கொள்ளலாம். வல்லவாறு - நீதிக்கு உரியபடி; அல்லது, உனக்கு விருப்பமானபடியென்றவாறு. நண்பு கொண்டு என்பதை, வாழ்தியென்ப தனோடுங் கூட்டலாம். உரிய - அரசுக்கு உரிய சுதந்திரமுள்ள எனலுமாம். முன் வாக்கியத்தில் அறமும் புகழும் ஆண்மையுமாம் என்பதும், பின் வாக்கியத்தில் - புகழார் என்பதும் எதிர்மறைவகையால் தாமே ஏற்படும். (172) 113.-இதுவும், அடுத்தகவியும்- துரியோதனன் வார்த்தை: 'பாண்டவர்க்குப் பாகங்கொடேன்' என்று கூறுதல். என்றுகேசவனியம்பவங்கெதிரிராசராசனுமியம்புவான் அன்றுசூதுபொருதுரிமையாவையுமிழந்துபோயினர்களைவரும் இன்றுநீவிரகின்மீளவுங்கவரவெண்ணினானவரிலெளியனோ சென்றுகானிலவரின்னமுந்திரிவதுறுதியென்றுநனிசீறியே. |
(இ -ள்.) என்று-, கேசவன் - கண்ணன், இயம்ப - சொல்ல, அங்கு எதிர் - அவ்வார்த்தைக்கு எதிராக, இராசராசனும் - துரியோதனனும், இயம்புவான் - சொல்லுபவனாய்,- 'ஐவரும் - பஞ்சபாண்டவர்கள், அன்று - அக்காலத்தில், சூதுபொருது - சூதாட்டமாடி, (அதில் தோற்று), உரிமையாவையும் இழந்துபோயினர்கள் - (தங்களுக்கு) உரிய பொருள்களையெல்லாம் கைவிட்டுச் சென்றார்கள்: இன்று - இப்பொழுது, நீ -, விரகின் - தந்திரமாக, மீளவும் - மறுபடி, கவர - (அப்பொருள்களை என்னிடத்தினின்று) பறிக்க, எண்ணின் - நினைத்தால், நான் அவரில் எளியனோ - நான் அவர்களைக் காட்டிலும் (வலிமை முதலியவற்றிற்) குறைந்தவனோ? அவர் - அப்பாண்டவர், இன்னமும் - இனிமேலும், கானில் சென்று - காட்டிற்போய், திரிவது - அலைய வேண்டுவதே, உறுதி - (அவர்களுக்கு) நன்மை தருவதாம்', என்று - என்று சொல்லி, நனி சீறி - மிகக்கோபித்து,- (எ - று.) - 'கழற' என மேல் 115 - ஆங் கவியோடு குளகமாகத் தொடரும். அங்கு- அப்பொழுது என்றும், அவ்விடத்தில் என்றும், அவரில் எளியனோ - அவர்கள்போல எளிதிற் கவர்ந்துகொள்ளத் தக்கவனோ? என்றும் உரைப்பாரும், நனி சீறி என்று இயம்புவான் என இயைத்து முடிப்பாரும் உளர். இரண்டாம் அடியில் நன்று எனப் பிரித்தல் மோனைத் தொடைக்குப் பொருந்தாது. (173) 114. | நீவெறுக்கிலெ னிருந்த மன்னவர் திகைக்கிலென் பல நினைக்கிலென், போய்நகைக்கி லெனுரைத்தவுண்மைமொழிபொய்த்த தென்றமரர்புகலிலென், வேய்மலர்த் தொடையலைவரென்னுடன்மிகைத்துவெஞ்சமர் விளைக்கிலென், ஈயிருக்குமிடமெனினு மிப்புவியில்யானவர்க்கரசினிக் கொடேன். |
(இ -ள்.) நீ வெறுக்கில் என் - நீ (என்னை) வெறுத்தாலென்ன? இருந்த மன்னவர் திகைக்கில் என் - இங்கிருந்த அரசர்கள் (இது என்னவென்று) பிரமித்தாலென்ன? பல நினைக்கில் என் - (நீயும் |