பக்கம் எண் :

180பாரதம்உத்தியோக பருவம்

தற்குரிய]மந்திரிகளாயிருந்து அரசாட்சியை (வேண்டுமென்று) கெடுத்தாலும்,
குரவர் நல்உரை மறுக்கினும் - பெரியோர்களது நல்ல உபதேசமொழிகளை
(க்கேட்டு ஒழுகாது) விலகி நடந்தாலும், பிறர்புரிந்த நன்றியது கொல்லினும் -
அயலார் செய்த உபகாரத்தை மறந்தாலும் ஒருவர் வாழ்மனையில் உண்டு
பின்னும் அவருடன் அழன்று பொர உன்னினும் - ஒருவர் வசிக்கின்ற
வீட்டிலே அவருணவைப் புசித்துப் பின்பு அவருடன் கோபித்துப்
போர்செய்யக் கருதினாலும், இவர்களே - இந்த நான்கு
அக்கிரமத்தொழில்களைச் செய்பவர்களே, இரவி உள் அளவும் மதியம் உள்
அளவும் நரகில் எய்துவார் - சூரியனுள்ள வரையிலும் சந்திரனுள்ள
வரையிலும் நரகலோகத்திற் சேர்ந்து துன்பங்களை அனுபவிப்பார்கள்;
(எ - று.)

    துரியோதனன்வீட்டில் தான் இறங்காமைக்கு ஏற்ற காரணங்கூறுதற்கு,
'ஒருவர்வாழ்மனையிலுண்டு பின்னுமவருடனழன்று பொரவுன்னின்'
என்றதுமாத்திரமே போதுமாயினும், மற்ற மூன்று கொடுவினைகளையும்
முன்னேஇனமாக உடனெடுத்துக்கூறியது - நீயும் சகுனிமுதலிய உன்னைச்
சேர்ந்தவர்களுமே இப்படிப்பட்ட பெரும்பாவங்களைச் செய்து பயில்பவர்;
நான்அப்படிப்பட்டவனல்லன் என அவனுக்கு உரைக்கும்படி
சுட்டிக்காட்டுதற்பொருட்டென்க.  குரவர் - தந்தை, (தாய்), தமையன்,
வம்சகுரு,உபாத்தியாயன், அரசன் என இவர்.  நல்உரை -
இம்மைமறுமைகளுக்குநன்மையை விளைக்கும் வார்த்தை.  மறுக்கத்தக்க தீய
உரையை அவர்கூறாரென்றற்கு, 'நல்லுரை' எனப்பட்டது.  பிறர்புரிந்த
நன்றியது கொல்லினும் -ஒருவர் ஒருவர்க்குசெய்யும் உபகாரத்தைக்
கெடுத்தாலும், என்று பொருள்கொள்ளலாம்.  "எந்நன்றிகொன்றார்க்கு
முய்வுண்டா முய்வில்லை, செய்ந்நன்றிகொன்ற மகற்கு" என்பது இதற்கு
மேற்கோளாம்.  உன் அமைச்சர்கள் உனக்குஇதங்கூறாது உனது அரசை
யழிப்பவரென்றும், நீ பீஷ்மர் துரோணர் கிருபர்விதுரர் முதலிய பெரியோரது
உறுதிமொழிகளைக் கேளாது மறுப்பவனென்றும்,சித்திரசேனன் கட்டினது
முதலானகாலத்தில் பாண்டவர் செய்த உபகாரத்தை நீமறப்பவனென்றும்,
பீஷ்மர்முதலியவர் உன் கட்டளைப்படி நடப்பது உனதுவார்த்தை
சரியென்கிறகாரணத்தாலன்று, சோற்றுக்கடன் கழிக்கவேண்டுமென்கிற
கருத்தினாலேயே யென்றும் குறிப்பாக உணர்த்தினபடியாம். 
இரவியுள்ளளவும்மதிய முள்ளளவும் - உலகமழியுமளவும்.  ஆழ்வயிற்றடக்கி
என்றும் மீட்டுஉமிழ்கலாத எரிவாய் வெம்மைகூர் நரகில் அழுந்துவர் என்க.
மற்றைத்தீவினைசெய்தவர் நரகமடைந்தாலும், அவர்களுக்கு மீளுதற்கு உரிய
எல்லையொன்று உண்டு; இவர்களுக்கோ அது இல்லை; நரகலோக மழிந்தால்
உண்டு என்பது, 'இவர்களே நரகிலெய்துவார்' என்ற பிரிநிலை ஏகாரத்தால்
விளங்கும்.                                                (169)

110.-'நீ வந்த காரியம்யாது?' என்று கண்ணனைத்
துரியோதனன் வினாவுதல்.

சீதநாண்மலர்மடந்தைகேள்வனிவை செப்பவுந்
                                   தெரியவொப்பிலா,
நாதநாயகன் முகத்தில் வைத்தவிரு நயனனாகிமிக நகை