண்ணபிரான் தான்துரியோதனனரண்மனையில்
எழுந்தருளாமைக்குக் காரணங் கூறுதல்.

என்னினின்னிலொருபேதமில்லை யிதுவென்னினின்னிலது
                                    வென்னினும்,
மின்னின்மின்னிலகுவிறனெடும்படைவிதுரன்வந்தெதிர்
                                   விளம்பினான்,
உன்னிலின்னமுளதொன்றுபஞ்சவருரைக்கவந்தவொருதூ
                                      தன்யான்,
நின்னிலின்னடிசிலுண்டு நின்னுடன்வெறுக்கவெண்ணுவது
                                       நீதியோ.