(இ -ள்.) செகத்தினில் - நிலவுலகத்திலே, கோது இலாத, குற்றமில்லாத, குரு குலம் - குரு அரசனது மரபிலே பிறந்த, மகீப - அரசனே!- நின் துணைவர் - உனது உடன் பிறந்தவரான பாண்டவர்கள், சூதினால் - சூதாட்டத்தால், அரசு இழந்து - இராச்சியத்தைக் கைவிட்டு, சொன்ன சொல்லும் வழுவாது - (அப்பொழுது நீங்கள்) சொன்ன வார்த்தையையுந் தவறாமல், ஏதிலார்கள் என - யாதொரு சம்பந்தமுமில்லாத அயலார் போல, போய் - புறப்பட்டுச்சென்று, நொந்து - வருந்தி, தண் நிழல் இலாத கானினிடைஎய்தியும் - குளிர்ந்த நிழலில்லாத காட்டில் சேர்ந்தும், தீது இலாவகை -குற்றமில்லாதபடி, குறித்த பல நாள் - முன்னே குறிப்பிட்ட அநேக நாட்களை,கழித்து வந்தனர் - தொலைத்து வந்தார்கள்; (ஆதலால் இப்பொழுது நீ), அவர்உரிமை - அவர்களுக்கு உரிய இராச்சியபாகத்தை, நண்பொடு -சிநேகத்துடனே, கொடுத்தி - கொடுப்பாய்; துணைவர் - பிராதாக்கள். தீதிலாவகை என்றதில், அஜ்ஞாதவாசம் அடக்கப்பட்டது; அதில் யாவராயினும் இவரை இன்னாரென்று காண்பாராயின், அது மீண்டும் வனவாசம் முதலியன செய்தற்கேற்ற தீதாம். 'ஆண்டு பல' என்னாது 'நாள் பல' என்றதற்குக் காரணம், முன் கூறப்பட்டது. குருகுலத்துக்குக்கோ தின்மை - உடன்பிறந்தவர்களோடு பகையாடாமை முதலியன. (171) 112. | சொல்லவாவுரகதுவசநின்னுரியதுணைவர்தங்களையழைத்துநீ, வல்லவாறுசிலநாடளித்தவர்கடம்முடன் கெழுமிவாழ்தியேல், நல்லவாய்மை நிலையுடையையென்றரசர்நாடொறும்புகழ்வர் நண்புகொண், டல்லவாமெனமறுத்தியேலறமு மாண்மையும் புகழுமல்லவே. |
(இ -ள்.) சொல் - புகழ்ச்சொல்லை, அவாவு - விரும்புந்தன்மை யுள்ள, உரக துவச - பாம்புக் கொடியோனே!-நீ-, நின் உரிய துணைவர் தங்களை அழைத்து - உனது அன்புக்கு உரிய உடன் பிறந்தவர்களான பாண்டவர்களை வரவழைத்து, வல்ல ஆறு சில நாடு அளித்து - கூடினபடி சில நாடுகளை (அவர்களுக்கு) க்கொடுத்து, அவர்கள் தம்முடன் கெழுமி - அவர்களோடு கலந்து ஒருமித்து, வாழ்திஏல் - வாழ்வாயானால், (உன்னை), நல்ல வாய்மை நிலை உடையை என்று - சிறந்த சத்திய வுறுதியை யுடையாயென்று சொல்லி, அரசர் நண்புகொண்டு நாள்தொறும் புகழ்வர் - எல்லாவரசரும் (உன்னிடத்து) அன்புவைத்துத் தினந்தோறுந் துதிப்பார்கள்; அல்ல ஆம் என மறுத்தி ஏல் - (இங்ஙனம் அழைத்தல் கொடுத்தல் கெழுமுதல் வாழ்தல் முதலியன) தகுதியல்லாதனவாகுமென்று கருதி (அரசு கொடாது) மறுப்பாயானால், (அங்ஙனம் மறுத்தல்), அறமும் ஆண்மையும் புகழும் அல்ல - தருமமும் ஆண்மைக்குணமும் புகழும் ஆகா; (எ - று.) அல்லவெனப் பன்மைவினைமுற்றுக் கொடுத்தது - ஒருமைப் பன்மை மயக்கம். அல்லவாமென என்பதில், ஆம் - அசையென்றுங் |